பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் (மலாய்; Dewan Filharmonik Petronas; ஆங்கிலம்: Petronas Philharmonic Hall) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (KLCC) கட்டப்பட்ட மலேசியாவின் முதல் கச்சேரி அரங்கம் ஆகும்.[1]
பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் | |
அமைவிடம் | பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா |
---|---|
ஆட்கூற்றுகள் | 3°09′27″N 101°42′44″E / 3.1576°N 101.7121°E |
உரிமையாளர் | கேஎல்சிசி சொத்து நிறுவனம் (KLCC Property Holdings Berhad) |
வகை | கச்சேரி அரங்கம் |
இருக்கை வகை | அரங்க இருக்கைகள், சதுக்க இருக்கைகள், கார்ப்பரேட் அறைகள் மற்றும் அரச அறைகள் |
இருக்கை எண்ணிக்கை | 920 இடங்கள் |
கட்டுமானம் | |
கட்டப்பட்டது | 1 சனவரி 1996 |
திறக்கப்பட்டது | 17 ஆகஸ்டு 1998 |
வடிவமைப்பாளர் | சீசர் பெல்லி & அசோசியேட்ஸ் (வடிவமைப்பு); கிர்கேகார்ட் அசோசியேட்ஸ் (ஒலியியல்) |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
இந்த அரங்கம் மலேசிய பில்லார்மோனிக் இசைக்குழுவிற்கு (Malaysian Philharmonic Orchestra) சொந்தமான அரங்கமாகும். நியூயார்க் பில்லார்மோனிக் (New York Philharmonic), பிலடெல்பியா ஆர்கெஸ்ட்ரா (Philadelphia Orchestra), பிபிசி சிம்பொனி (BBC Symphony) மற்றும் வியன்னா சிம்பொனி (Vienna Symphony) போன்ற உலகின் பல முன்னணி இசைக் குழுக்கள் இந்த அரங்கத்தில் கச்சேரிகளை நடத்தியுள்ளன.[2][3]
பொது
தொகு19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாரம்பரிய இசை அரங்குகளின் வடிவமைப்பு அடிப்படையில் பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் சீசர் பெல்லி (Cesar Pelli) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அரங்கம் 920 இருக்கைகளைக் கொண்டுள்ளது; மற்றும் அரங்க இருக்கைகள், சதுக்க இருக்கைகள், கூட்டாண்மை அறைத் தொகுதிகள் (Corporate Suites) மற்றும் அரச அறைகள் என பல்வேறான இருக்கை வசதிகள் உள்ளன.[3][4]
மேடையின் தளம் நெகிழ்வுத் தன்மைக்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மேடைத்தளம் ஏறக்குறைய 297 மீ2 பரப்பளவைக் கொண்டது; மேலும் 369 மீ2 வரை அகலப் படுத்தலாம். 45 இசைக்கலைஞர்களுக்கு இடமளிக்கும் வகையில் மேடைத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[5]
வரலாறு
தொகுபெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களின் அடிப்படைத் தளத்தின் ஒரு பகுதியாக 1 சனவரி 1995 அன்று பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கத்தின் கட்டுமானம் தொடங்கியது. ஓர் ஆண்டு கழித்து, 1996-ஆம் ஆண்டு அதே தேதியில் கட்டுமானம் நிறைவடைந்தது; மேலும் 1997-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றன.
மலேசிய குழுவிசைக் குழுவின் (Malaysian Philharmonic Orchestra) புரவலர் துன் டாக்டர். சித்தி அஸ்மா முகமட் அலி; மற்றும் அவரின் கணவர் மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோரால் 17 ஆகஸ்டு 1998 அன்று பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம் முறைப்படி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[3]
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dewan Filharmonik PETRONAS, Level Two, Tower Two, PETRONAS Twin Towers, Kuala Lumpur City Centre". MPO (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ “Petronas Philharmonic Hall". Kuala Lumpur attraction site. Retrieved 31 July 2018
- ↑ 3.0 3.1 3.2 ""Hall Intro"". DFP site. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
- ↑ "Dewan Filharmonik PETRONAS, located in the middle of the PETRONAS Twin Towers, is a concert hall dedicated to classical music. Home to the Malaysian Philharmonic Orchestra". 2024 Tripadvisor LLC. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ “Stage and orchestra pit". DFP site. Retrieved 2 August 2018