புரோப்பைல் அசிட்டேட்டு

புரோப்பைல் அசிட்டேட்டு (Propyl acetate) என்பது C5H10O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். புரோப்பைல் எத்தேனோயேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. எசுத்தர் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் ஒரு கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற தெளிவான நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பேரிக்காயின் சுவைமணத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. இக்காரணத்தால் இதை நறுமணப்பொருளாகவும் நறுமண கூட்டுசேர்பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். அசிட்டிக் அமிலத்தை 1-புரோப்பேனாலுடன் சேர்த்து ஒடுக்கம் செய்யும் எசுத்தராக்கல் வினையால் புரோப்பைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் கந்தக அமிலத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தும் பிசர்-சிப்பெயர் எசுத்தராக்கல் வினை வழியாக இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் தண்ணீர் உடன்விளைபொருளாக விளைகிறது.

புரோப்பைல் அசிட்டேட்டு
Structural formula of propyl acetate
Ball-and-stick model of the propyl acetate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பைல் அசிட்டேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோப்பைல் எத்தேனோயேட்டு
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமில புரோப்பைல் எசுத்தர்
என்-புரோப்பைல் எத்தேனோயேட்டு
என்- புரோப்பைல் அசுட்டேட்டு
என்- அசிட்டிக் அமிலத்தின் புரோப்பைல் எசுத்தர்
இனங்காட்டிகள்
109-60-4 Y
ChEBI CHEBI:40116 N
ChEMBL ChEMBL44857 Y
ChemSpider 7706 Y
DrugBank DB01670 Y
InChI
  • InChI=1S/C5H10O2/c1-3-4-7-5(2)6/h3-4H2,1-2H3 Y
    Key: YKYONYBAUNKHLG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H10O2/c1-3-4-7-5(2)6/h3-4H2,1-2H3
    Key: YKYONYBAUNKHLG-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7997
  • O=C(OCCC)C
UNII 4AWM8C91G6 Y
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.13 g·mol−1
தோற்றம் தெளிவான, நிறமற்ற நீர்மம்
மணம் மிதமான, பழவாசனை[1]
அடர்த்தி 0.89 கி/செ.மீ3[2]
உருகுநிலை −95 °C (−139 °F; 178 K)[2]
கொதிநிலை 102 °C (216 °F; 375 K)[2]
18.9 கி/லி[2]
ஆவியமுக்கம் 25 மி.மீ பாதரசம் (20 °செல்சியசில்)[1]
−65.91•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீப்பற்றும் (F)
எரிச்சலூட்டும் (Xi)
R-சொற்றொடர்கள் R11, R36
S-சொற்றொடர்கள் (S2), S16, S26, S29,
S33
தீப்பற்றும் வெப்பநிலை 10 °C (50 °F; 283 K)[2]
Autoignition
temperature
450 °C (842 °F; 723 K)
வெடிபொருள் வரம்புகள் 1.7–8%[1]
Lethal dose or concentration (LD, LC):
9370 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
8300 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)
6640 மி.கி/கி.கி (வாய்வழி, முயல்)
8700 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[3]
17800 மி.கி/கி.கி (தோல், முயல்)[4]
8941 மில்லியனுக்குப் பகுதிகள் (பூனை, 5 hr)[5]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 200  மில்லியனுக்குப் பகுதிகள் (840 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 200  மில்லியனுக்குப் பகுதிகள் (840 மி.கி/மீ3) ST 250  மில்லியனுக்குப் பகுதிகள் (1050 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
1700 மில்லியனுக்குப் பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0532". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  3. "என்-புரோப்பைல் அசிட்டேட்டு". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Union Carbide Data Sheet. Vol. 1/25/1965
  5. "n-Propyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பைல்_அசிட்டேட்டு&oldid=4059482" இலிருந்து மீள்விக்கப்பட்டது