பு. மோ. இலால்
பு. மோ. இலால் (B.M. Lal) என்பவர் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பீகார் மாநில ஆளுநராகவும் இருந்தவர் ஆவார்.[1][2][3] நீதிபதி இலால் 1937ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள் பிறந்தார். இவர் ஜனவரி 1963-இல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். குடிமையியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் பயிற்சி பெற்றார். 1984ஆம் ஆண்டு மே 14ஆம் நாளன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாளன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் நாளன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் இவர் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1997 நியமிக்கப்பட்டார். இரண்டாண்டு சேவைக்குப் பின்னர் 1999-ல் பணி ஓய்வு பெற்றார்.[4]
பு. மோ. இலால் | |
---|---|
தலைமை நீதிபதி பாட்னா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 9 ஜூலை 1997 – 6 அக்டோபர் 1999 | |
முன்னையவர் | டி. பி. வாத்வா |
பின்னவர் | இரவி சு. தவான் |
பீகார் ஆளுநர் | |
பதவியில் 15 மார்ச் 1999-5 அக்டோபர் 1999 | |
முன்னையவர் | சுந்தர் சிங் பண்டாரி |
பின்னவர் | சூரஜ் பன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIST OF FORMER CHIEF JUSTICES Patna High court". Patna High Court. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
- ↑ "List of Governors Bihar". Governor of Bihar. Archived from the original on 4 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bihar Governor B.M. Lal enforces discipline among staff used to lavish lifestyle". India Today. 10 May 1999. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
- ↑ "Bihar State Legal Services Authority". patnahighcourt.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.