பூவாடைக்காரி வழிபாடு
பூவாடைக்காரி அம்மன் வழிபாடு என்பது புடவையை வைத்து வழிபடும் வழக்கமாகும். பூ என்பதற்கு பூப்பு என்பது பொருள். [1] பூப்பு என்பதற்கு பூப்படைதல், மாதவிடாய் என்பது பொருள். ஒவ்வொரு வீட்டிலும் பருவம் எய்திய ஆண், பெண்கள் கன்னிகழிவதற்குமுன் இறந்துவிட்டால் அவர்களை வழிபடுவது பூவாடைக்காரி வழிபாடு ஆகும்.
அமைவிடம்
தொகுவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பூவாடைக்காரி வழிபாடு உள்ளது.
உடை படைத்தல்
தொகுபூவாடைக்காரி வழிபாட்டில் உருவச்சிலை இல்லை. இறந்த ஆண் முன்னோருக்கு வெள்ளைத் துண்டும், பெண் முன்னோருக்கு சிவப்புத் துண்டு அல்லது புடவையும் வைத்து வழிபடுவர். அவ்வாடைகளே முன்னோர்களாகக் கருதப்படுகிறது. மேலும் கரகம் சோடித்து அக்கரகத்தையே முன்னோர்களாகக் கருதுகின்றனர்.
கோயில் அமைப்பு
தொகுவீடுகளில் வழிபடும் வழக்கம் கொண்டோர் பூசை அறையில் படைக்கின்றனர்.
வழிபாடு
தொகுகுளக்கரையில் அல்லது கிணற்றங்கரையில் கரகம் சோடித்து அதை முன்னோராகக் கருதி அவர்களை அழைத்துவந்து பூசை அறையில் வைத்து வழிபடுவர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளில் இவ்வழிபாடு நடைபெறும்.
ஆடி மாதத்தில் புடவைக்காரி வழிபாடு நடத்தப்படுகிறது. [1]
வழிபடுவோர்
தொகுவன்னியர், துளுவ வேளாள முதலியார், ரெட்டியார், சைவப் பிள்ளை மற்றும் செட்டியார் போன்ற குலத்தினர் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
திருவிழா
தொகுகன்னிமார் அழைத்தல், பொங்கல் படையல், ஆடுகள், கோழிகள் பலியிடுதல், காடேறுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை திருவிழா வழிமுறைகளாகும். சில இடங்களில் இரண்டு மூன்று தினங்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. [1]
கோயில்கள்
தொகு- புதுக்கோட்டை நார்த்தாமலை பூவாடைக்காரி அம்மன் கோயில் [2]
- அன்னசாகரம் பூவாடைக்காரியம்மன் கோயில்
- அள்ளாளபுரம் புடவை காரியம்மன் கோயில்
- வாழைப்பந்தல் பூவாடைக்காரி கோயில்
உசாத்துணைகள்
தொகு- பெண்ணிய நோக்கில் செஞ்சி நாட்டுப்புற அம்மன் தெய்வங்கள், ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2008.
- துளசி. இராமசாமி, நெல்லை மாவட்ட நாட்டுப்புறத்தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1985
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "புடவைக்காரி வழிபாடு". Hindu Tamil Thisai. 24 ஜூலை, 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Muthu Mari Amman Temple : Muthu Mari Amman Muthu Mari Amman Temple Details | Muthu Mari Amman- Narthamalai | Tamilnadu Temple | முத்து மாரியம்மன்". temple.dinamalar.com.