பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 (Protection of Women from Domestic Violence Act, 2005) என்பது இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்றச் சட்டம் ஆகும், இது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. இது இந்திய அரசு மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 26 அக்டோபர் 2006 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய சட்டத்தில் முதன்முறையாக இந்த சட்டம் "வீட்டு வன்முறை" என்ற வரையறையை வழங்குகிறது, இந்த வரையறை பரந்த மற்றும் உடல் வன்முறை மட்டுமல்லாமல், உணர்ச்சி/வாய்மொழி, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் போன்ற பிற வன்முறைகளையும் உள்ளடக்கியது. இது குற்றவியல் அமலாக்கத்தினை விட , பாதுகாப்பு உத்தரவுகளுகளை முதன்மையாகக் கொண்ட ஒரு குற்றவியல் சட்டம் ஆகும்.

வரையறைகள்தொகு

வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளிலிருந்து வேறுபட்டது, இது குடும்ப வன்முறையை உள்ளடக்கியது . மேலும், இந்தச் சட்டமானது யாரைப் பாதுகாக்கிறது என்பதற்கான பரந்த வரையறையையும் வழங்குகிறது.[1]

சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட நபர் "பிரதிவாதியுடன் வீட்டு உறவில் இருக்கும் அல்லது பிரதிவாதியால் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டும் எந்தவொரு பெண்ணாகவோ இருக்கலாம்" என வரையறுக்கப்படுகிறார்.[2] இந்த சட்டம் பெண்களை தங்கள் கணவன்-மனைவி உறவுகளுக்குள் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டு உறவில் இருக்கும் மக்களுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்களையும் பாதுகாக்கிறது. இது திருமணத்தின் மூலம் உருவாகும் தங்கள் உறவுக்காரர்களிடம் இருந்தும் ஏற்படும் வன்முறைகளில் இருந்தும் பெண்களைப் பாதுகாக்கிறது (எ.கா: கணவன்-மனைவி, மருமகளுடன் மாமனார்/மாமியார்/போன்றவை), இரத்தத்தால் உருவாகும் உறவுகள் (எ.கா: தந்தை-மகள், சகோதரி- சகோதரர்), தத்தெடுப்பு மூலம் உருவாகும் உறவுகள் (எ.கா: தத்தெடுத்த மகள்-தந்தை),இந்தச் சட்டம் திருமணம் அல்லாத உறவுகளில் வாழும் பெண்களுக்கும் அவர்களது உரவினர்கள் மூலம் ஏற்படும் வன்முகளைல் இருந்து பெண்களைப் பாதுகாப்பை வழங்கும் முதல் சட்டமாக கருதப்படுகிறது.[3]

வீட்டு வன்முறை சட்டத்தின் பிரிவு 3 இல் வீட்டு வன்முறை என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது [4] "பிரதிவாதியின் எந்தவொரு செயலோ, ஆணை வழங்குதல் அல்லது நடத்தை ஆகியவை பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்குமானால் அது குடும்ப வன்முறையாக இருக்கும்:

மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல், வாய்மொழி மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் மற்றும் பொருளாதார துன்புறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது; அல்லது

வரதட்சணை அல்லது பிற சொத்து அல்லது மதிப்புமிக்க பாதுகாப்பிற்காக சட்டவிரோத தேவையை பூர்த்தி செய்ய பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவளுடன் தொடர்புடைய வேறு எந்த நபரையும் வற்புறுத்துதல், தீங்கு விளைவித்தல், காயப்படுத்துதல் அல்லது ஆபத்தை ஏற்படுத்துதல்; அல்லது

உட்பிரிவு (a) அல்லது உட்பிரிவு (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நடத்தையாலும் பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவளுடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் அச்சுறுத்துதல்; அல்லது.

பாதிக்கப்பட்ட நபர் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ காயமடையலாம் அல்லது தீங்கு விளைவிக்கலாம். "

இந்த பிரிவு உடல் வன்முறை மட்டுமல்லாடு, உணர்ச்சி/வாய்மொழி, பாலியல் மற்றும் பொருளாதார துன்புரறுத்தல் போன்ற பிற வன்முறைகளையும் அத்தியாயம் 1 இல் உள்ளடக்கியது. [5][6]

வாய்ப்புதொகு

கணவன் அல்லது ஆண் துணையாளர் அல்லது அவரது உறவினர்களின் குடும்ப வன்முறையிலிருந்து மனைவி அல்லது பெண் துணையாளாருக்கு பாதுகாப்பை வழங்குவதனை இந்தச் சட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது, சகோதரிகள், விதவைகள் போன்ற ஒரு குடும்பத்தில் வாழும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதனை இந்த சட்டம் உள்ளடக்கியது.[7]

சான்றுகள்தொகு

  1. Datta, Damayanti (4 December 2006). "The new laws of marriage". India Today. 29 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Protection of Women From Domestic Violence Act, 2005" (PDF). Government of India Legislative Department. 18 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. AGRAWAL, ANUJA (2012). "Law and 'Live-in' Relationships in India". Economic and Political Weekly 47 (39): 50–56. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/41720191. 
  4. "Archived copy" (PDF). 1 March 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 April 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  5. "The Protection of Women From Domestic Violence Act, 2005" (PDF). Government of India Legislative Department. 18 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. "India Code: Section Details". www.indiacode.nic.in. 18 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Protection of Women from Domestic Violence Act". evaw-global-database.unwomen.org. 19 February 2021 அன்று பார்க்கப்பட்டது.