புவிப்படவியல் வரலாறு

புவிப்படவரைவியல் வரலாறு (History of cartography) வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தோன்றிய துறையாகும். இது மனித வரலாறு முழுவதும் வரைபடவியல் அல்லது வரைபடத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் விளைவுகளைக் குறிக்கிறது. வரைபடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது மனிதர்கள் உலகம் முழுவதும் தங்கள் வழியை விளக்கவும் செல்லவும் அனுமதிக்கிறது.

புவிப்படவியல் கிரேக்க காலத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. பண்டைக்காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்த மக்களும், வேட்டைத் தொழில் ஈடுபட்டவர்களம் தாம் சென்ற இடங்களைப் பற்றிய அடையாளங்களை நிலத்தோற்ற வகைமைகளாக உருவாக்கினர்.

ஆரம்பகால வரைபடங்கள் எப்போது, ​​​​எப்படி உருவாக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளூர் நிலப்பரப்பின் வரைபடங்கள் பல கலாச்சாரங்களால் சுயாதீனமாக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. எஞ்சியிருக்கும் ஆரம்பகால வரைபடங்களில் குகை ஓவியங்கள் மற்றும் தந்தம் மற்றும் கல்லில் செய்யப்பட்ட பொறிப்புகள் அடங்கும். பண்டைய பாபிலோன், கிரேக்கம், உரோம், சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றால் வரைபடங்கள் விரிவாக தயாரிக்கப்பட்டன. பூமியின் வடிவம் நிச்சயமற்றதாக இருந்ததாலும், வரைபடத்தில் உள்ள சிறிய பகுதிகளில் வளைவு முக்கியமில்லாததாலும், ஆரம்பகால வரைபடங்கள் பூமியின் மேற்பரப்பின் வளைவை புறக்கணித்தன.

நவீன போக்குவரத்து முறைகள், கண்காணிப்பு விமானங்களின் பயன்பாடு மற்றும் சமீபகாலமாக செயற்கைக்கோள் படங்களில் கிடைக்கும் தன்மை ஆகியவை முன்பு அணுக முடியாத பல பகுதிகளின் ஆவணங்களை சாத்தியமாக்கியுள்ளன. கூகுள் எர்த் போன்ற இலவச இணையவழி சேவைகள் உலகத்தின் துல்லியமான வரைபடங்களை முன்பை விட அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளன.

வகைகள்

தொகு

புவிப்படவியல் வளர்ச்சியடைந்த கால கட்டங்களைக் கொண்டு 5 வகைகளாகப் பிரிக்கலாம்.

தொல்பழங்காலம்

தொகு

ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த எஸ்கிமோ ஆதிவாசிகள், அரேபிய பாலைவனத்தைச் சார்ந்த பெடுவியன்கள், பசிபிக் தீவுத்த்ட்டவாசிகள் பாலினேஷியன்கள், இந்தியாவின் பஞ்சாரமக்கள் ஆகியோர் தோல், மரங்கள், எலும்பு, களிபோன் போன்ற பரப்புகளில் அவர்களுக்குத் தெரிந்த பகுதிகளை மாதிரிகளாக வரைந்தனர். இவற்றில் மிகப் பழமையானது பாபிலோனியர்களால் களிமண் பரப்புகளில் வரையப்பட்டவை எகிப்தியர்களின் தங்கச் சுரங்கங்களைக் கறிக்கக் கூடிய கி.மு. 2800ல் வரையப்பட்ட வரைபடங்கள் சொத்துரிமை புவிப்படங்கள் (Real Estate Map) (அ) நில அளவீடு சார்ந்த புவிப்படங்கள் (Cadastral Map) என்று அழைக்கப்படுகின்றன. பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இத்தகையை புவிப்படங்கள் அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது இப்புவிப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை.[1]

இருண்டகாலம் (அ) இடைக்காலம்

தொகு

தொலமியின் புவிப்படவியல் முன்னேற்றத்திற்குப் பிறகு முன்பு தயாரிக்கப்பட்ட புவிப்படங்களே கையாளப்பட்டு வந்தன. புள்ளி விவரங்களில் குறைபாடும், தவறுகளும் அடங்கிய புவிப்படங்களே பிரதி எடுத்தல் முறையில் பயன்படுத்தப்பட்டது. மத குருமார்களல் கூறப்பட்ட கருத்துக்களே முதன்மை பெற்றது. அறிவியல் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை. எனவே இக்காலம் இருண்டகாலம் எனப்பட்டது.

 
புனித நில வரைபடம், ஒரு திட்டவட்டமான நாட்டின் முதல் டோலமிக் அல்லாத வரைபடம்.[2]

மறுமலர்ச்சிக்காலம்

தொகு

அச்சுக்கலை மறுமலர்ச்சி அடைந்த காரணத்தால் 16ம் நூற்றாண்டு கால கட்டமே புவிப்படத்தயாரிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியது எனலாம். வாணிப முக்கியத்தவம் காரணமாக புது நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் விரைவதற்கான தேவையும் ஏற்பட்டது. எனவே, இக்கால கட்டம் மறுமலர்ச்சிக் காலம் என அழைக்கப்படுகிறது.[3][4]

சீர்திருத்தக்காலம்

தொகு

18ம் நூற்றாண்டில் புவிப்படங்கள் தயாரிப்பதில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியும், பன்னாட்டு ஆர்வமும் கடல் பயணங்களாலும் நில அளவைக் கருவிகளின் வளர்ச்சியிலும் இடம் பெயர்தல் (migration) காரணமாகவும் புவிப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இக்காலத்தில் 19ம் நூற்றாண்டில் ஜெர்மனி புவிப்படத் தயாரிப்பிலும், தேசப்படப்புத்தகத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கியது.[5]

தற்காலம் (அ) 20ம் நூற்றாண்டு

தொகு

புவிப்படத்துறையில் மாபெரும் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாக அமைந்தது உலகப் போர்கள். ஒவ்வொரு நாடும் தங்களது புவிப்படங்களை நீர், நில, வான் பககுதிகளை இராணுவம் கண்டறியும் பொருட்டுத் தயாரித்தன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இப்படங்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் தயாரிக்கப்பட்டன. நிழற்பட கல்லச்சக்கலை என்ற முறையைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் தகடுகளிலும் புவிப்படங்கள் வரையப்பட்டன. கணினி மூலம் பன்னாட்டு தேசிய புவிப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் இந்தியா ஆகிய நாடுகள் தங்கள் வளங்களைக் கண்டறிய புவிப்படங்களைத் தயாரித்துள்ளன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Clement Nicolas, Yvan Pailler, Pierre Stéphan, Julie Pierson, Laurent Aubry, et al.. La carte et le territoire : la dalle gravée du Bronze ancien de Saint-Bélec (Leuhan, Finistère). Bulletin de la Société préhistorique française, Société préhistorique française, 2021, 118 (1), pp.99–146. Online at https://www.prehistoire.org/shop_515-47906-5446-800/04-2021-tome-118-1-p.-99-146-c.-nicolas-y.-pailler-p.-stephan-j.-pierson-l.-aubry-b.-le-gall-b.-le-gall-v.-lacombe-j.-rolet-la-carte-et-le-territoire-la-dalle-gravee-du-bronze-ancien-de-saint-belec-leuhan-finistere.html
  2. Adolf Erik Nordenskiöld (1889). Facsimile-atlas to the Early History of Cartography: With Reproductions of the Most Important Maps Printed in the XV and XVI Centuries. Kraus. pp. 51, 64.
  3. "How Maps Made the World". Wilson Quarterly. Summer 2011 இம் மூலத்தில் இருந்து 11 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811005805/http://www.wilsonquarterly.com/article.cfm?AID=1992. 
  4. Branch, Jordan (2011). "Mapping the Sovereign State: Technology, Authority, and Systemic Change". International Organization (கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)) 65 (1): 1–36. doi:10.1017/S0020818310000299. http://econpapers.repec.org/article/cupintorg/v_3a65_3ay_3a2011_3ai_3a01_3ap_3a1-36_5f00.htm. பார்த்த நாள்: 5 March 2012. 
  5. Rankin, Bill (2006). "Projection Reference". Radical Cartography.
  6. "Lesson 1: History of Cartography". Archived from the original on 2009-07-04. பார்க்கப்பட்ட நாள் 2006-06-20.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Historical maps
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

See Maps for more links to historical maps; however, most of the largest sites are listed at the sites linked below.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிப்படவியல்_வரலாறு&oldid=4071878" இலிருந்து மீள்விக்கப்பட்டது