பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு

பெஞ்சமின் ஆர்தார்ப் கவுல்டு (Benjamin Apthorp Gould) (செப்டம்பர் 27, 1824 – நவம்பர் 26, 1896) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியல் இதழைத் தொடங்கியதற்காகவும் கவுல்டு பட்டையின் கண்டுபிடிப்புக்காகவும் அர்ஜெண்டினா வான்காணகத்தை உருவாக்கியதற்காகவும் அர்ஜெண்டீனா தேசிய வானிலையியல் சேவையை தோற்றுவித்ததற்காகவும் பெயர்பெற்றவர்.

பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு
Benjamin Apthorp Gould
Benjamin Apthorp Gould (Harper's Engraving).jpg
பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு
பிறப்புசெப்டம்பர் 27, 1824(1824-09-27)
போசுடன், மசாசூசட்
இறப்புநவம்பர் 26, 1896(1896-11-26) (அகவை 72)
கேம்பிரிட்ஜ், மசாசூசட்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு கல்லூரி
அறியப்படுவதுவானியல் இதழ்
கவுல்டு பட்டை
கவுல்டு பெயரீடுகள்
தாக்கம் 
செலுத்தியோர்
சி.எஃப். காசு
விருதுகள்ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1887)
துணைவர்மேரி ஆர்தார்ப் குவின்சி கவுல்டு

வாழ்க்கைதொகு

இவர் மசாசூசட், போசுடனில் பிறந்தார். இவரது தந்தையார் போசுடன் இலத்தீன் பள்ளியின் முதல்வரான பெஞ்சமின் ஆர்தார்ப் கவுல்டு ஆவார். இந்தப் பள்லியில் தான் ஆர்தார்ப் கவுல்டு கல்வி கற்றார். இவரது தாயார் உலுக்ரீழ்சியா தானா கோடார்டு ஆவார்.[1] கவிஞர் அன்ன பிளேகு கவுல்டு இவரது மாமா ஆவார். ஆர்வார்டு கல்லூரியில் சேர்ந்து 1844 இல் பட்டம் பெற்றதும், இவர் செருமனி, கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் காசின் கீழ் கணிதவியலும் வானியலும் படித்தார். அப்போது இவர் வால்வெள்ளிகள், குறுங்கோள்கள் ஆகியவற்றின் நோக்கீடுகள் பற்றியும் அவற்றின் இயக்கம் பற்றியும் 29 ஆய்வுரைகலை வெளியிட்டார். அமெரிக்கவிலேயே முதன்முதலாக வானியலில் முனைவர் பட்டம் பெற்றதும், ஐரோப்பாவின் வான்காணகங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அமெரிக்காவில் வானியலை மேம்படுத்த என்ன செய்யவேண்டும் என அறிவுரைகல் கேட்டுப் பெற்றார். அங்கு இவருக்கு Astronomische Nachrichten இதழின் அமைப்பில் ஒரு வானியல் இதழை அமெரிக்காவில் தொடங்குமாறு முதன்மையான அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு