புரோமோபைருவிக் அமிலம்

பைருவிக் அமிலத்தை புரோமினேற்றம் செய்த வழிப்பெறுதி

புரோமோபைருவிக் அமிலம் (Bromopyruvic acid) என்பது BrCH2COCO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பைருவிக் அமிலத்தை புரோமினேற்றம் செய்த வழிப்பெறுதியாக இந்த நிறமற்ற திண்மம் தயாரிக்கப்படுகிறது. லாக்டிக் அமிலம், பைருவிக் அமிலம் ஆகியவற்றுடன் அமைப்பு ஒற்றுமை கொண்ட சேர்மமாகவும் கருதப்படுகிறது. வளர்சிதை மாற்ற நச்சாகவும் புற்றுநோய் எதிர்ப்பு முகவராகவும் ஆராயப்பட்டு வருகிறது[1] . பிற α-புரோமோகீட்டோன்களைப் போலவே இதுவும் ஒரு ஆல்கைலேற்றும் முகவராகும்.

புரோமோபைருவிக் அமிலம்
Skeletal formula of bromopyruvic acid
Ball-and-stick model of the bromopyruvic acid molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-புரோமோ-2-ஆக்சோபுரோப்பேனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
புரோமோபைருவேட்டு
3- புரோமோபைருவிக் அமிலம்
3- புரோமோபைருவேட்டு
3-Brபிஏ
3புபை
3-Br-பைர்
இனங்காட்டிகள்
1113-59-3 Y
ChEBI CHEBI:131461 N
ChEMBL ChEMBL177837 Y
ChemSpider 63850 Y
InChI
  • InChI=1S/C3H3BrO3/c4-1-2(5)3(6)7/h1H2,(H,6,7) Y
    Key: PRRZDZJYSJLDBS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H3BrO3/c4-1-2(5)3(6)7/h1H2,(H,6,7)
    Key: PRRZDZJYSJLDBS-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 70684
  • C(C(=O)C(=O)O)Br
  • BrCC(=O)C(=O)O
பண்புகள்
C3H3BrO3
வாய்ப்பாட்டு எடை 166.96 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 79 முதல் 82 °C (174 முதல் 180 °F; 352 முதல் 355 K) (நீரேற்று)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் S25 S36/37/39 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆய்வு

தொகு

பைருவேட்டு கடத்தும் அமைப்பு புரோமோபைருவேட்டை டிரைபேனாசோமல் செல்களுக்குள் செலுத்தப் பயன்படுகிறது. செல்லுக்குள் செலுத்தப்பட்ட புரோமோபைருவிக் அமிலத்தின் இலக்கு கிளைசெரால்டிகைடு-3-பாசுபேட்டு டியைதரசினேசு ஆகும். இது புரோமோபைருவேட்டால் எளிதில் தூண்டப்படக்கூடியதாகும்[2]. புற்று செல்களில் மிகைவெளிப்படுத்தலாக கருதப்பட்ட பைருவேட்டு கடத்தும் அமைப்பு பின்னர் மோனோ கார்பாக்சிலேட்டு கடத்தியாக அடையாளப்படுத்தப்பட்டது. இதை மோனோ கார்பாக்சிலேட்டு கடத்தி 1 என அழைத்தனர்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Peter L. Pedersen (2012). "3-Bromopyruvate (3BP) A Fast Acting, Promising, Powerful, Specific, and Effective “Small Molecule” Anti-Cancer Agent Taken from Labside to Bedside: Introduction to a Special Issue". J. Bioenerg. Biomembr. 44: 1–6. doi:10.1007/s10863-012-9425-4. 
  2. Barnard, JP; Reynafarje, B; Pedersen, PL (1993). "Glucose catabolism in African trypanosomes. Evidence that the terminal step is catalyzed by a pyruvate transporter capable of facilitating uptake of toxic analogs". The Journal of Biological Chemistry 268 (5): 3654–3661. பப்மெட்:8429041. 
  3. Liu, Zhe; Sun, Yiming; Hong, Haiyu; Zhao, Surong; Zou, Xue; Ma, Renqiang; Jiang, Chenchen; Wang, Zhiwei et al. (2015-08-15). "3-bromopyruvate enhanced daunorubicin-induced cytotoxicity involved in monocarboxylate transporter 1 in breast cancer cells". American Journal of Cancer Research 5 (9): 2673–2685. பன்னாட்டுத் தர தொடர் எண்:2156-6976. பப்மெட்:26609475. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோபைருவிக்_அமிலம்&oldid=2569558" இலிருந்து மீள்விக்கப்பட்டது