பென்சைல் கார்பமேட்டு
பென்சைல் கார்பமேட்டு (Benzyl carbamate) C6H5CH2OC(O)NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பென்சைல் குளோரோபார்மமேட்டுடன் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டாலும் கூட கார்பமிக் அமிலம் (O=C(OH)(NH2)) மற்றும் பென்சைல் ஆல்க்ககாலுடைய எசுத்தர் என்ற வகையிலும் இது பார்க்கப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சைல் கார்பமேட்டு | |
வேறு பெயர்கள்
கார்பமிக் அமிலம்,பீனைல்மெத்தில் ஈதர்
| |
இனங்காட்டிகள் | |
621-84-1 | |
ChEMBL | ChEMBL2259788 |
ChemSpider | 11638 |
EC number | 210-710-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12136 |
| |
UNII | 7890Q001S7 |
பண்புகள் | |
C8H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 151.17 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 88 °C (190 °F; 361 K) |
மிதமாக | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் பென்சைல் கார்பமேட்டு கரிம கரைப்பான்களில் நன்றாகவும் தண்ணீரில் மிதமாகவும் கரைகிறது. முதல்நிலை அமீன்களை தயாரிக்கும்போது பென்சைல் கார்பமேட்டு அமோனியாவின் பாதுகாக்கப்பட்ட நிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. என் – ஆல்க்கைலேற்றம் நிகழ்ந்த பின்னர் இலூயிசு அமிலத்துடன் C6H5CH2OC(O) தொகுதி நீக்கப்படுகிறது.[2]
பாதுகாப்பு
தொகுபயன்படுத்திய பிறகு நன்கு கைகளை கழுவ வேண்டும். அசுத்தமான ஆடைகளை அகற்றி மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு தோய்க்க வேண்டும். தோல் மற்றும் கண்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உட்கொள்வதையும் உள்ளிழுப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் இறுக்கமாக மூடிய கொள்கலனில் சேமிக்கலாம். . நீடித்த அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்த பாதுகாப்பு கையுறைகளைப் பயன்படுத்துதல் நலம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Meyer, Hartmut; Beck, Albert K.; Sebesta, Radovan; Seebach, Dieter (2008). "Benzyl Isopropoxymethyl Carbamate - an Aminomethylating Reagent for Mannich Reactions of Titanium Enolates". Organic Syntheses 85: 287. doi:10.15227/orgsyn.085.0287.
- ↑ Sanchez-Sancho, Francisco; Romero, Jose Antonio; Fernandez-Ibanez, M. Angeles (2010). "Benzyl Carbamate". E-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rn01206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0471936237.