பூமா அகிலபிரியா
பூமா அகிலபிரியா ஆந்திராவை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
பூமா அகிலபிரியா | |
---|---|
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் | |
பதவியில் 2017–2019 | |
பின்னவர் | ரோஜா செல்வமணி |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | சோபா நாகி ரெட்டி |
பின்னவர் | கங்குலா பிஜேந்திர ரெட்டி |
தொகுதி | அல்லகட்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 2, 1987 |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (2016 –தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2016 வரை) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅகிலபிரியா 2 ஏப்ரல் 1987 அன்று[1] பூமா நாகி ரெட்டி மற்றும் சோபா நாகி ரெட்டி[2] ஆகியோருக்கு ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டாவில் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு தனது தாயார் சாலை விபத்தில் இறந்ததால் காலியாக இருந்த அல்லகட்டா இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது.[3][4] ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2014 ஆம் ஆண்டு, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி , அல்லகட்டா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
பின்னர் 2016 இல், இவர் தனது தந்தை பூமா நாகி ரெட்டியுடன் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[5] தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தின் கீழ் சுற்றுலா, தெலுங்கு மொழி மற்றும் கலாச்சார அமைச்சராக பணியாற்றினார்.[6][7][8][9] 2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அல்லகட்டா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கங்குலா பிஜேந்திர ரெட்டியிடம் தோல்வியடைந்தார். [10]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு2018 இல், இவர் தொழிலதிபர் பார்கவா ராம் என்பவரை மணந்தார். [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ India, The Hans (2017-04-03). "Akhila Priya gets lucky on her birthday". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ Arikatla, Venkat (2022-10-12). "Bhuma family in tatters over assets". greatandhra.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ Sreenivasulu, D. (2014-04-24). "YSRC MLA Sobha Nagireddy dies in road accident" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ysrc-mla-sobha-nagireddy-dies-in-road-accident/article5942956.ece.
- ↑ Staff Reporter (2019-04-04). "Two families vie for power in Allagadda" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/two-families-vie-for-power-in-allagadda/article26729951.ece.
- ↑ "Another YSR Congress Legislator Joins TDP In Andhra Pradesh". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ Telugu360 (2017-03-13). "Bhuma's daughter may be inducted into cabinet". Telugu360.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Former Andhra Pradesh Tourism Minister Bhuma Akhila Priya joins Nallamala stir". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ "CM Naidu tells Akhila Priya, Subba Reddy not to give him headache". The New Indian Express. Archived from the original on 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ "Irked by TDP leaders, Silpa Mohan Reddy quits". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). 2017-06-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ Staff Reporter (2019-05-25). "Bhuma family’s march in its bastions comes to an end" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/bhuma-familys-march-in-its-bastions-comes-to-an-end/article27249818.ece.
- ↑ "Bhuma Akhila Priya ties the knot with industrialist". பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.