பெடோமின் பூனைப்பாம்பு
பெடோமின் பூனைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போயிகா
|
இனம்: | போ. பெட்டோமி
|
இருசொற் பெயரீடு | |
போயிகா பெட்டோமி வால், 1909 |
போயிகா பெட்டோமி (Boiga beddomei), என்பது பொதுவாக பெடோமின் பூனைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தில் உள்ள பின்புற-பற்கள் கொண்ட பாம்பு வகையாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மகாராட்டிரா, குசராத்து மற்றும் கோவா மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி.[2]
புவியியல் வரம்பு
தொகுபெடோமி பூனைப்பாம்பு இந்தியாவில், மகாராட்டிரா மாநிலத்தில் (பீமாசங்கர், முல்சி, கொய்னா, வசோட்டா) மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இது குசராத்து, கோவா மற்றும் வடக்கு கருநாடகா[3] மலைத்தொடர்களிலும் காணப்படுகிறது.[4]
சொற்பிறப்பியல்
தொகுபிரித்தானியத் தரைப்படை அதிகாரி மற்றும் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் (1830-1911) என்பவரின் பெயரால் போயிகா பெட்டோமி என இந்தப் பாம்பு பெயரிடப்பட்டது. [5]
விளக்கம்
தொகுபெடோமி பூனைப்பாம்பு ஒரு மெலிந்த பாம்பு ஆகும். தன் தலை கழுத்திலிருந்து வேறுபட்டுக் காணப்படும். முதுகெலும்பு செதில்கள் வலுவாக விரிவடைந்து காணப்படும். முதுகுபுறம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் அடர் பழுப்பு முதுகெலும்பு குறுக்கு பட்டைகளுடன் இருக்கும். வயிற்றுப்பகுதியின் மேற்பரப்பு மஞ்சள்-நுரை நிறத்தில், கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
செதில்கள்
தொகு19 சாய்ந்த வரிசைகளில் முதுகு செதில்கள் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். முதுகெலும்பு பகுதியில் இவை வலுவாக விரிவடைந்து அறுகோணமாகக் காணப்படும். வயிற்றுப்புறத்தில் 238-252 எண்ணிக்கையிலும் வாலின் பக்கப்பகுதியில் 113-127 என்ற எண்ணிக்கையிலும் காணப்படும்.
வாழ்விடம்
தொகுபெடோமி பூனைப்பாம்பின் விருப்பமான இயற்கை வாழ்விடம் 1,000 m (3,300 அடி) உயரத்தில் உள்ள பசுமையான காடுகள் ஆகும். இது இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. மரங்களில் வாழக்கூடியது.
உணவு
தொகுபெடோமி பூனைப்பாம்பின் முக்கிய உணவாக ஓந்தி, தரைப்பல்லி, அரணை மற்றும் தவளை உள்ளது.
இனப்பெருக்கம்
தொகுபெடோமி பூனைப்பாம்பின் முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Captain, A.; Srinivasulu, C.; Srinivasulu, B.; Vyas, R.; Mohapatra, P.; Kulkarni, N.U. (2021). "Boiga beddomei". IUCN Red List of Threatened Species 2021: e.T176619A123302891. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T176619A123302891.en. https://www.iucnredlist.org/species/176619/123302891. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Ganesh, S.R.; Achyuthan, N.S.; Chandramouli, S.R.; Vogel, G. (2020). "Taxonomic revision of the Boiga ceylonensis group (Serpentes: Colubridae): re-examination of type specimens, redefinition of nominate taxa and an updated key". Zootaxa 4779 (3): 301–322. doi:10.11646/zootaxa.4779.3.
- ↑ "Karnataka", Wikipedia (in ஆங்கிலம்), 2022-12-10, பார்க்கப்பட்ட நாள் 2022-12-18
- ↑ Ganesh, S.R.; Mallik, A.K.; Achyuthan, N.S.; Shanker, K.; Vogel, G. (2021). "A new species of Boiga (Serpentes: Colubridae) from the Southern Western Ghats of India with a molecular phylogeny and expanded characterisation of related species". Zootaxa 4981 (3): 449–468. doi:10.11646/zootaxa.4981.3.2.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).