பூசாரி - அரசர் (சிற்பம்)
பூசாரி-அரசர், (Priest-King, in Pakistan often King-Priest,[1]) என்பது பாக்கித்தானின், சிந்து மாகாணத்தில் உள்ள மொகெஞ்சதாரோவின் பழைய வெண்கலக் கால அழிந்துபோன நகரத்தில் அகழ்வாய்வில் 1925-26 காலகட்டத்தில் கண்டுபிடிக்கபட்ட சோப்புக்கல்லி்ல் செதுக்கப்பட்ட ஒரு சிறிய ஆண் உருவம் ஆகும். இது மொகெஞ்சதாரோவின் பிற்காலமான கிமு 2000-1900 காலத்தைச் சேர்ந்தது. இது சிந்துவெளி நாகரிகத்தின் " மிகவும் பிரபலமான கல் சிற்பம் " ஆகும்.[2] இது தற்போது பாக்கித்தான் தேசிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் (NMP 50-852) உள்ளது. இது பரவலாகப் போற்றப்படுகிறது, ஏனெனில் "சிற்பி இயற்கையான விவரங்களை பகட்டான வடிவங்களுடன் இணைத்து, உண்மையாக இருப்பதை விட மிகப் பெரியதாகத் தோன்றத்தக்கதாக ஒரு சக்திவாய்ந்த உருவத்தை உருவாக்கியுள்ளார்,"[3] மேலும் பசுபதி முத்திரையைத் தவிர, "சிந்து நாகரிகத்தை சிறப்பாக அடையாளப்படுத்த எதுவும் கிடைக்கவில்லை."[4]
பூசாரி - அரசர் | |
---|---|
பூசாரி - அரசர் | |
ஓவியர் | தெரியவில்லை, வரலாற்றுக்கு முந்தைய |
ஆண்டு | சு. 2000–1900 கி.மு |
வகை | சுடப்பட்ட சோப்புக்கல் |
பரிமானங்கள் | 17.5 செ.மீ × 11 செ.மீ (6.9 அங்குலம் × 4.3 அங்குலம் ) |
இடம் | பாக்கித்தான் தேசிய அருங்காட்சியகம், கராச்சி |
இந்தச் சிற்பத்தில் உள்ள மனிதன் திருத்தப்பட்ட தாடியுடன் தலையில் நெற்றிப் பட்டம் வைத்து, கையில் அதே போன்ற நகையையும் அணிந்துள்ளார். அவரது தலைமுடி மீண்டும் சீவப்படுள்ளதாக உள்ளது. அவர் ஒரு ஆடையை அணிந்துள்ளார். அது மூவிலை அல்லது மலர் அச்சு பதிப்பிக்கபட்ட துணியாக உள்ளது. அது சிவப்பு நிறத்தின் தடயங்களைக் கொண்டுள்ளது. அவரது கண்கள் முதலில் பதிக்கபட்டிருக்கலாம்.[5] சிற்பம் முழுமையடையாது, கீழே உடைந்து, முடிக்கப்படாததாக இருக்கலாம். முதலில் இது பெரியதாக இருந்ததிருக்கலாம் அதாவது அநேகமாக ஒரு முழு உருவமாக அமர்ந்து அல்லது மண்டியிட்ட உருவமாக இருக்கலாம்.[6] தற்போது இது 17.5 சென்டிமீட்டர்கள் (6.9 அங்) உயரம் கொண்டதாக உள்ளது.[7]
பூசாரி-அரசர் என்ற பெயர் தற்போது பொதுவாக பயன்படுத்தப்பட்டடாலும், அது ஊகமானதும், "அடிப்படை அற்றதும்" ஆகும்.[8] அகழாவ்வில் இந்தத் துண்டு கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய தொல்லியல் ஆராய்வாளரான எர்னஸ்ட் ஜே. எச். மெக்கே, இது ஒரு "பூசாரி"யின் சிலை என்று கருதினார். பிரிவினைக்கு முந்தைய இந்திய தொல்லியல் துறையின் தலைவரான சர் ஜான் மார்ஷல், இதை ஒரு "அரசர்-பூசாரி" என்று கருதினார், ஆனால் அவரது வாரிசான மோர்டிமர் வீலர் தான் முதன்முதலில் பூசாரி-அரசர் என்ற பெயரைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.[9] இதற்கும் வேறு சில சிந்து சமவெளி ஆண் உருவச் சிற்பங்களுக்கும் உள்ள ஒரு மாற்றுப் பெயர்கள் என்னவென்றால், அவை "குலத் தலைவர்கள் அல்லது மூதாதையர் நினைவுச் சின்னங்கள்" என்பதாகும்.[3]
இதன் ஒரு பிரதிதான் பொதுவாக பாக்கித்தானின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அசல் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் இயக்குநர் திரு. புகாரி, 2015 இல் விளக்குகையில் " இது ஒரு தேசிய சின்னம். அதைக்கொண்டு நாம் ஆபத்துக்களை விலைக்கு வாங்கக் கூடாது".[10] அருங்காட்சியகம் பயன்படுத்தும் உருது மொழி தலைப்பு (ஆங்கிலத்தில் "கிங்-பிரிஸ்ட்" ) ஒரு சரியான மொழிபெயர்ப்பு அல்ல, ஆனால் حاکم اللی (ஹக்கீம் ஆலா), உருது-பாரசீக-அரபு மொழிகளில் இல் நன்கு அறியப்பட்ட பொருளாக இறையாண்மை அல்லது பிஷப் (சடங்கு சந்தர்ப்பங்களில் அரசு கட்டிலில் அமர உரிமை கொண்டவர்).
விளக்கம்
தொகுஇந்த சிலையானது மென்மையான சோப்பக்கல் கனிமத்தில் செதுக்கப்பட்டுள்ளது ,மேலும் (வெளிப்படையாக முடிக்கப்படாத போதிலும்) இதைக் கடினப்படுத்த 1000°C இக்கு மேல் சுடப்பட்டுள்ளது. முகத்தின் வலது புறத்தில் நீண்ட விரிசல் உள்ளது, அது ஏற்கனவே இருந்திருக்கலாம் அல்லது தோண்டியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம். சிலையின் அடிப்பகுதியில் ஒரு சீரற்ற உடைப்பு உள்ளது. சிலை அணிந்துள்ள ஆடை முன்பக்கத்தை விட பின்புறத்தில் மேலும் கீழும் தொடர்கிறது. மூக்கு நுனியிலும் சேதமடைந்துள்ளது, ஆனால் பல பகுதிகள் நல்ல நிலையில் உள்ளன. இது மற்ற சிந்துவெளி ஆய்வில் கிடைத்த ஆண் உருவங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது, இது மிகவும் முழுமையானது, இது அமர்ந்திருக்கும் நிலையைக் காட்டுகிறது, சில சந்தர்ப்பங்களில் முழங்கால் உயர்த்தியும் மற்ற கால் பகுதி உடலின் அடியில் மறைந்து இருக்கும். பூசாரி-அரசர் முதலில் இந்த வடிவத்தில் இருந்திருக்கலாம்.[11] ஜொனாதன் மார்க் கெனோயர் உட்பட சில தொல்லியல் ஆய்வாளர்கள், இதுவும் பிற சிலைகளும் வேண்டுமென்றே "உடைந்து சிதைக்கப்பட்டன" என்று நம்புகிறார்கள், ஏனெனில் அவர்களின் குடிமக்கள் தங்கள் மதிப்பை இழந்திருக்கலாம்.[12]
கண்கள் அகலமானவையாகவும், குறுகியவையாகவும், பாதி மூடியவாறும் இருக்கின்றன.[13] தளத்திலிருந்து வேறு சில கல் தலைகளைப் போல காதுகள் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தலையின் மேற்பகுதி தட்டையானதாக உள்ளது. அநேகமாக இப்போது காணாமல் போன ஒன்று இணைக்கபட்டிருக்கலாம். மேலும் இது குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டப்பட்ட "தலைமுடி" அல்லது தலைக்கவசம் என பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. காதுகளுக்கு கீழே இரண்டு துளைகள் இதை இணைப்பதற்காக இருந்திருக்கலாம், அல்லது ஒரு அட்டிகையாக இருக்கலாம். தலை சேதமடைந்ததால் தட்டையானது என்று மேக்கே குறிப்பிடுகிறார், இதை சில பிற்கால எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.[14]
இந்த உருவம் ஒரு டோகா போன்ற ஆடையை அணிந்துள்ளது, இது ஒரு தோள்பட்டை மட்டுமே மறைக்கும் வடிவத்துடன் உள்ளது.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ See for example the museum label illustrated below
- ↑ Kenoyer, 62 (quoted); Possehl, 114
- ↑ 3.0 3.1 Aruz, 385
- ↑ Possehl, 114 (quoted)
- ↑ Harappa
- ↑ Possehl, 114–115
- ↑ Possehl, 114
- ↑ Possehl, 115 (quoted); Aruz, 385; Singh (2008), 178
- ↑ Possehl, 115
- ↑ Shamsie (with quote); Tunio
- ↑ Possehl, 115–116; Aruz, 385–388; Kenoyer, 62–63; Harappa
- ↑ Kenoyer, 62 (quoted); though in Aruz, 385 Kenoyer is more cautious.
- ↑ Several sources say that when the piece was found, one eye had the inlay still in place, though many others say the existence of inlays in the original work is "possible" or "probable"; e.g. Aruz, 385 "may have held inlay".
- ↑ Aruz, 385; Possehl, 114–115; Harappa
- ↑ Possehl, 114–115; Aruz, 385