புரோமோபெண்டேன்

வேதிச் சேர்மங்களின் ஒரு குழு

புரோமோபெண்டேன்கள் (Bromopentanes) என்பவை C5H12–nBrn என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். வாய்ப்பாட்டிலுள்ள n = 1–12 என்பது புரோமின் அணுக்களின் எண்ணிக்கையாகும். புரோமோபெண்டேன்கள் என்பவை புரோமோ ஆல்க்கேன் வகை சேர்மங்களின் ஒரு குழுவாகும். இதில் பெண்டேன் மாற்றியன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள் புரோமின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். பொதுவாக இவை நிறமற்ற திரவங்களாக காணப்படுகின்றன.

மோனோபுரோமோபெண்டேன்கள்

தொகு

மோனோபுரோமோபெண்டேன்கள் என்பவை ஒரு புரோமின் அணுவைக் கொண்ட புரோமோபெண்டேன்கள் ஆகும், இவற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடு C5H11Br என எழுதப்படுகிறது.

இவ்வகையிக் மூன்று மாற்றியன்கள் இருக்கின்றன.

2-மெத்தில்பியூட்டேனை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் நான்கு மாற்றியன்கள் சாத்தியமாகின்றன.

  • 1-புரோமோ-2-மெத்தில்பியூட்டேன் (நாற்தொகுதி மையம்)
  • 1-புரோமோ-3-மெத்தில்பியூட்டேன்
  • 2-புரோமோ-2-மெத்தில்பியூட்டேன்
  • 2-புரோமோ-3-மெத்தில்பியூட்டேன் (நாற்தொகுதி மையம்)

2,2-இருமெத்தில்புரோப்பேன் ஒரே ஒரு மோனோபுரோமினேற்ற வழித்தோன்றலைக் கொண்டுள்ளது, அது 1-புரோமோ-2,2-இருமெத்தில்புரோபேன் ஆகும். இது நியோபெண்டைல் ​​புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. PubChem. "(2R)-2-bromopentane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  2. PubChem. "1-Bromo-2,2-dimethylpropane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோபெண்டேன்&oldid=4107152" இலிருந்து மீள்விக்கப்பட்டது