பெனி, வங்காளதேசம்
பெனி (Feni) என்பது தென்கிழக்கு வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள ஓர் நகரமாகும். [2] இது பெனி சதர் உபசிலா மற்றும் பெனி மாவட்டத்தின் தலைமையகமாகும். இந்த நகரம் சுமார் 156,971 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது வங்காளதேசத்தின் 27 வது பெரிய நகரமாகும். இது இந்த பிராந்தியத்தில் மிகப் பழமையான நகராட்சி ஆகும். இது 1958 இல் நிறுவப்பட்டது.
பெனி
ஷம்ஷெர்நகர் | |
---|---|
ஆள்கூறுகள்: 23°1.1′N 91°24.6′E / 23.0183°N 91.4100°E | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | சிட்டகாங் கோட்டம் |
மாவட்டம் | பெனி மாவட்டம் |
நகரம் | 1929 |
நகராட்சி | 1958 |
நிர்வாக மாவட்ட நகரம் | 1984 |
அரசு | |
• வகை | மேயர் குழு |
• நிர்வாகம் | பெனி நகராட்சி |
• நகரத்தந்தை | ஹாஜி அலாவுதீன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.0 km2 (8.5 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,56,971 |
• அடர்த்தி | 7,100/km2 (18,000/sq mi) |
• தரம் | 27வது பெரிய நகரம் |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 3900[1] |
சர்வதேச தொலைபேசி இணைப்பு எண் | +880 |
உள்ளூர் தொலைபேசி இணைப்பு எண் | +88-0331 |
வரலாறு
தொகுஇந்நகரம் 1929 இல் நடைமுறைக்கு வந்தது. நீண்ட காலமாக இந்த பகுதி சதுப்பு நிலமாக இருந்ததால் இதற்கு பெனி என்று பொருலாகும். தொடர்ச்சியான சில்டிங் செயல்முறை மனித வாழ்விடத்தை நிறுவுவதை சாத்தியமாக்கியது. இதன் விளைவாக தொலைதூர மற்றும் அருகிலுள்ள மக்கள் இந்த பகுதியை பெனி என்று அழைத்தனர். [3]
நிர்வாகம்
தொகுஇந்நகரம் 18 வார்டுகள் மற்றும் 35 மஹாலாக்களைக் கொண்ட ஒரு பௌரசாவைக் கொண்டுள்ளது. முழு நகரமும் பௌரசாவின் கீழ் உள்ளது [4]
நிலவியல்
தொகுநகரம் வங்காளதேசத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் 23.0186 ° வடக்கிலும் 91.3966 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.
புள்ளிவிவரங்கள்
தொகு2011 வங்காளதேச மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மொத்த மக்கள் தொகை 156,971 ஆகும். இதில் 82,554 ஆண்களும், 74,417 பெண்களும் அடங்குவர். ஒரு கிமீ 2 க்கு 7,135 நபர்கள். என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. நகரில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 31,468 ஆகும். [5]
கல்வி
தொகுநகரத்தில் கல்வியறிவு விகிதம் (7 ஆண்டுகள் மற்றும் 7 வயதுக்கு மேல்) 81.7% ஆகும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Staff. "ZIP Code database of Bangladesh". Geopostcodes.com. பார்க்கப்பட்ட நாள் 11 June 2008.
- ↑ "NGA GeoNames Database". National Geospatial-Intelligence Agency. Archived from the original on 22 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Population & Housing Census-2011" (PDF). Bangladesh Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
- ↑ "Population & Housing Census-2011" (PDF). Bangladesh Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
- ↑ "Population & Housing Census-2011" (PDF). Bangladesh Bureau of Statistics. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.