புளோரோசல்போனேட்டு

புளோரோசல்பியூரிக் அமைலத்தின் இணை காரம்.

புளோரோசல்போனேட்டு (Fluorosulfonate) என்பது F-SO2-R என்ற வேதியியல் வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் வேதிவினைக் குழுவாகும். குறிப்பாக ஒரு நல்ல விடுபடும் குழுவாக புளோரோசல்போனேட்டு செயல்படுகிறது. கரிம வேதியியலில், புளோரோசல்போனேட்டு புளோரோசல்பேட்டிலிருந்து வேறுபட்டதாகும். புளோரோசல்போனேட்டுகளில், கந்தக அணு நேரடியாக கார்பன் போன்ற ஆக்சிசன் அல்லாத அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கனிம வேதியியலில், புளோரோசல்போனேட்டு என்பது புளோரோசல்பேட்டின் மற்றொரு சொல்லாகும். புளோரோசல்போனிக் அமிலத்தின் இணைகாரமாகக் கருதப்படும் F-SO2-O என்ற அயனியாக இது அறியப்படுகிறது. புளோரோசல்பேட்டுகள் எனப்படும் கரிம நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து தொடர்ச்சியான உப்புகளை உருவாக்குகின்றன.

புளோரோசல்போனேட்டு

புளோரோசல்பேட்டு அயனி
இனங்காட்டிகள்
15181-47-2 N
ChemSpider 2657785
InChI
  • InChI=1S/FHO3S/c1-5(2,3)4/h(H,2,3,4)/p-1
    Key: UQSQSQZYBQSBJZ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3413884
  • [O-]S(=O)(=O)F
பண்புகள்
FO3S
வாய்ப்பாட்டு எடை 99.06 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் குளோரோகந்தக அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கரிம ஆல்க்கைல் புளோரோசல்போனேட்டுகள் பொதுவாக திரிப்லேட்டு எசுத்தர்கள் (F3C-SO2-OR) போன்ற வலுவான ஆல்கைலேற்றும் முகவர்களாகும். ஆனால் திரிப்லேட்டு குழுவைப் போலல்லாமல், புளோரோசல்போனேட்டு குழு நீராற்பகுப்புக்கு எதிராக நிலைப்புத்தன்மையுடன் இருப்பதில்லை.[1] எனவே, புளோரோசல்போனேட்டு எசுத்தர்கள் திரிப்லேட்டு எசுத்தர்களை விட ஆல்கைலேற்றும் முகவர்களாக குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.

புளோரோசல்பேட்டு எசுத்தரின் பொதுவான கட்டமைப்பு. புளோரோசல்போனேட்டுகளில் கந்தகம் அணு நேரடியாக கார்பன் போன்ற ஆக்சிசன் இல்லாத அணுக்களுடன் பிணைந்துள்ளது.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Revathi, Lekkala; Ravindar, Lekkala; Leng, Jing; Rakesh, Kadalipura Puttaswamy; Qin, Hua-Li (2018). "Synthesis and Chemical Transformations of Fluorosulfates". Asian Journal of Organic Chemistry 7 (4): 662–682. doi:10.1002/ajoc.201700591. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோசல்போனேட்டு&oldid=3781731" இலிருந்து மீள்விக்கப்பட்டது