புளுட்டோனியம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

புளுட்டோனியம் ஆர்சனைடு (Plutonium arsenide) என்பது PuAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.

புளுட்டோனியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோ ஆர்சனைடு
இனங்காட்டிகள்
12006-02-9
பண்புகள்
AsPu
வாய்ப்பாட்டு எடை 318,92
தோற்றம் கருப்பு அல்லது அடர் சாம்பல் நிற படிகங்கள்
அடர்த்தி 10.39 கி/செ.மீ3
உருகுநிலை 2,420 °C (4,390 °F; 2,690 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வெற்றிடத்தில் அல்லது ஈலியம் வாயுச்சூழலில் தூய புளுட்டோனியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் புளுட்டோனியம் ஆர்சனைடு உருவாகிறது.[1] இவ்வினை வெப்பம் உமிழ் வினையாகும்.

 

புளுட்டோனியம் ஐதரைடு மீது ஆர்சின் வாயுவைச் செலுத்தியும் புளுட்டோனியம் ஆர்சனைடு தயாரிக்கமுடியும்.

 

இயற்பியல் பண்புகள்

தொகு

Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5855 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில்[2] கனசதுர படிகமாக புளுட்டோனியம் ஆர்சனைடு அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[3]

உயர் அழுத்தத்தில் (சுமார் 35 கிகாபாசுக்கல்), ஒரு நிலை மாற்றம் ஏற்பட்டு சீசியம் குளோரைடு வகை கட்டமைப்பிற்கு ஏற்படுகிறது.[4]

129 கெல்வின் வெப்பநிலையில் புளுட்டோனியம் ஆர்சனைடு பெரோகாந்தப் பண்பு நிலையை அடைகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3598-2. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
  2. Gorum, A. E. (10 February 1957). "The crystal structures of PuAs, PuTe, PuP and PuOSe". Acta Crystallographica 10 (2): 144–144. doi:10.1107/S0365110X5700047X. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X5700047X. பார்த்த நாள்: 11 January 2022. 
  3. NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 65. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
  4. Dabos-Seignon, S.; Benedict, U.; Spirlet, J. C.; Pages, M. (15 July 1989). "Compression studies on PuAs up to 45 GPa" (in en). Journal of the Less Common Metals 153 (1): 133–141. doi:10.1016/0022-5088(89)90539-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508889905390?via%3Dihub. பார்த்த நாள்: 11 January 2022. 
  5. Blaise, A.; Fournier, J. M.; Salmon, P. (1 September 1973). "Magnetic properties of plutonium monoarsenide" (in en). Solid State Communications 13 (5): 555–557. doi:10.1016/S0038-1098(73)80012-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-1098. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0038109873800122?via%3Dihub. பார்த்த நாள்: 11 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்_ஆர்சனைடு&oldid=4155602" இலிருந்து மீள்விக்கப்பட்டது