புர்ரா மதுசூதன் யாதவ்

ஆந்திரப்பிரதேசத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி

புர்ரா மதுசூதன் யாதவ் (Burra Madhusudan Yadav)(பிறப்பு 15 மே 1972) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பொது ஒப்பந்ததாரரும் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கனிகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புர்ரா மதுசூதன் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்கத்ரி பாபு ராவ்
தொகுதிகனிகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மே 1972 (1972-05-15) (அகவை 51)
பிரகாசம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்3
வாழிடம்(s)கானிகிரி, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
வேலை
  • அரசியல்வாதி
  • ஒப்பந்தகாரர்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

யாதவ் 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிவபுரத்தில் புர்ரா சீனாபேரய்யா மற்றும் லக்ஷ்மம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இடைநிலைக் கல்வி வரை படித்தவர். இவருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கனிகிரியில் வசித்து வருகிறார்.[1] இவரது மகள் அம்ருதா பார்கவி, பெனமலூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கொலுசு பார்த்தசாரதியின் மகன் நிதின் கிருஷ்ணாவை மணந்தார்.[2]

அரசியல் தொகு

யாதவ் ஒரு பொது ஒப்பந்ததாரர். ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் எ. சா. ராஜ்சேகர் உத்வேகத்தால் அரசியலில் நுழைந்து, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் கனிகிரி தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சியின் கதிரி பாபு ராவிடம் தோல்வியடைந்தார்.[1][3]

பின்னர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியில் இணைந்த ராவ், 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், வாய்ப்பு யாதவுக்கு வழங்கப்பட்டது. ராவ் வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]

செப்டம்பர் 2021-ல், இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் நிர்வாகக் குழுவின் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். இவர் ஏப்ரல் முதல் நவம்பர் 2022 வரை ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரகாசம் மாவட்ட பிரிவின் தலைவராகச் செயல்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "ఎన్నికల బరిలో గెలుపు గుర్రాలు" [Winning horses in the election ring]. Sakshi (in தெலுங்கு). 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
  2. "Andhra CM Attends YSRCP MLA Parthasarathi's Son's Wedding". Sakshi (in ஆங்கிலம்). 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
  3. "Prakasam ministerial aspirants disappointed" (in en-IN). தி இந்து. 10 June 2014. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/prakasam-ministerial-aspirants-disappointed/article6101944.ece. 
  4. "Kanigiri: Jagan To Ditch Record Majority MLA?". mirchi9.com. 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
  5. "Andhra Pradesh: YSRCP replaces 8 district presidents". Telangana Today. 24 November 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்ரா_மதுசூதன்_யாதவ்&oldid=3741845" இலிருந்து மீள்விக்கப்பட்டது