புளோரோமீத்தேன்

புளோரோமீத்தேன் (Fluoromethane) என்பது CH3F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் புளோரைடு, பிரியான் 41, ஆலோகார்பன்-41, எச்.எப்.சி-41 என்ற பல பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புளோரோமீத்தேனை திரவமாக்க முடியும். நச்சுத்தன்மையில்லாமலும் எளிதில் தீப்பற்றும் வாயுவாகவும் இது காணப்படுகிறது. கார்பன், ஐதரசன் , புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து புளோரோமீத்தேன் சேர்மம் உருவாகிறது. மீத்தேன் அமைப்பில் உள்ள ஒரு ஐதரசன் அணுவிற்குப் பதிலாக புளொரின் அணு இடம்பெற்றிருப்பதால் இதற்கு புளோரோமீத்தேன் எனப்பெயரிடப்பட்டது.

புளோரோமீத்தேன்
Stick model of fluoromethane
Stick model of fluoromethane
Spacefill model of fluoromethane
Spacefill model of fluoromethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோமீத்தேன்
வேறு பெயர்கள்
பிரியான் 41

மெத்தில் புளோரைடு
ஆலோகார்பன் 41

மோனோபுளோரோமீத்தேன்
இனங்காட்டிகள்
593-53-3 Y
Abbreviations R41
Beilstein Reference
1730725
ChEBI CHEBI:28826 Y
ChEMBL ChEMBL116838 Y
ChemSpider 11148 Y
EC number 209-796-6
Gmelin Reference
391
InChI
  • InChI=1S/CH3F/c1-2/h1H3 Y
    Key: NBVXSUQYWXRMNV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CH3F/c1-2/h1H3
    Key: NBVXSUQYWXRMNV-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11147 Y
ம.பா.த புளோரோமீத்தேன்
பப்கெம் 11638
  • FC
UN number UN 2454
பண்புகள்
CH3F
வாய்ப்பாட்டு எடை 34.03 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, மணமற்றது
அடர்த்தி 1.4397 கி/லி

0.557 கி/செ.மீ3 (நீர்மம்) 25 °செல்சியசில்

உருகுநிலை −137.8 °C (−216.0 °F; 135.3 K) [1]
கொதிநிலை −78.4 °C (−109.1 °F; 194.8 K) [1]
1.66 L/kg (2.295 கி/லி)
ஆவியமுக்கம் 3.3 மெகாபாசுகல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Flammable F+
R-சொற்றொடர்கள் R12
S-சொற்றொடர்கள் S9, S16, S23, S24/25, S26, S28, S33, S36/37/39, S60
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஐதரோகார்பன் குடும்பச் சேர்மங்களில் மிக எளிய சேர்மம் புளோரோமீத்தேன் ஆகும். மிகக் குறைந்த அணுநிறையைக் கொண்ட ஐதரோகார்பனும் இதுவேயாகும். ஏனெனில் இச்சேர்மத்தில் கார்பன், ஐதரசன், புளோரின் அணுக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குளோரோபுளோரோகார்பன்களுடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் இதில் குளோரின் அணு இல்லை. எனவே ஒசோன் அடுக்கிற்கு இவ்வாயுவால் எந்த கெடுதலும் இல்லை[2]

குறைக்கடத்திகள், மின்னணு பொருட்கள் பெருமளவில் தயாரிக்கவும் இவ்வாயு பயன்படுகிறது. RF புலத்தின் முன்னிலையில் இது பிரிகையடைந்து புளோரின் அயனிகளைக் கொடுக்கிறது. சில சிலிக்கன் சேர்மங்கள் அரிக்கப்படுகின்றன.

புளோரோமீத்தேன் ஈதர் போன்ற விரும்பத்தக்க மணமுடையது. அதிக அடர்த்தியில் இச்சேர்மம் ஒரு மயக்கமூட்டியாக்வும் செயல்படுகிறது. எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய புளோரோமீத்தேன் காற்ரில் எரிந்து நச்சுத்தன்மை மிக்க ஐதரசன் புளோரைடை வெளியிடுகிறது. ஆல்ககாலைப் போலவே இச்சேர்மத்தின் சுவாலையும் நிறமற்று எரிகிறது.

C-F இணைப்பின் பிணைப்பு ஆற்றல் 552 கியூ/மோல் ஆகவும். இணைப்பின் பிணைப்பு நீளம் 0.139 நானோமீட்டர் (குறிப்பாக 0.14 நானோமீட்டர்) ஆகவும் உள்ளது. நான்முகி மூலக்கூற்று வடிவமுடையதாக உள்ள புளோரோமீத்தேன் . 25 °செல்சியசில் தன்வெப்ப ஏற்புத்திறன் Cp = 38.171 யூ.மோல்−1.கெ−1 என்ற அளவிலும் மாறுநிலை வெப்பம் 44.9 °செல்சியசு மற்றும் 6.280 மெகாபாசுகல் ஆகவும் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. Fluoromethane CH3F

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோமீத்தேன்&oldid=4070802" இலிருந்து மீள்விக்கப்பட்டது