பெட்டு சிங்
பெட்டு சிங் (பிறப்பு:25 நவம்பர் 1964 ,இறப்பு: 4 அக்டோபர் 2013) ஒரு தன்பாலீர்ப்பு பெண் செயற்பாட்டாளராவர்,இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள இராணுவ குடும்பத்தில் பிறந்த இவர், [1] லெஸ்பியன் உரிமைகளுக்காக போராடுவதற்காக 1997 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள நாஸ் அறக்கட்டளையின் கீழ் சங்கினி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார். [2] [3] இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், பெண்கள் மீது ஈர்க்கப்படும் பெண்கள் மற்றும் பெண்ணாகப் பிறந்தும் ஆணாக உணரும் நபர்கள் ஆகியோரின் நலன்காக்க அவசரகால பதில் சேவைகளை வழங்கிவருகிறது. உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் பால்புதுமையினருக்கு (லெஸ்பியன், இருபாலினம் மற்றும் திருநங்கை) தேவையான ஆலோசனைகள், உரிமைகள், சுகாதார திட்டங்கள் மற்றும் உதவிகளை வழங்கி வரும் இந்தியாவின் மிகப் பழமையான அரசு சாரா அமைப்பாகும். சங்கினி இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட சில லெஸ்பியன் அமைப்புகளில் முதன்மையானதாகும். [4] [5] [6]
பெட்டு சிங்
| |
---|---|
பிறந்தது | நவம்பர் 25, 1964 |
இறந்தார் | அக்டோபர் 4, 2013 | (வயது 48)
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபெட்டு சிங் மீரட்டில் உள்ள சோபியா பெண்கள் பள்ளியில் தனது பள்ளிக்கல்வியை முடித்த இவர், மீரட் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். கல்லூரி பாடகர் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், மீரட் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் தெற்கு தில்லியிலுள்ள தொழிற்கல்வி நிறுவனத்தில் படித்துள்ளார். சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுதல், ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளதோடு, கராத்தேவில் பிளாக் பெல்ட் மற்றும் ஜூடோ பயிற்சியும் பெற்றுள்ளார். முன்னதாக தில்லியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.[7] பின்னர் டெல்லியின் ஆர்.கே.புரத்தில் சாப்பாட்டு மேசைகள் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
செயற்பாடுகள்
தொகுதங்களின் பாலின அடையாளத்தை சரிவர புரிந்து கொள்ள இயலாத பெண்கள், பால்புதுமையில் தங்களை பொருத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் போன்றோர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், கேலிகள், கிண்டல்கள்,பாகுபாடுகள் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் பெண்களுக்கு உதவுவதற்காக 1997 ஆம் ஆண்டில் பெட்டு சிங் சங்கினி அமைப்பை தொடங்கினார்.தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக அடையாளம் கண்டுகொண்டுள்ள இவர்,சங்கினி அமைப்பைத் தொடங்கியபோது கேத் என்ற பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் தங்களைப் போன்ற பெண்களுக்கான தங்குமிடத்தை நடத்த ஆரம்பித்தனர். மேலும் மற்றொரு நண்பருடன் இணைந்து மாயா ஷங்கருடன் சங்கினிக்காக பணியாற்றியுள்ளார். தற்பாலிர்ப்பு பெண்கள் ஆலோசனை பெற தங்களை அணுக ஏதுவாக இலவச அழைப்பு எண் ஒன்றை அமைத்து, அதன் மூலம் எந்த நேரத்திலும் தேவைப்படும் பெண்கள் அமைப்பினரை அணுக ஏற்பாடுசெய்தனர். மேலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவும் பல்வேறு இடங்களில் குழுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். சங்கினியின் கவனம் அவசர உதவி அளித்தால் மற்றும் லெஸ்பியன் சமூக பெண்களை ஒருங்கிணைத்து கட்டியெழுப்புவதில் முதன்மையாக இருந்தது. மேலும் தற்பாலிர்ப்பு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், சட்டப்பாதுகாப்புடன் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் அவர்களுக்கான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் உதவியது. சங்கினி அமைப்பு தில்லியிலிருந்து கல்கத்தா, பம்பாய் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல், சங்கினி அமைப்பினர், கல்லூரிகளுக்குச் சென்று பாலீர்ப்பு பற்றியும், பாலின தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை மென்மேலும் அதிகரிக்கவும், தற்பாலிர்ப்பு, இருபாலீர்ப்பு மற்றும் மூன்றாம் பாலினம் பற்றிய அடையாளப் புரிதல் இல்லாத பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல்களை நடத்தத் தொடங்கினார். மேற்சொன்ன தலைப்புகளில் வெளியான திரைப்படங்களை திரையிட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் திகார் பெண்கள் சிறையில் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியையும் தொடங்கியுள்ளனர்.
விருதுகள்
தொகுபெட்டு சிங்கிற்கு மே 31, 2015 அன்று காஷிஷ் ரெயின்போ போராளி விருது வழங்கப்பட்டது. மரணத்திற்கு பின்பாக இந்த விருதை பெற்றுள்ள முதல் நபர் இவரே.[8] காஷிஷ் மும்பை சர்வதேச பால்புதுமையினர் திரைப்பட விழாவால் 2015 இல் நிறுவப்பட்ட இவ்விருது, ந.ந.ஈ.தி உரிமைகளில் பணிபுரியும் ந.ந.ஈ.தி நபர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது..
இறப்பு
தொகுபெட்டு சிங் தனது 49வது வயதில், அக்டோபர் 3, 2013 அன்று மரணித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obituary : Betu Singh, Lesbian Rights Activist (1964-2013)". Gaysi. 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
- ↑ "INFOSEM : Sangini (India) Trust, New Delhi". www.infosem.org. Archived from the original on 2017-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
- ↑ Costa, Daniela. ""Purple Skies" is a look into the lesbian, bisexual and trans community in India". After Ellen. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
- ↑ "Gay Rights in India: The Struggle Continues". Making Contact. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
- ↑ "Betu Singh, Leading Lesbian Activist From India, Passes Away - Gaylaxy Magazine". Gaylaxy Magazine. 2013-10-05. http://www.gaylaxymag.com/latest-news/betu-singh-leading-lesbian-activist-from-india-passes-away/#gs.WpTyICY.
- ↑ "The Advocate". Here. 23 May 2006. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
- ↑ "Betu Singh, Leading Lesbian Activist From India, Passes Away - Gaylaxy Magazine". http://www.gaylaxymag.com/latest-news/betu-singh-leading-lesbian-activist-from-india-passes-away/#gs.WpTyICY."Betu Singh, Leading Lesbian Activist From India, Passes Away - Gaylaxy Magazine". Gaylaxy Magazine. 2013-10-05. Retrieved 2016-11-19.
- ↑ "KASHISH Rainbow Warrior Award 2015 for Betu Singh - KASHISH Mumbai International Queer Film Festival" (in en-US). KASHISH Mumbai International Queer Film Festival. 2015-06-02 இம் மூலத்தில் இருந்து 2016-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119182734/http://mumbaiqueerfest.com/2015/06/kashish-rainbow-warrior-award-2015-for-betu-singh/.. KASHISH Mumbai International Queer Film Festival. 2015-06-02. Archived from the original பரணிடப்பட்டது 2016-11-19 at the வந்தவழி இயந்திரம் on 2016-11-19. Retrieved 2016-11-19.