புரோடாக்டினியம்(IV) குளோரைடு

வேதிச் சேர்மம்

புரோடாக்டினியம்(IV) குளோரைடு (Protactinium(IV) chloride) என்பது PaCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் குளோரைடும் சேர்ந்து இந்த ஆக்டினியம் ஆலைடு உருவாகிறது. நாற்கோண படிக அமைப்பின் மஞ்சள்-பச்சை நிறப் படிகமாக புரோடாக்டினியம்(IV) குளோரைடு காணப்படுகிறது.

புரோடாக்டினியம்(IV) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோடாக்டினியம்(IV) குளோரைடு
இனங்காட்டிகள்
13867-41-9 Y
InChI
  • InChI=1S/4ClH.Pa/h4*1H;/q;;;;+4/p-4
    Key: YVRMMEYNJWFJEX-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Pa](Cl)(Cl)(Cl)Cl
பண்புகள்
PaCl4
வாய்ப்பாட்டு எடை 372.848 கி மோல்−1
தோற்றம் மஞ்சள் பச்சை
அடர்த்தி 4.72 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்[1],tI20
புறவெளித் தொகுதி I41/amd , No. 141
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Protactinium(IV) fluoride
புரோடாக்டினியம்(IV) புரோமைடு
Protactinium(IV) iodide
ஏனைய நேர் மின்அயனிகள் Uranium(IV) chloride
தோரியம்(IV) குளோரைடு
Praseodymium(III) chloride
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

புரோடாக்டினியம்(V) குளோரைடை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி புரோடாக்டினியம்(IV) குளோரைடை தயாரிக்கலாம்.[2]

 
 

புரோடாக்டினியம்(IV) ஆக்சைடை ஆலசனேற்ற வினைக்கு உட்படுத்தி குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்:[2]

 

வெற்றிடத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம் ஆக்சி குளோரைடை சிதைவு வினைக்கு உட்படுத்தியும் புரோடாக்டினியம்(IV) குளோரைடை தயாரிக்கலாம்:[3]

 

பண்புகள் தொகு

புரோடாக்டினியம்(IV) குளோரைடு நீருறிஞ்சும் படிகத் திடப்பொருளாகும். வெற்றிடத்தில் 400 °செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகும். வலுவான கனிம அமிலங்களில் கரைந்து பச்சை நிற கரைசல்களை உருவாக்கும். அசிட்டோ நைட்ரைலுடன் சேர்ந்து சிக்கலான PaCl4·4CH3CN அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. I41/am இடக்குழு எண். 141) என்ற இடக்குழுவில் a = 837.7 பைக்கோமீட்டர், c = 747.9 பைக்கோமீட்டர் என்ற அளவுருக்களுடன் யுரேனியம்(IV) குளோரைடு வகை படிகக் கட்டமைப்புடன் இச்சேர்மம் ஒரு நாற்கோணப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[2] of the uranium(IV) chloride type.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Brown D., Hall T.L., Moseley P.T (1973). "Structural parameters and unit cell dimensions for the tetragonal actinide tetrachlorides(Th, Pa, U, and Np) and tetrabromides (Th and Pa)". J. Chem. Soc., Dalton Trans. (6): 686–691. doi:10.1039/DT9730000686. 
  2. 2.0 2.1 2.2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, pp. 1176.
  3. Harry Julius Emeleus, A. G. Sharpe (1970), ADVANCES IN INORGANIC CHEMISTRY AND RADIOCHEMISTRY (in German), Academic Press, p. 15, ISBN 978-0-08057861-3{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  4. Lester R. Morss, Norman M. Edelstein, J. Fuger (Hrsg.): . Bände 1-6. Springer, Dordrecht 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0, S. 201 (English, [1] in Google Books).