புலியானூர்
புலியானூர் (Puliyanur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது புலியானூர் ஊராட்சிக்கு உட்பட்டது.
புலியானூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635307 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 349 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,370 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 698 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 672 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 48.10% ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களின் விகிதம் 52.53%, பெண்களின் விகிதம் 43.84% ஆகும்.[1]
வரலாற்று சின்னங்கள்
தொகுஇந்த ஊரில் உள்ள வேடியப்பன் வனத்தில் உள்ள வேடியப்பன் கோயில் பகுதியில் பல்லவர் ஆட்சிக் காலத்திய ஆறாம் நூற்றாண்டின் கல்வெட்டுகளுன் கூடிய மூன்று நடுகற்கள் உள்ளன. இவை நிறைகவரும்போது இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களாகும்.
இவை மீவெண் நாட்டின் சிறுபாழ் பகுதியை ஆட்சிபுரிந்த பாலாசிரியர் என்பானின் மகன்கள் வெ்வேறு காலங்களில் தொறு பூசல்களில் இறந்ததைக் குறிக்கின்றன.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Puliyanur Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். pp. 28–36.
{{cite book}}
: Check date values in:|year=
(help)