புலி வால் கடல்குதிரை
புலி வால் கடல்குதிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆக்டினோப்டெரிஜீ
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | கிப்போகாம்பசு
|
இனம்: | கி. கம்சு
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு கம்சு கேண்டோர், 1850 |
புலி வால் கடல்குதிரை (Tiger tail seahorse)(கிப்போகாம்பசு கம்சு) என்பது சிங்னாதிடே குடும்பத்தில் உள்ள ஒரு மீன் சிற்றினமாகும். 1850-ல் தியோடர் கேன்டரால் இந்த சிற்றினம் முதலில் விவரிக்கப்பட்டது.[3]
பரவல்
தொகுஇது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இதன் இயற்கையான வாழ்விடங்கள் அலை குறைந்த நீர்வாழ் படுகைகள் மற்றும் பவளப் பாறைகள் ஆலும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
விளக்கம்
தொகுபுலி வால் கடல்குதிரை நீர்காட்சி வளரிடங்களில் 1.5 வருடங்களும் இயற்கையாக வாழும் இடங்களில் 1 முதல் 5 வருடங்கள் வரை வாழ்கிறது. இது பிற விலங்களுக்கு பாதிப்பில்லாதது. வெப்பமணடல் பகுதிகளில் இது வாழ்கின்றது. புலி வால் கடல்குதிரை அதிகபட்ச அளவு 18.7 செ.மீ. வளரக்கூடியது. இதன் மூக்கு தலை நீளம் 2.2; உணவை உறிஞ்சுவதற்கு இது பயன்படுகிறது. இவை சிறிய மீன், பவளம், சிறிய இறால் மற்றும் மிதவை உயிரிகள் ஆகியவற்றை உண்ணுகின்றன. மிகவும் பொதுவாக மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் மாறி மாறி காணப்படும். வாலில் வயிற்றுப் பகுதியிலிருந்து காணப்படும் கோடுகள் வால் நுனி வரை உள்ளன. இந்த கடல் குதிரைகள் பொதுவாகப் பவளப்பாறைகள், கடற்பாசி அல்லது மிதக்கும் சர்காசம் ஆகியவற்றில் இணைகளாகல் காணப்படுகின்றன. இந்த சிற்றினம் இரவாடி வகையின.[4] ஆண் கடல்குதிரை 1 முதல் 2,000 முட்டைகள் தனது மார்பில் உள்ள அடைக்கும் பையில் முட்டைகளை அடைகாக்கின்றன. கர்ப்ப காலம் 1 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.
அச்சுறுத்தல்
தொகுபுலி வால் கடல்குதிரை, பாரம்பரிய சீன மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மீன்பிடித்தல் மற்றும் வாழ்விட அழிவு ஆகியவற்றால் இக்கடல்குதிரை சமீபத்திய ஆண்டுகளில் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவ பயன்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் கடல் குதிரைகள் பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கடல் குதிரைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மே 15, 2004 முதல் வாசிங்டன் ஒப்பந்தத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது[1] மீன்களைப் போல இவற்றின் உடலில் செதில்கள் இல்லை. இவற்றின் உடலில் எலும்பு வளையங்களைச் சுற்றி கடினமான மெல்லிய தோல் நீண்டுள்ளது. இதனால் பிற விலங்குகளால் இவற்றைச் செரிக்க முடியாததால், இது பெரும்பாலான கடல் விலங்குகளால் இவற்றை இரையாக ஆக்க இயலாது. இவை கிடைமட்டமாக அல்லாமல் நிமிர்ந்து நீந்துகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lim, A. (2015). "Hippocampus comes". The IUCN Red List of Threatened Species 2015: e.T41008A54908262. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T41008A54908262.en.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Scales, Helen (2009). Poseidon's Steed: The Story of Seahorses, From Myth to Reality. Penguin Publishing Group. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-101-13376-7. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2018). "Hippocampus comes" in FishBase. February 2018 version.
வெளி இணைப்புகள்
தொகு- Photos of Tiger tail seahorse on Sealife Collection