1-புரோமோபெண்டேன்

வேதிச் சேர்மம்

1-புரோமோபெண்டேன் (1-Bromopentane) என்பது C5H11Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அமைல் புரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. புரோமோ ஆல்க்கேன் சேர்மமான இது புரோமோபெண்டேனின் மாற்றியன் ஆகும். 1-புரோமோபெண்டேன் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. பியூகசு வெசிகுலோசசு என்ற கடற்பாசியில் இச்சேர்மம் இயற்கையாகவே காணப்படுகிறது.[1]

1-புரோமோபெண்டேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புரோமோபெண்டேன்
வேறு பெயர்கள்
  • அமைல் புரோமைடு
  • என்-அமைல் புரோமைடு
  • பெண்டைல் புரோமைடு
இனங்காட்டிகள்
110-53-2
ChEMBL ChEMBL155850
ChemSpider 7766
EC number 203-776-0
InChI
  • InChI=1S/C5H11Br/c1-2-3-4-5-6/h2-5H2,1H3
    Key: YZWKKMVJZFACSU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8057
  • CCCCCBr
UNII Z2S4R599P0
UN number 1993
பண்புகள்
C5H11Br
வாய்ப்பாட்டு எடை 151.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.22 கி·செ.மீ−3 (20 °C)
கொதிநிலை 129.8 °C (265.6 °F; 402.9 K)
ஆவியமுக்கம் 9.39 mmHg (25 °செல்சியசு)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பெரும்பாலான 1-புரோமோ ஆல்க்கேன்கள் ஐதரசன் புரோமைடை 1-ஆல்க்கீனுடன் இயங்குறுப்பாகச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது 1-புரோமோபெண்டேன் நிகழ்வில் 1-பெண்டீன் ஆகும். இந்த நிலைமைகள் 1-புரோமோ வழிப்பெறுதியைக் கொடுத்து, எதிர்-மார்கோவ்னிகோவ் விதி கூட்டுவினைக்கு வழிவகுக்கும்.[2]

1-பெண்டனாலுடன் ஐதரசன் புரோமைடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் 1-புரோமோபெண்டேனைத் தயாரிக்கலாம்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rutz, Adriano; Bisson, Jonathan; Allard, Pierre-Marie (2023). "The LOTUS Initiative for Open Natural Products Research: frozen dataset union wikidata (with metadata)" (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.5281/zenodo.7534071.
  2. Dagani, M. J.; Barda, H. J.; Benya, T. J.; Sanders, D. C. (2005), "Bromine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_405
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-புரோமோபெண்டேன்&oldid=4107136" இலிருந்து மீள்விக்கப்பட்டது