புரோமோ(குளோரோ)புளோரோ(அயோடோ) சிலேன்

வேதிச் சேர்மம்

புரோமோ(குளோரோ)புளோரோ(அயோடோ) சிலேன் (Bromo(chloro)fluoro(iodo)silane) என்பது BrClFISi என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] புரோமின், குளோரின், புளோரின், அயோடின், சிலிக்கான் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து இந்த கனிம வேதியியல் அணைவுச் சேர்மம் உருவாகிறது. இதுவொரு நாற்தொகுதி மைய மூலக்கூறாகும்.[3]

புரோமோ(குளோரோ)புளோரோ(அயோடோ) சிலேன்
Bromo(chloro)fluoro(iodo)silane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமோ-குளோரோ-புளோரோ-அயோடோசிலேன்
வேறு பெயர்கள்
புளோரோகுளோரோபுரோமோ அயோடோசிலேன், புரோமோகுளோரோபுளோரோ அயோடோசிலேன்
இனங்காட்டிகள்
34979-68-5 Y
ChemSpider 10328923
InChI
  • InChI=1S/BrClFISi/c1-5(2,3)4
    Key: PJYMBROHOATMNE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23235918
  • F[Si](Cl)(Br)I
பண்புகள்
BrClFISi
வாய்ப்பாட்டு எடை 289.34 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 2.558 கி/செ.மீ3[1]
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சிலிக்கானின் புளோரைடு குளோரைடு இருபுரோமைடு கலவையுடன் (SiFClBr2) டிரை அயோடோசிலேன் (SiHI3) சேர்மத்தைச் சேற்த்து 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீண்ட நேரம் சூடாக்குவதன் மூலம் புரோமோ(குளோரோ)புளோரோ(அயோடோ) சிலேனை தயாரிக்கலாம். இதன் பின் பகுதியளவு வடிகட்டுதல் மூலம் ஆலைடு கலவையைப் பிரித்தெடுக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

தொகு

புரோமோ(குளோரோ)புளோரோ(அயோடோ) சிலேன் ஒரு நிறமற்ற திடப்பொருளாகும். இது தண்ணீருடன் வினைபுரிகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "34979-68-5, bromo(chloro)fluoro(iodo)silane, CAS No 34979-68-5 bromo(chloro)fluoro(iodo)silane". chemnet.com. பார்க்கப்பட்ட நாள் 20 March 2024.
  2. Höfler, Friedrich; Veigl, Walter (December 1971). "Fluorochlorobromoiodosilane". Angewandte Chemie International Edition in English 10 (12): 919–920. doi:10.1002/anie.197109192. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.197109192. பார்த்த நாள்: 20 March 2024. 
  3. "(R)-bromo(chloro)fluoro(iodo)silane Molecular Weight - BrClFISi - Over 100 million chemical compounds | CCDDS". Mol-Instincts. பார்க்கப்பட்ட நாள் 20 March 2024.