புரோஜென் தாசு

புரோஜென் தாசு (Brojen Das) (9 திசம்பர் 1927 - 1 சூன் 1998) இவர் ஓர் வங்காளதேச நீச்சல் வீரர் ஆவார். இவர் ஆங்கிலக் கால்வாயின் குறுக்கே நீந்திய முதல் ஆசியர் ஆவார். மேலும் ஆறு முறை கால்வாயைக் கடந்த முதல் நபருமாவாவார். [2]

புரோஜென் தாசு
பிறப்பு(1927-12-09)9 திசம்பர் 1927
குச்சியாமோரா, பிக்ராம்பூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது முன்சிகஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்)
இறப்பு1 சூன் 1998(1998-06-01) (அகவை 70)
கொல்கத்தா, இந்தியா
தேசியம்வங்கதேசத்தவர்
கல்விபிஏ
படித்த கல்வி நிறுவனங்கள்கே.எல். ஜூபிலி உயர்நிலைப் பள்ளி
வித்யாசாகர் கல்ல்லூரி[1]
பணிமெய்வல்லுநர்
விருதுகள்சுதந்திர தின விருது (1999)

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

தொகு
 
ஆங்கிலக் கால்வாயை 5 வது முறை கடந்தபோது புரோஜென்

புரோஜென் வங்காளதேசத்தின் பிக்ராம்பூரில் உள்ள குச்சியாமோரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அரேந்திர குமார் தாசு என்பவராவார். [3] கே.எல். ஜூபிலி உயர்நிலைப் பள்ளியில் இருந்து 1946 இல் தனது மெட்ரிகுலேசன் தேர்வை முடித்தார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் கலை இளங்கலைப் பட்டம் பெற்றார்.

நீச்சல்

தொகு
 
புரோஜென் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பிறகு ராணி எலிசபெத்தை சந்தித்தார் (1961)

சிறுவயதில் இருந்தே புரோஜென் புரிகங்கா ஆற்றில் நீச்சல் பயிற்சியினை மேற்கொண்டு வந்தார். இவரது சொந்த முயற்சியினால், கிழக்கு பாக்கித்தானின் விளையாட்டு கூட்டமைப்பு 1953 இல் டாக்காவில் ஆண்டு நீச்சல் போட்டியை அறிமுகப்படுத்தியது. 1958 இல் நடந்த ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்க இவர் அழைக்கப்பட்டார். இவரது பயிற்சியின் ஒரு பகுதியாக சிதலக்சய ஆற்றிலும், கீழ் மேக்னா ஆற்றிலும் நாராயணகஞ்சில் தொடங்கி சந்திரபூர் வரை 46 மைல் தூரத்தை நீந்தினார். . [3] போட்டிக்கு முன்பு, இவர் மத்தியதரைக் கடலில் காப்ரி முதல் நபொலி வரை நீந்தினார்.

ஆகத்து 18, 1958 அன்று நள்ளிரவில், இவர் 23 நாடுகளைச் சேர்ந்த மற்ற போட்டியாளர்களுடன் ஆங்கிலக் கணவாயைக் கடக்க நீந்தத் தொடங்கி, மறுநாள் நண்பகலுக்குப் பிறகு போட்டியை முடித்தார்.

இவர் 1958 முதல் 1961 வரை மொத்தம் 6 முறை ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளார்.

விருதுகள்

தொகு
 
இலெட்டோனா கோப்பையைப் பெறும் புரோஜென் தாசு, 1986
  • 1956: டாக்கா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட விருது
  • 1960: பாக்கித்தான் அரசாங்கத்தால் பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் விருது. [4]
  • 1965: சர்வதேச மராத்தான் நீச்சல் விருது
  • 1986: இலெட்டோனா கோப்பை, அதாவது ஐக்கிய இராச்சியத்தின் கால்வாய் நீச்சல் சங்கத்திலிருந்து "கால்வாயின் அரசன்" என்ற விருது [5]
  • 1976: தேசிய விளையாட்டு விருது, வங்காளதேசம்
  • அதிஷ் தீபங்கர் பதக்கம்
  • காசி மகாபபுல்லா அறக்கட்டளை மற்றும் ஜகனாரா ஜன கல்யாண அறக்கட்டளை தங்கப்பதக்கம்
  • 1999: சுதந்திர தின விருது, வங்காளதேசம் (மரணத்திற்குப் பின்)

இறப்பு

தொகு

இவருக்கு சூன் 1997 இல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. [6] இவர் சிகிச்சைக்காக இந்தியாவின் கொல்கத்தாவுக்குச் சென்று, சூன் 1, 1998 இல் இறந்தார். இவரது இறுதிச் சடங்குகள் 3 சூன் 1998 அன்று டாக்காவில் உள்ள போஸ்டகோலா தகன இடத்தில் நடைபெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Rahman, S M Mahfuzur (2012). "Das, Brojen". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. "The first Asian swimmer crosses the English Channel in 1958". Bangladesh Post. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  3. 3.0 3.1 "Website of Brojen Das, maintained by his family". பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  4. Pakistan Sports Board பரணிடப்பட்டது 2020-05-03 at the வந்தவழி இயந்திரம் Awards: Swimming Retrieved 5 July 2010
  5. Kings of the Channel, Letona Trophy, Channel Swimming Association.
  6. "His Fight Against Cancer". பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோஜென்_தாசு&oldid=3254639" இலிருந்து மீள்விக்கப்பட்டது