பூட்டானிதிசு

பட்டாம்பூச்சிப் பேரினம்
பூட்டானிதிசு
பூட்டானின் பெருமை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
பூட்டானிதிசு

அட்கின்சன், 1873
இனம்:
உரையினை காண்க

பூட்டானிதிசு (Bhutanitis) என்பது அழகிகள் பட்டாம்பூச்சிகளின் ஒரு பேரினமாகும். இப்பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.

பரவல்

தொகு

தென்மேற்கு சீனாவில், குறிப்பாக யுன்னான் மற்றும் சிச்சுவான் (சௌ, 2000) மற்றும் இதனை ஒட்டிய பூட்டானில் இந்த பேரினமானது உச்ச பன்முகத்தன்மையையுடன் காணப்படுகிறது. பூட்டானிதிசு லிடர்டாலி என்பது சீனா, பூட்டான், இந்தியா மற்றும் மியான்மர் (சௌ, 2000) ஆகிய நாடுகளில் காணப்படும் மிகவும் பரவலான சிற்றினமாகும். இருப்பினும் தாய்லாந்தில் வாழ்விட அழிவு காரணமாக உள்ளூரில் அழிந்து வருகிறது. இன்றுவரை அறியப்பட்ட இளம்புழுக்கள் உணவாக உண்ணும் தாவரங்கள் அனைத்தும் அரிசுடோலோகியேசியே குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

அனைத்து பூட்டானிசிசு சிற்றினங்களும் சிட்டிசு (CITES) பின் இணைப்பு II-ல் பட்டியலிடப்பட்டுள்ளன. இது இவற்றின் பன்னாட்டு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாக, இவை பட்டாம்பூச்சி சேகரிப்பாளர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன; குறிப்பாக மூன்று இனங்கள் (பூ. மான்சுபீல்டி, பூ. லுட்லோவி மற்றும் பூ. தைடினா) ஒப்பீட்டளவில் சமீப காலம் வரை மிகச் சில மாதிரிகளிலிருந்து இவை அறியப்பட்டன. இருப்பினும், பூ. தைடினா மற்றும் பூ . மான்சுபீல்டி புல்கிறிசுட்ரியாட்டாவின் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் சமீபத்தில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. முக்கியமாகச் சீனாவிலிருந்து, சேகரிப்பாளர்களின் தேவை திருப்திகரமாக இருப்பதை இது குறிக்கிறது.

வகைப்பாட்டியல்

தொகு

பூட்டானிதிசு பேரினத்தில் உள்ள இரு சிற்றினங்கள் பூ. நிக்ரிலிமா மற்றும் பூ. யுலோங்கென்சிசு[1] பி. தைதினா உடன் ஒத்ததாக உள்ளது. மற்றொரு சிற்றினம், பூ. மேன்சுபெலிதி புல்கிரிசுரையாட்டா சாய்குசா மற்றும் லீ, 1982[2] சௌ (1994)[3] மற்றும் சோவ்[4] ஆகியோரால் ஒரு தனிச் சிற்றினமாக கருதப்பட்டது. ஆனால் இது துணையினமாக மீண்டும் கருதப்பட்டது.[5]

சிற்றினங்கள்

தொகு
படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
  பூட்டானிதிசு லிடர்டாலி பூட்டான் புகழ் பூட்டான், வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள்.
  பூட்டானிதிசு தைடினா சீன மூன்று வால் அழகிகள் சீனா.
பூட்டானிதிசு மான்சுபீல்டி மான்சுபீல்டின் மூன்று வால் அழகிகள் சீனா.
பூட்டானிதிசு லுட்லோவி லுட்லோவின் பூட்டான் அழகிகள் பூட்டான் மற்றும் இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. Chou, I. A study on the rare butterflies of the genus Bhutanitis (Lepidoptera: Papilionidae) with descriptions of two new species [in Chinese]. Chou, I. (1992) A study on the rare butterflies of the genus Bhutanitis (Lepidoptera: Papilionidae) with descriptions of two new species [in Chinese]. Entomotaxonomia 14 (1): 48-54 (8 figs.); pl. 1. (1992).
  2. Saigusa, T.; Lee, C.-l. (1982) A Rare Papilionid Butterfly Bhutanitis mansfieldi (Riley), Its Rediscovery, New Subspecies and Phylogenetic Position. Tyô to Ga 33(1,2).
  3. Chou, I. (ed). Monographia Rhopalocerorum Sinensium (Monograph of Chinese Butterflies) [in Chinese]. Chou, I. (ed) (1994) Monographia Rhopalocerorum Sinensium (Monograph of Chinese Butterflies) [in Chinese]. , Henan Scientific and Technological Publishing House. (1994). source: Global Butterfly Information System
  4. Chou, I.; Yuan, F.; Wang, Y.-L. (2000) New Species, New Subspecies, and New Record of Butterflies (Lepidoptera: Papilionide) from China (II). Entomotaxonomia
  5. Hauser, CL., de Jong, R., Lamas, G., Robbins, R.K., Smith, C., and Vane-Wright, R.I. (2005). Papilionidae – revised GloBIS/GART species checklist (2nd draft). Available online at: [1] பரணிடப்பட்டது 2020-02-27 at the வந்தவழி இயந்திரம்
  • Collins, N. Mark; Morris, Michael G. (1985). Threatened Swallowtail Butterflies of the World: The IUCN Red Data Book. Gland & Cambridge: IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-88032-603-6.
  • Sorimachi, Y. 1994 Geographical and individual variations of Bhutanitis thaidina Apollo, 3: 77-87.(in Japanese).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டானிதிசு&oldid=3654376" இலிருந்து மீள்விக்கப்பட்டது