மேரி தார்ப்

புவியியலாளர், வரைபடவியலாளர்

மேரி தார்ப் (Marie Tharp) (சூலை 30, 1920 - ஆகத்து 23, 2006) ஒரு அமெரிக்கப் புவியியலாளரும், கடல்சார் நிலப்படவரைவியலாளரும் ஆவார். இவர் புரூசு கீசனுடன் இணைந்து, அட்லாண்டிக் பெருங்கடல் தளத்தின் முதல் அறிவியல் வரைபடத்தை உருவாக்கினார். தார்ப்பின் பணியானது கடலின் அடிப்பகுதியின் விரிவான நிலப்பரப்பு மற்றும் பல பரிமாண புவியியல் நிலப்பரப்பை வெளிப்படுத்தியது.[1] மத்திய-அட்லாண்டிக் வரம்பு மற்றும் அதன் அச்சில் பிளவு பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தது, பூமி அறிவியலில் ஒரு கருத்தோட்டப் பெயர்வை ஏற்படுத்தியது, இது தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு மற்றும் கண்டப்பெயர்ச்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது..[2][3][4]

மேரி தார்ப்
பிறப்பு(1920-07-30)சூலை 30, 1920
இப்சிலாண்டி, மிக்சிகன்
இறப்புஆகத்து 23, 2006(2006-08-23) (அகவை 86)
நயாக், நியூயார்க்கு
குடியுரிமைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
துறைநிலவியல், கடலியல்
பணியிடங்கள்இலாமண்ட்-தோரதி புவியியல் ஆய்வகம் கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஒகையோ பல்கலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
துல்சா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகடலோர நிலப்பரப்பு
புரூசு கீசனும் இவரும் தயாரித்த வரைபடம்
இவருவரும் உருவாக்கிய கையெழுத்துப் பிரதி வரைபடம், கடலின் அடிப்பகுதியைப் பற்றிய புரிதலின் ஆரம்ப வளர்ச்சியை சித்தரிக்கிறது (1957)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மேரி தார்ப் சூலை 30, 1920 இல் மிச்சிகனில் உள்ள இப்சிலாந்தியில் ஒரு ஜெர்மன் மற்றும் லத்தீன் ஆசிரியரான பெர்தா லூயிசு தார்ப் மற்றும் அமெரிக்க விவசாயத் துறையின் மண் ஆய்வாளரான வில்லியம் எட்கர் தார்ப் ஆகியோரின் ஒரே மகளாக பிறந்தார்.[5] இவர் அடிக்கடி தன் தந்தையுடன் அவரது வயல் வேலைகளில் உடன் சென்றார். அது இவருக்கு வரைபடத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப அறிமுகத்தை அளித்தது. இருந்தபோதிலும், அந்த நேரத்தில் இது ஆண்களின் வேலை என்று புரிந்து கொள்ளப்பட்டதால், களப்பணியில் ஒரு தொழிலைத் தொடர இவருக்கு விருப்பமில்லை.

வில்லியம் தார்ப்பின் பணியின் தன்மை காரணமாக, அவர் 1931 இல் ஓய்வு பெறும் வரை குடும்பம் தொடர்ந்து நகர்ந்தது. அந்த நேரத்தில் மேரி அலபாமா, அயோவா, மிச்சிகன் மற்றும் இண்டியானாவில் உள்ள பல பொதுப் பள்ளிகளில் பயின்றார். இது இவருக்கு பிறருடனான நட்பை ஏற்படுத்த கடினமாக இருந்தது.[5] மேரிக்கு அறிமுகமான நெருங்கிய பெண் தோழியாக இருந்த இவரது தாயார் இவரது 15 வயதில் இறந்து போனார்.[6] அலபாமாவின் புளோரன்சில் ஒரு பள்ளியில் ஒரு ஆண்டு முழுவதும் இவர் பயின்றார். அங்கு, இவர் தற்போதைய அறிவியல் என்ற வகுப்பில் கலந்து கொண்டார். அதில் இவர் சமகால விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் ஆராய்ச்சி திட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டார். கூடுதலாக, மரங்கள் மற்றும் பாறைகளைப் படிக்க வார இறுதிகளில் பள்ளிக் களப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார். [6]

கல்வி

தொகு

இவரது தந்தையின் ஓய்வுக்குப் பிறகு குடும்பத்தினர் ஓகையோவின் பெல்லெபோன்டைனில் உள்ள ஒரு பண்ணைக்கு குடிபெயர்ந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, மேரி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். [1] ஆசிரியையான தனது தாயின் தாக்கத்தால், தானும் ஒரு ஆசிரியராகத் திட்டமிட்டார். 1936 இல் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு உதவ பண்ணையில் தங்கியிருந்த மேரி, பின்னர் கல்லூரியில் மெட்ரிகுலேசன் படித்தார்.[7] தான் விரும்புவது மட்டுமல்லாமல், தனக்கு தொழில் மற்றும் நிதிப் பாதுகாப்பையும் அளிக்கும் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கும்படி இவருடைய தந்தையின் ஆலோசனையின் பேரில், தார்ப் 1943 இல் ஓகையோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்குப் பிறகு, பல இளைஞர்கள் ஆயுதப்படைகளில் சேர பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப் போரின் போது, பெட்ரோலியம் புவியியல் போன்ற தொழில்களில் அதிகமான பெண்கள் சேர்க்கப்பட்டனர். பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே இந்த அனுமதி இருந்தது. அந்த நேரத்தில் அனைத்து புவி அறிவியல் முனைவர் பட்டங்களிலும் 4% க்கும் குறைவானவர்கள் பெண்கள் அனுமதி பெற்றனர்.[8] ஓகையோவில் புவியியல் வகுப்பை முடித்த பிறகு, ஏன் ஆர்பரின் பெட்ரோலியம் புவியியல் திட்டத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தார்ப் பணியமர்த்தப்பட்டார். அங்கு இவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.[9]

தொழில்

தொகு

1948 வாக்கில், தார்ப் துல்சாவில் நான்கு ஆண்டுகள் கழித்தார். அங்கிருந்து மேலும் தனது அடுத்த தொழில் நடவடிக்கையைத் தொடர நியூயார்க் நகரத்திற்குச் சென்றார் . ஆரம்பத்தில் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தார். ஆனால் தொல்லுயிரியல் ஆராய்ச்சிக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிந்த பிறகு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர முயற்சித்தார்.[10] இலாமண்ட் புவியியல் ஆய்வகத்தின் (இப்போது இலாமண்ட்-தோகெர்டி புவியியல் ஆய்வகம் ) நிறுவனர் மாரிசு எவிங்குடன் தொழில்நுட்ப வரைவு வேலைகளைக் கண்டறிந்தார்.[11] இலாமண்ட் புவியியல் ஆய்வகத்தில் பணிபுரிந்த முதல் பெண்களில் இவரும் ஒருவர்.

அங்கு இவர் புரூசு கீசனுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது கீழே விழுந்த இராணுவ விமானங்களைக் கண்டறிய புகைப்படத் தரவைப் பயன்படுத்தினர்.[12] இறுதியில் இவர் கீசனுக்காக பிரத்தியேகமாக பணிபுரிந்து கடல் தளத்தை திட்டமிட்டார்.[10] தார்ப் 1952 முதல் 1968 வரை முழு நேரப் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். மற்றும் தொடர்ந்து பதவி உயர்வு பெற்றார். இந்த நேரத்தில் பனிப்போர் காரணமாக, சோவியத் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவற்றைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், அமெரிக்க அரசாங்கம் கடலோர வரைபடங்களை வெளியிடுவதைத் தடை செய்தது.

இவர்களின் ஒத்துழைப்பின் முதல் 18 ஆண்டுகளுக்கு, கீசன் ஆய்வுக் கப்பலான வேமாவில் ஆழ்கடல் அளவியல் தரவைச் சேகரித்தார். பின்னர் ஆராய்ச்சிக் கப்பலான அட்லாண்டிசிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளையும், கடலுக்கடியில் நிலநடுக்கமானி மூலம் நிலநடுக்கங்களிலின் தரவுகளையும் இவர் சுயாதீனமாகப் பயன்படுத்தினார். கீசனுடனான இவரது பணி முழு கடல் தளத்தையும் வரைபடமாக்குவதற்கான முதல் முறையான முயற்சியை குறிக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அட்லாண்டிக்கில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களால் தோராயமாக கோடிட்டுக் காட்டப்பட்டது. மேரி தார்ப் நடு அட்லாண்டிக் வரம்பின் மிகத் துல்லியமான வரைகலைப் பிரதிநிதித்துவங்களில் பிளவு பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். அவை எதிரொலிமுறைத் தூரமறிதல் மூலம் பெறப்பட்ட புதிய அளவீட்டுத் தரவை அடிப்படையாகக் கொண்டவை. இதை புரூசு கீசனை நம்பவைக்க இவருக்கு ஒரு வருடம் ஆனது. பின்னர் மற்ற நடுக்கடல் முகடுகளையும் வரைபடமாக்கினார்.[13][14]

கண்டப்பெயர்ச்சி

தொகு

1950 களின் முற்பகுதியில், விஞ்ஞானிகள் கடல் தளத்தின் கட்டமைப்பைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருந்தனர். நிலத்தில் புவியியல் படிப்பது மலிவானது மற்றும் எளிதானது என்றாலும், கடற்பரப்பின் அமைப்பு மற்றும் பரிணாமம் பற்றிய அறிவு இல்லாமல் பூமியின் ஒட்டுமொத்த அமைப்பைப் புரிந்து கொள்ள முடியாது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1948 இல், இவர் டேவிட் பிளனகன் என்பவரை மணந்து அவருடன் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார். இவர்கள் 1952 இல் விவாகரத்து பெற்றனர். [15]

ஓய்வும் இறப்பும்

தொகு

கீசனின் மரணத்திற்குப் பிறகு, தார்ப் 1983 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியப் பணியில் தொடர்ந்து பணியாற்றி வந்த இவர் பிறகு தனது ஓய்வு காலத்தில் சவுத் நயாக்கில் வரைபடம்-விநியோகத் தொழிலை நடத்தினார். [16] தார்ப் 1995 இல் அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தின் வரைபடம் மற்றும் புவியியல் பிரிவுக்கு தனது வரைபட சேகரிப்பு மற்றும் குறிப்புகளை நன்கொடையாக வழங்கினார் [17] 1997 ஆம் ஆண்டில், தார்ப் காங்கிரசின் நூலகத்தில் இருந்து இரட்டை மரியாதைகளைப் பெற்றார். இது இவரை 20 ஆம் நூற்றாண்டின் நான்கு சிறந்த வரைபடக் கலைஞர்களில் ஒருவராக பெயரிட்டது. மேலும், அதன் புவியியல் மற்றும் வரைபடப் பிரிவின் 100 வது ஆண்டு விழாவில் ஒரு கண்காட்சியில் இவரது படைப்புகளைச் சேர்த்தது. 2001 ஆம் ஆண்டில், கடல்சார்வியலின் முன்னோடியாக இவரது வாழ்க்கைப் பணிக்காக தார்ப் தனது சொந்த நிறுவனத்தில் முதல் வருடாந்திர இலாமண்ட்-தோகெர்தி எரிடேஜ் விருதைப் பெற்றார். [2] ஆகத்து 23, 2006 அன்று நியூயார்க்கில் உள்ள நயாக்கில் தனது 86வது வயதில் புற்றுநோயால் இறந்தார்

அங்கீகாரம்

தொகு

1997-இல் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் இவரை 20 ஆம் நூற்றாண்டின் நான்கு சிறந்த வரைபடக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்தது.[18] மேரி தார்ப் இலாமண்ட் ஆராய்ச்சிப் பேராசிரியர் பதவி இவரது நினைவாக உருவாக்கப்பட்டது. [19]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Marie Tharp | Encyclopedia.com". www.encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  2. 2.0 2.1 Lamont–Doherty Earth Observatory Bestows Heritage Award on Marie Tharp, Pioneer of Modern Oceanography, Published Jul 10, 2001, Retrieved Oct 12, 2014
  3. Erin Blakemore: Seeing Is Believing: How Marie Tharp Changed Geology Forever. In: Smithsonian Magazine, 30. August 2016.
  4. Earth Institute: Marie Tharp’s Adventures in Mapping the Seafloor, In Her Own Words. Columbia Climate School, 24. Juli 2020.
  5. 5.0 5.1 Higgs, Bettie Matheson (2020-07-13). "Understanding the Earth: the contribution of Marie Tharp" (in en). Geological Society, London, Special Publications 506: SP506–2019–248. doi:10.1144/SP506-2019-248. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-8719. http://sp.lyellcollection.org/lookup/doi/10.1144/SP506-2019-248. 
  6. 6.0 6.1 Felt, Hali (June 2017). "Marie Tharp - Plate Tectonics Pioneer" (PDF). Geological Society of America.
  7. "Marie Tharp - Ages of Exploration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  8. Blakemore, Erin (2016-08-30). "Seeing Is Believing: How Marie Tharp Changed Geology Forever" (in en). Smithsonian. https://www.smithsonianmag.com/history/seeing-believing-how-marie-tharp-changed-geology-forever-180960192/. 
  9. Barton, Cathy (2002). "Marie Tharp, oceanographic cartographer, and her contributions to the revolution in the Earth sciences". Geological Society, London, Special Publications 192 (1): 215–228. doi:10.1144/gsl.sp.2002.192.01.11. Bibcode: 2002GSLSP.192..215B. 
  10. 10.0 10.1 Tharp, Marie (2006-12-12). "Marie Tharp biography". Woods Hole Oceanographic Institution. Archived from the original on 2007-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  11. A Student's Guide to Earth Science, Volume 2. Greenwood Publishing Group. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 031332901X.
  12. Evans, R. (November 2002). "Plumbing Depths to Reach New Heights". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  13. Betsy Mason: Marie Tharp's groundbreaking maps brought the seafloor to the world. In: [Science News], 13 January 2021.
  14. Sabine Höhler: A Sound Survey: The Technological Perception of Ocean Depth, 1850-1930. In: Transforming Spaces. The Topological Turn in Technology Studies.
  15. Felt, Hali (2012). Soundings: The Story of the Remarkable Woman Who Mapped The Ocean Floor. Henry Holt.
  16. "PennState - College of Earth and Mineral Sciences - Marie Tharp". Archived from the original on 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  17. "Primary Sources in Science Classrooms: Mapping the Ocean Floor, Marie Tharp, and Making Arguments from Evidence (Part 1) | Teaching with the Library of Congress". blogs.loc.gov. 2015-10-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-29.
  18. "Join Us in Celebrating #MarieTharp100". State of the Planet (in ஆங்கிலம்). 2020-07-23. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
  19. "Lamont's Marie Tharp: She Drew the Maps That Shook the World". State of the Planet (in ஆங்கிலம்). 2020-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_தார்ப்&oldid=4110741" இலிருந்து மீள்விக்கப்பட்டது