பூசபதி

குடும்பப் பெயர்

பூசபதி (Pusapati) அல்லது பூசாபதி என்பது வடக்கு ஆந்திரப் பகுதியிலிருந்த விஜயநகர தோட்டங்களை ஆட்சி செய்த குலமாகும்.

வரலாறு

தொகு
 
விஜயநகர கோட்டையின் மேற்கு நுழைவாயில்.
 
விஜயநகர கோட்டையின் பிரதான நுழைவாயில்

6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஷ்ணா ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குள் ஒரு இராஜ்புத்திரர் கூட்டத்தை வழிநடத்திய மாதவவர்மாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை பூசபதி குலம் கூறுகிறது.[1] குழுவின் உறுப்பினர்கள் பின்னர் கோல்கொண்டா அரசவையில் முக்கிய பதவிகளை வகித்தனர்.[1]

பூசபதியின் தலைவர் சீதாராம் சந்திர ராஜு ஜெய்ப்பூர் தோட்டத்தின் இரகுநாத் கிருஷ்ணா தேவிடம் இருந்து குமிலி மற்றும் குண்ட்ரேடு கிராமங்களை பெற்றார்.[2] முதலாம் இராமச்சந்திர தேவ் என்பவரால் ஜெய்ப்பூர் தோட்டத்தின் நிர்வாக அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜயராம ராஜு, 1710 ஆம் ஆண்டில் தனது தந்தைக்குப் பிறகு குலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3][1] 1712 இல் இரண்டாம் விசுவேம்பர் தேவ் என்பவரின் கீழிருந்த தோட்டத்தின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து பொன்னூருவிலிருந்த தலைநகரை விஜயநகரத்திற்கு மாற்றினார்.[4][1] விஜயராம ராஜு அண்டை நில உரிமையாளர்களாக இருந்த ஜமீந்தார்களையும் ஜெய்ப்பூர் தோட்டத்திலிருந்து சுதந்திரம் பெறத் தூண்டினார்.[3] 1757 ஆம் ஆண்டில், விஜயரம ராஜு பிரெஞ்சு ஆளுநர் ாம ராஜு பிரெஞ்சு ஆளுநர் மார்க்விஸ் தெ புஸ்ஸியுடனான ஒரு கூட்டணியை உருவாக்கினார். இக்கூட்டணி பொப்பிலியைக்கைப்பற்றியது.[1]

விஜயராம ராஜுவைத் தொடர்ந்து, பூசபதி குலத்தை ஆனந்த ராஜு வழிநடத்தினார். அடுத்ததாக இரண்டாம் விஜயராம ராஜு பதவிக்கு வந்தார். இவர் பெரும்பாலும் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சீதாராம ராஜுவால் கட்டுப்படுத்தப்பட்டார்.[5] 1761இல் சீதாராம ராஜு பர்லகேமுண்டியைத் தாக்கி அதன் படைகளையும் அவர்களின் மராட்டிய கூட்டாளிகளையும் தோற்கடித்து விஜயநகரப் பகுதியில் நிலப்பரப்பை மேலும் சேர்த்தார்.[5] 1768 ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகரித்து வரும் ஈடுபாட்டைக் குறிக்கும் வகையில், காசிபுரம், நந்தபூர், மட்கோல் போன்றவற்றை வைத்திருக்கவும், பயிரிட உரிமையையும் இரண்டாம் விஜயராம ராஜு கோரினார். இதன் விளைவாக அதிருப்தி அடைந்த நில உரிமையாளர்கள் விஜயநகரத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்ட்டனர்.[6] இரண்டாம் விஜியாராம் ராஜு தேவையான வருவாய் வசூல் கொடுப்பனவுகளைச் செய்ய முடியாததால், அவர் மாவட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.[7] ஆனால் உத்தரவுகளை மீறியதன் விளைவாக கர்னல் பிரெண்டர்காஸ்ட் தலைமையிலான கிழக்கிந்திய நிறுவனம் சென்னை மாகாணப் படைகளுக்கு எதிராக பத்மநாபம் எனுமிடத்தில் போர் நடத்தியது. போரில் இரண்டாம் விஜயாராம ராஜு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[8]

பத்மநாபம் போரைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த நாராயண பாபு ராஜுவால் மலை நில உரிமையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் கிளர்ச்சிகளை அடக்க முடியவில்லை. இது இறுதியில் விஜயநகர தோட்டத்தின் பரப்பளவை மேலும் குறைக்க வழிவகுத்தது.[8] அடுத்தடுத்த தலைவர்களான விஜயராம் கஜபதி ராஜு மற்றும் ஆனந்த ராஜு ஆகியோர் தங்களை திறமையான தலைவர்களாக நிரூபித்தனர். மேலும் விஜயநகர தோட்டத்திற்கு செழுமைக் காலத்தைக் கொண்டு வந்தனர்.[8]

நந்தாப்பூர் போருக்குப் பிறகு பூசபதிகள் கஜபதி என்ற பட்டத்தைப் பெற்றனர்.[9]

பூசபதி ஆட்சியாளர்கள்

தொகு
 
விஜயநகரத்தின் இலட்சினை
 
சிசோடியா குலத்தின் கிளைகள்
  • சீதாராம ராஜு [10]
  • பூசபதி அமல கஜபதி ராஜு (நிறுவனர்)
  • பூசபதி ராச்சி கஜபதி ராஜு
  • பூசபதி தம கஜபதி ராஜு
  • முதலாம் விஜியராம ராஜு (ஆட்சி 1710-1757) [1]
  • ஆனந்த ராஜு [5]
  • இரண்டாம் விஜயராம ராஜு [5]
  • நாராயண பாபு ராஜு [8]
  • மூன்றாம் விஜயராம ராஜு (விஜயராம கஜபதி ராஜு, 1848-1878 வரை ஆட்சி செய்தார்) [8][11]
  • ஆனந்த கஜபதி ராஜு (ஆட்சி 1879-1897) [8][11]
  • ராஜா பூசபதி விஜயராம கஜபதி ராஜு [8]
  • அலக் நாராயண கஜபதி ராஜு [12]
  • பூசபதி விஜயராம கஜபதி ராஜு (அலக் நாராயண கஜபதி ராஜுவின் மூத்த மகன், 1945-1995 ஆட்சி செய்தார்) [12][13]
  • பூசபதி ஆனந்த கஜபதி ராஜு (விஜயராம கஜபதி ராஜுவின் மூத்த மகன், 1995-2016 வரை ஆட்சி செய்தார்) [13][14]
  • பூசபதி அசோக் கஜபதி ராஜு (விஜயராம கஜபதி ராஜுவின் இரண்டாவது மகன்) [15][16]

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு
  • பி. எஸ். குமாரசாமி ராஜா-சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் (1949-1952) மற்றும் ஒடிசாவின் ஆளுநர் (1954-1956) [17][18]
  • பூசபதி விஜய ஆனந்த கஜபதி ராஜு முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக்காரர், அரசியல்வாதி, 1958 இல் பத்ம பூசண் விருது வென்றவர்.[19][20][21]
  • பூசபதி லட்சுமி நரசிம்ம ராஜு, அரசியல்வாதி மற்றும் கூட்டுறவு மத்திய வங்கி மற்றும் வட ஆந்திராவில் உள்ள பல கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் நிறுவனர். ஒரு சுதந்திர போராட்ட வீரர், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய அரசியலமைப்பில் கையெழுத்திட்டவர்.
  • பூசபதி லட்சுமி நரசிம்ம ராஜு -ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர், பல கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகளின் தலைவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Frowde 1908, ப. 339.
  2. Senapati & Sahu 1966, ப. 63.
  3. 3.0 3.1 Senapati & Sahu 1966, ப. 66.
  4. Senapati & Sahu 1966, ப. 67.
  5. 5.0 5.1 5.2 5.3 Frowde 1908, ப. 340.
  6. Senapati & Sahu 1966, ப. 69.
  7. Senapati & Sahu 1966, ப. 70.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Frowde 1908, ப. 341.
  9. Satyanarayana 1997, ப. 48.
  10. Richards 1978, ப. 55.
  11. 11.0 11.1 Frenz & Berkemer 2006, ப. 1264.
  12. 12.0 12.1 "A socialist among princes". The Hindu. 2002-08-05. Archived from the original on 2012-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  13. 13.0 13.1 "Ananda Gajapathi Raju passes away". The Hans India. 2016-03-27. Archived from the original on 2018-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  14. "Anand Gajapathi Raju passes away". The Hindu. 2016-03-26. Archived from the original on 2021-10-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  15. "Ashok Gajapathi Raju". Business Standard. 2014-05-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  16. "Ashok Gajapathi Raju Pusapati". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  17. "List of Chief Ministers of Tamil Nadu". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  18. "Odisha Governor List". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  19. "Maharajah of Vizianagram Profile - Cricket Player India". ESPN CricInfo. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  20. "1962 India General (3rd Lok Sabha) Election Results". Elections.in, 5 Dots Partners. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  21. "Padma Bhushan Award Winners". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசபதி&oldid=4149579" இலிருந்து மீள்விக்கப்பட்டது