புலி, பிராமணன் மற்றும் நரி
புலி, பிராமணன் மற்றும் குள்ளநரி ஒரு நீண்ட வரலாறுடைய பிரபலமான இந்திய நாட்டுப்புறக் கதையாகும் . இக்கதை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்பப் பதிவு பஞ்சதந்திரத்தில் காணப்படுவதால் இக்கதையின் காலம் கிமு 200 மற்றும் கிபி 300 க்கு இடைப்பட்டதென அறியப்படுகிறது.
1868 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மேரி ஃப்ரீரே, அவரது பழைய டெக்கான் டேஸ், [1] என்ற இந்திய நாட்டுப்புறக் கதைகளின் முதல் ஆங்கிலத் தொகுப்பில் இக்கதையினைச் சேர்த்தார். [2] ஜோசப் ஜேக்கப்ஸின் இந்தியன் ஃபேரி டேல்ஸ் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
சதி
தொகுஒரு மனிதன் (பிராமணன்) கூண்டில் மாட்டிக்கொண்ட ஒரு புலியைக் கடந்து செல்கிறான். புலி, பிராமணனைச் சாப்பிடமாட்டேன் என்று உறுதியளித்து, தன்னை விடுவிக்குமாறு அவனிடம் கெஞ்சியது. பிராமணன் அதன் வார்த்தையை நம்பி அதனை விடுவித்து விடுகிறான். ஆனால் கூண்டிலிருந்து வெளியே வந்த புலி அது கொடுத்த வாக்குறுதியைமீறி அவனைத் தின்றுவிடப் போகிறேன் என்று கூறியது. பிராமணன் திகிலடைந்து புலி செய்வது நியாயமில்லையென வாதிட்டான். அவர்கள் இருவரும் ஒரு உடன்பாடு செய்து கொண்டனர். அவர்கள் சந்திக்கும் முதல் மூன்று நபர்களிடம் நியாயம் கேட்பது என்றும் பின்னர் அதன்படி நடக்கலாம் என்றும் முடிவுக்கு ஒத்துக்கொண்டனர். அவர்கள் முதலில் ஒரு மரத்தைப் பார்த்தனர். மனிதர்கள் மரத்தை வெட்டித் துன்புறுத்துவதால் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டிருந்த மரம் புலி மனிதனைத் தின்பது சரியே என்று கூறியது. இரண்டாவதாக அவர்கள் ஒரு எருமையைப் பார்த்தனர். மனிதர்களால் சுரண்டப்பட்டு தவறாக நடத்தப்பட்ட அந்த எருமை, பிராமணனைப் புலி சாப்பிடுவது நியாயமே என்று முடிவு சொன்னது. இறுதியாக அவர்கள் ஒரு குள்ளநரியைச் சந்திக்கிறார்கள். அது பிராமணனின் அவலநிலைக்கு அனுதாபப்பட்டு, முதலில் என்ன நடந்தது என்று தனக்குப் புரியவில்லை என்றும் அதனைத் தனக்குக் காட்டுமாறும் கூறியது. புலியும் மனிதனும் குள்ளநரியைப் புலி மாட்டிக்கொண்ட கூண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் தனக்கு இன்னும் புரியவில்லை என்று கூற, குள்ளநரிக்குக் காட்டுவதற்காகப் புலி மீண்டும் கூண்டுக்குள் சென்றது. உடனே குள்ளநரி கூண்டை மூடிவிட்டது. பின்னர் அம்மனிதனிடம் அவ் விஷயத்தை அதோடு விட்டுவிடுமாறு அறிவுறுத்தியது.
மாறுபாடுகள்
தொகுஇந்தக் கதையின் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் [3] உலகம் முழுவதும் பரவியுள்ளன. சில பதிப்புகளில் விடுவிக்கப்பட்ட விலங்கு முதலையாகவும், வேறு சிலவற்றில் பாம்பு, [4] புலி [5] ஓநாய் எனவும் உள்ளது.
நாட்டுப்புறவியலாளரான ஜோசப் ஜேக்கப்ஸ் இந்தக் கதையை ஆரம்பகால இந்திய ஆதாரங்களில் காணலாம் என்று கூறியுள்ளார்.[6] சில வகைகள் மிகவும் பழமையானவை. அவை குறைந்தபட்சம் பஞ்சதந்திரம் அல்லது பிட்பாயின் கட்டுக்கதைகள், ஜாதகக் கதைகளின் காலத்தவையாக உள்ளன. ஐரோப்பாவில், இது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரஸ் அல்போன்சியின் டிசிப்ளினா கிளெரிகலிசிலும், பின்னர் கெஸ்டா ரோமானோரம் மற்றும் ஜான் ஆஃப் கபுவாவின் டைரக்டரியம் விட்டே ஹுமனே ஆகியவற்றிலும் தோன்றியது.
டேவிட் கென்னட் சித்தரித்த தி டைகர், பிராமின் & ஜாக்கல் [7] மற்றும் கர்ட் வர்கோவால் விளக்கப்பட்ட தி டைகர் அண்ட் தி பிராமின் [8] போன்ற இக்கதையின் நவீன விளக்கப் பதிப்புகளும் உள்ளன. ராபிட் இயர்ஸ் புரொடக்சன்ஸ், கடைசி புத்தகத்தின் காணொலி பதிப்பைத் தயாரித்தது. இதில், ரவிசங்கரின் இசையில் பென் கிங்ஸ்லி கதையை விவரிக்கிறார். [9] ராபிட் இயர்ஸ் புரொடக்சன்சின் காணொலியில் கதையின் சில பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது. மற்றவர்களின் கருத்தைப் பெற மனிதன் தனியாகப் பயணம் செய்கிறான். அவன் சந்திக்கும் மூன்று பேர்களில் முதலாவதாக யானை சேர்க்கப்பட்டுள்ளது (பிந்தைய இரண்டு மரம் மற்றும் நீர் எருமை).
குறிப்புகள்
தொகு- ↑ Mary Frere (1896). " The Brahman, the Tiger, and the Six Judges". Old Deccan Days. Wikisource.
- ↑ Dorson, R. M. (1999). History of British folklore. Taylor and Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-20476-3. p. 334.
- ↑ Jacobs in his notes on the tale mentions that "No less than 94 parallels are given by Prof. K. Krohn in his elaborate discussion of this fable in his dissertation, Mann und Fuchs, (Helsingfors, 1891), pp. 38-60"
- ↑ World Tales by Idries Shah has a version called The Serpent collected in Albania. The Farmer and the Viper is a more minimal Aesop's fable.
- ↑ See Ingratitude Is the World's Reward: folktales of Aarne-Thompson-Uther type 155 for examples. Other examples include the Mexican story of Judge Coyote found in Creeden, Sharon. Fair is Fair: World Folktales of Justice.accessible in Google Books, There is No Truth in the World, found in Ben-Amos, Dan. Folktales of the Jews: Tales from Eastern Europe. accessible in Google Books.
- ↑ Jacobs, Joseph. Europa's Fairy Book. New Tork and London: G. P. Putnam's Sons. 1916. p. 254.
- ↑ Lock, Kath (1995). The Tiger, the Brahmin & the Jackal. Era Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86374-078-3.
- ↑ Gleeson, Brian (1992). The tiger and the brahmin. Neugebauer Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88708-233-5.
- ↑ See Rabbit Ears Productions media and release information.