ரெட்டியார் (Reddiar) எனப்படுவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் ரெட்டியார்கள் அதிகம் வசிக்கின்றார்கள்.

ரெட்டியார்
மொத்த மக்கள்தொகை
45,00,000[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ரெட்டி

ரெட்டியார்கள், ஆந்திர பிரதேசத்தில் இருந்து சாகுபடிக்கு வளமான மண்ணைத் தேடி, விசயநகர பேரரசின் போது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் குடியேறினர்.

பிரிவுகளும் கோத்திரங்களும்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் சாதியினரிடம் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன. அதுகுறித்த அட்டவணை இது. [1]

வ.எண். பிரிவு வாழும் இடங்கள் கோத்திரம்
1 சரவல்லியார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம் வீரசவல்லியார் கோத்திரம்
2 நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு, நன்னிகுளம், திருமலாபுரம், தாழகுளம், தனக்கர்குளம், கோலியன்குளம் வீரசவல்லியார் கோத்திரம்
3 கொண்டபெல்லம் (ஆந்திராவில் கொண்டபெல்லம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) செட்டிக்குறிச்சி வீரசவல்லியார் கோத்திரம்
4 கந்தலார் (ஆந்திராவில் கந்தலார் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, தாழகுளம் மிதுனபாலக் கோத்திரம்
5 இருவார்த்தார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
6 பூணுரர் மூலக்கரைப்பட்டி மிதுனபாலக் கோத்திரம்
7 மச்சார் (தெரியவில்லை) ரெங்கசமுத்திரம், மூலக்கரைப்பட்டி, பதைக்கம், காடங்குளம் விசுவநாத கோத்திரம்
8 வங்காளத்தார் (தெரியவில்லை) அருணாபுரம், சூரபுரம் விசுவநாத கோத்திரம்
9 ஆலிங்கார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
10 பிடித்தவல்லியார் (தெரியவில்லை) காரியாண்டி சிந்துபால கோத்திரம்
11 பொக்கா ரெட்டி (தெரியவில்லை) சிங்கநேரி, கோலியன்குளம், மூலக்கரைப்பட்டி சிந்துபால கோத்திரம்
12 மயிலூரார் (தெரியவில்லை) கழுவூர், திருமாலாபுரம் சிந்துபால கோத்திரம்
13 சுண்டியார் (தெரியவில்லை) காரியாண்டி, பலசேரி சிந்துபால கோத்திரம்
14 ஆரூரார் (தெரியவில்லை) பதைக்கம் சிந்துபால கோத்திரம்
15 கொக்கடியார் (தெரியவில்லை) தெரியவில்லை சிந்துபால கோத்திரம்
16 பாலட்டார் (தெரியவில்லை) திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி சிந்துபால கோத்திரம்
17 ஈங்குலாரு (தெரியவில்லை) கூந்தன்குளம், வெங்கட்டாபுரம், அரவ்நேரி, ஜெகனாதபுரம்(செண்பகராம நல்லூர் ) , கால்கரை, பெத்தரெங்கபுரம் பல்லமலா கோத்திரம்
18 தடையலார் (தெரியவில்லை) பதைக்கம், முனைஞ்சிப்பட்டி பல்லமலா கோத்திரம்
19 கொண்டபுரத்தார் ((ஆந்திராவில் கொண்டபுரம் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி மதுராந்தக் கோத்திரம்
20 நிலவல்லியார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி, பதைக்கம் இரதணயல கோத்திரம்
21 ராஜமகேந்திரம் ((ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) வெங்கட்டாபுரம், திருமலாபுரம், ராமகிருஷ்ணபுரம், மூலக்கரைப்பட்டி, கோலியன்குளம் அனுபால கோத்திரம்
22 கொம்புரார் (தெரியவில்லை) வெங்கட்டாபுரம், மூலக்கரைப்பட்டி, சிதம்பராபுரம் பிரமல கோத்திரம்
23 கொலூரார் (தெரியவில்லை) மூலக்கரைப்பட்டி கனகமள்ளா கோத்திரம்
24 கொண்டபல்லி ((ஆந்திராவில் கொண்டபல்லி பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை பிரமல கோத்திரம்
25 ஒழுத்துலார் ((ஆந்திராவில் ஒங்கலூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது)) தெரியவில்லை விஷ்ணுபால கோத்திரம்

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 53 முதல் 55 வரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டியார்&oldid=3605917" இலிருந்து மீள்விக்கப்பட்டது