பென்சீன்சல்போனைல் குளோரைடு
பென்சீன்சல்போனைல் குளோரைடு (Benzenesulfonyl chloride) என்பது C6H5SO2Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். நிறமற்ற எண்ணெயான இது கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. வினைத்திறமிக்க N-H மற்றும் O-H பிணைப்பைக் கொண்டிருக்கும் சேர்மங்களுடன் இது வினைபுரிகிறது. முறையே அமீன்கள் மற்றும் ஆல்ககால்களுடன் சேர்ந்து உருவாகும் சல்போனமைடுகள் மற்றும் சல்போனேட்டு எசுத்தர்கள் தயாரிப்பில் இச்சேர்மம் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. பென்சீன்சல்போனைல் குளோரைடை ஒத்த தொலுயீன்சல்போனைல் குளோரைடு பெரும்பாலும் முன்னுரிமையுடன் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் அறை வெப்பநிலையில் இது திண்மமாகவும் கையாள்வதற்கு எளிமையானதாகவும் உள்ளது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்சல்போனைல் குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
98-09-9 | |
ChemSpider | 7091 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7369 |
| |
UNII | OI9V0QJV9N |
பண்புகள் | |
C6H5ClO2S | |
வாய்ப்பாட்டு எடை | 176.62 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 25 பாகை செல்சியசில் 1.384 கிராம்/மில்லி லிட்டர் |
உருகுநிலை | 13 முதல் 14 °C (55 முதல் 57 °F; 286 முதல் 287 K) |
வினை | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சீன்சல்போனிக் அமிலத்தை குளோரினேற்றம் செய்து பென்சீன்சல்போனைல் குளோரைடை தயாரிக்கலாம். மாற்றாக இதன் உப்புகளை பாசுபரசு ஆக்சிகுளோரைடுடன் [1] சேர்த்து அல்லது பென்சீனை குளோரோகந்தக அமிலத்துடன் சேர்த்தும் இதை தயாரிக்கலாம். அமீன்களைக் கண்டறிய உதவும் சோதனையான இன்சுபெர்க் வினையில் பென்சீன்சல்போனைல் குளோரைடும் பங்கவகிக்கிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Roger Adams, C. S. Marvel, H. T. Clarke, G. S. Babcock, and T. F. Murray "Benzenesulfonyl chloride" Org. Synth. 1921, vol. 1, p. 21. எஆசு:10.15227/orgsyn.001.0021
- ↑ Ralph L. Shriner, Christine K. F. Hermann, Terence C. Morrill, David Y. Curtin, Reynold C. Fuson "The Systematic Identification of Organic Compounds", 8th Edition, 2003, Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-21503-5