புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா

புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா (Puerto Princesa Subterranean River National Park) என்பது பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்தப் பூங்கா பலவான் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள புனித பால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது புவேர்ட்டோ பிரின்செசா நகர மையத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) வடக்கே உள்ளது. மேலும் புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி நதியைக் கொண்டுள்ளது. இதை 1992 முதல் புவேர்ட்டோ பிரின்செசா நகர அரசு நிர்வகித்து வருகிறது.

புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி ஆறு தேசியப் பூங்கா
ஐயுசிஎன் வகை III (இயற்கை நினைவகம்)
புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி நதிக்கான நுழைவு

இது 1999 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டது. மேலும் 2012 இல் இயற்கையின் புதிய 7 அதிசயங்களாகவும் வகைபடுத்தப்பட்டது. இது 2012 இல் ராம்சார் ஈரநில தளமாகவும் மாறியது.

விளக்கம்

தொகு

இந்தப் தேசிய பூங்கா வடக்கே புனித பால் குடாவையும், கிழக்கே பாபூயன் நதியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. புவேர்ட்டோ பிரின்செசா நகர அரசு 1992 முதல் இந்தத் தேசியப் பூங்காவை நிர்வகித்து வருகிறது. சபாங் நகரத்திலிருந்து ஒரு படகு சவாரி மூலம் இதனை அடையலாம்.  இதன் பூங்காவின் சிறப்பம்சம் என்னவென்றால், அது நேரடியாக கடலுக்குள் பாய்கிறது.

சமீபத்திய வரலாறு

தொகு

2010 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புவியியலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு, நிலத்தடி நதியில் இரண்டாவது தளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. அதாவது குகைக்குள் சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நிலத்தடி ஆற்றின் மேலே 300 மீ (980 அடி) அளவைக் கொண்ட ஒரு குகை, பாறை அமைப்புகள், பெரிய வௌவால்கள், ஆற்றின் ஆழமான நீர் துளை, அதிக நதி வழித்தடங்கள் , மற்றொரு ஆழமான குகை, அத்துடன் கடல் உயிரினங்கள் மற்றும் பலவற்றையும் அவர்கள் கண்டனர். ஆக்சிசன் பற்றாக்குறை காரணமாக நிலத்தடி ஆற்றின் ஆழமான பகுதிகள் ஆராய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது.

நவம்பர் 11, 2011 அன்று, இது தற்காலிகமாக இயற்கையின் புதிய 7 அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த தேர்வு சனவரி 28, 2012 அன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. [1]

நிலவியல்

தொகு
 
தேசியப் பூங்காவில் பாறை அமைப்புகள்

இந்த பூங்காவில் கரடு மலை நிலப்பரப்பு உள்ளது. புனித பால் நிலத்தடி நதி குகை 24 கிலோமீட்டர் (15 மைல்) நீளமானது. கபாயுகன் ஆற்றின் 8.2 கிலோமீட்டர் நீளம் (5.1 மைல்) நிலத்தடி பகுதியைக் கொண்டுள்ளது.மேற்கு பிலிப்பீன்சு கடலில் நேரடியாகப் பாயும் முன் இந்த நதி குகை வழியாகச் செல்கிறது. [2] கடலில் இருந்து 4.3 கிலோமீட்டர் (2.7 மைல்) வரை படகு மூலம் செல்ல முடியும்.

இந்த குகையில் உருகக்கூடிய பாறைகளும், புற்றுப்பாறைகளின் முக்கிய அமைப்புகளும், 360 மீட்டர் நீளமுள்ள (1,180 அடி) இத்தாலிய அறை உட்பட பல பெரிய அறைகளும் தோராயமாக 2.5 மில்லியன் சதுர மீட்டர் அளவைக் கொண்டுள்ளன. இது உலகின் மிகப்பெரிய குகை அறைகளில் ஒன்றாகும். [3] கடலில் இருந்து ஆறு கிலோமீட்டர் (3.7 மைல்) வரை ஆற்றின் கீழ் பகுதி [[ஓதம்|அலை] தாக்கங்களுக்கு உட்பட்டது. மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தில் 2007 நிலத்தடி நதியைக் கண்டுபிடிக்கும் வரை [4] இந்த நிலத்தடி ஆறு உலகின் மிக நீளமான நிலத்தடி ஆறாக புகழ் பெற்றிருந்தது.

இப்பகுதி பல்லுயிர் பாதுகாப்புக்கான வாழ்விடத்தையும் குறிக்கிறது. இந்த தளம் முழு மலையிலிருந்து கடல் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஆசியாவில் மிக முக்கியமான காடுகளைக் கொண்டுள்ளது. இது 1999 திசம்பர் 4 இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தாவரங்கள்

தொகு
 
தேசியப் பூங்காவில் தாவரங்கள்

வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் பதின்மூன்று வன வகைகளில் எட்டு வகைகள் இந்தப் பூங்காவில் காணப்படுகிறது. அதாவது அல்ட்ராமாபிக் மண்ணுக்கு மேல் உள்ள காடுகள், சுண்ணாம்பு மண்ணுக்கு மேல் உள்ள தாவரங்கள், மான்ட்டேன் தாவரங்கள், நன்னீர் சதுப்புநிலத் தாவரங்கள், தாழ்நில பசுமையான வெப்பமண்டல மழைத் தாவரங்கள், நதித் தாவரங்கள், கடற்கரைத் தாவரங்கள், அலையாத்தித் தாவரங்கள் போன்றவை. 300 இனங்கள் மற்றும் 100 குடும்பங்களைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட தாவர இனங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

விலங்குகள்

தொகு
 
குகையில் தொங்கும் வௌவால்கள்

பூங்காவில் காணப்படும் பறவைகள் மிகப்பெரிய முதுகெலும்புகளைக் கொண்டிருக்கின்றன. பலவானில் அறியப்பட்ட 252 பறவை இனங்களில், மொத்தம் 165 வகையான பறவைகள் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த பறவைகளில் 67% மற்றும் பலவானின் 15 உள்ளூர் பறவை இனங்கள் அனைத்தையும் குறிக்கிறது.

கௌரவம்

தொகு

2019 சூன் 30 அன்று, புவேர்ட்டோ பிரின்செசா நிலத்தடி நதி கூகுள் டூடுலுடன் கொண்டாடப்பட்டது. [5]

குறிப்புகள்

தொகு
  1. Voting procedure for the New7Wonders of Nature பரணிடப்பட்டது 2009-08-05 at the வந்தவழி இயந்திரம் at vote7.com
  2. "Administrative Order No. 29, s. 2012". www.gov.ph.
  3. "Puerto Princesa Subterranean River". Wondermondo.
  4. Roach, John (5 March 2007). "World's Longest Underground River Discovered in Mexico, Divers Say". National Geographic. தேசிய புவியியல் கழகம். பார்க்கப்பட்ட நாள் 2008-09-05.
  5. "Celebrating Puerto Princesa Underground River". Google. 30 June 2019.

வெளி இணைப்புகள்

தொகு

  பொதுவகத்தில் Puerto Princesa Subterranean River National Park பற்றிய ஊடகங்கள்