பெண்மனம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தரராஜன் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் டி. கே. சண்முகம், வி. கே. ராமசாமி, எஸ். ஏ. நடராஜன், எம். வி. ராஜம்மா, எம். என். ராஜம் ஆகியோர் பிரதான பாத்திரங்களேற்று நடித்தனர்.[1]

பெண் மனம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புஎஸ். சௌந்தரராஜன்
திரைக்கதைதஞ்சை ராமையாதாஸ்
இசைகுன்னக்குடி வெங்கடராம ஐயர்
நடிப்புடி. கே. சண்முகம்
வி. கே. ராமசாமி
எஸ். ஏ. நடராஜன்
எம். வி. ராஜம்மா
எம். என். ராஜம்
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஎம். ஆர். புருஷோத்தம்
கலையகம்தமிழ்நாடு டாக்கீஸ்
வெளியீடுதிசம்பர் 5, 1952 (1952-12-05)(India)
ஓட்டம்15,959 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை தொகு

தஞ்சாவூர் ஜில்லா மாவூர் என்ற கிராமத்தில் பரமசிவம் என்ற விவசாயி வாழ்கிறான். மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்கிறான். திருமணச் செலவுக்காக ஊரிலுள்ள கருணாகரம் பிள்ளையிடம் கடன் வாங்குகிறான்.

பரமசிவத்துக்கு உழவுத்தொழிலில் வருமானம் போதவில்லை. கருணாகரம் பிள்ளை கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்தும்படி நெருக்குதல் தருகிறார்.

இதற்கிடையில் பரமசிவம் மீனாட்சி தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்து விடுகின்றன. கடன் சுமை மேலும் ஏறுகிறது.

மானத்துக்கு அஞ்சி, மனைவிக்கு கூடச் சொல்லாமல் ஊரை விட்டு வெளியேறுகிறான். கொழும்பு செல்லும் ஒரு நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அவர்களுடன் கொழும்பு செல்கிறான்.

மீனாட்சிக்குத் துணையாக இருந்த அவளின் மாமி இறக்கிறாள். கைக்குழந்தையும் இறக்கிறது.

கருணாகரம் பிள்ளை பணத்துக்காக வீட்டைத் தான் எடுத்துக் கொண்டு மீனாட்சியையும் குழந்தைகளையும் துரத்தி விடுகிறார்.

மீனாட்சி குழந்தைகளுடன் ஆற்றில் குதிக்க எத்தனிக்கிறாள். அச்சமயம் ஒரு சாது குறுக்கிட்டு குழந்தைகளைக் காப்பாற்றி வாழும்படி சொல்கிறார்.

குழந்தைகளைக் காப்பாற்ற கருணாகரம் பிள்ளையின் இச்சைக்குத் தன்னை பலிகொடுக்க மீனாட்சி சித்தமாகிறாள். ஆனால் ஒரு தீ விபத்துக் காரணமாக அச் சிக்கலிலிருந்து விடுபடுகிறாள்.

ஊரை விட்டுச் சென்ற பரமசிவம் நடுக்கடலில் புயலில் சிக்கி, பின் ஒருவாறு அலைகளால் ஒதுக்கப்பட்டு கொழும்பு சென்றடைகிறான்.

மீனாட்சி தன் சொந்த உழைப்பால் குழந்தைகளை படிக்க வைக்கிறாள். அவள் அதிக செல்லம் கொடுத்ததால் இளையவனான வேலு தத்தாரியாகத் திரிகிறான். ஆனால் பெரியவனான கணேசன் பொறுப்புடன் குடும்பத்தைக் கவனிக்கிறான். கணேசனுக்குத் திருமணம் நடக்கிறது.

வேலு அண்ணியின் நகையைத் திருடுகிறான். ஒரு கொள்ளைக் கூட்டத்தில் சேருகிறான். ஒரு நாள் போலீசார் அவனைத் துரத்தி வர அவன் தாயிடம் தஞ்சம் கேட்கிறான். மீனாட்சி அவனைக் காப்பாற்றுகிறாள்.

பரமசிவம் கொழும்பில் ரிக்சா இழுக்கும் தொழில் செய்கிறான். ஒரு நாள் ஒரு இன்ஸ்பெக்டரின் குழந்தையை கார் விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக அந்தப் பெரிய மனிதர் அவனுக்கு வெகுமதி கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

வேலு தான் சிறுவயது முதல் காதலித்து வந்த மிட்டாதார் மகள் வள்ளியை கடத்திச் செல்கிறான்.

பரமசிவம் ஊருக்குத் திரும்பி வருகிறார். குடும்பம் எப்படி ஒன்று சேருகிறது என்பது தான் மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

[1]

தயாரிப்புக் குழு தொகு

தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை: எஸ். சௌந்தரராஜன்
கதை வசனம்: தஞ்சை ராமையாதாஸ்
ஒளிப்பதிவு: எம். ஆர். புருஷோத்தம்
கலையகம்: சியாமளா ஸ்டூடியோஸ்[1]

பாடல்கள் தொகு

பெண் மனம் படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வெங்கடராம ஐயர். அவருக்கு உதவியாக டி. ஏ. கல்யாணம் பணியாற்றினார். பின்னணி பாடியவர்கள்: எம். எல். வசந்தகுமாரி, ஏ. ஈ. சரஸ்வதி, ஏ. பி. கோமளா, டி. ஏ. மோதி, குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகியோர்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_மனம்&oldid=3728865" இருந்து மீள்விக்கப்பட்டது