பென்சோதயோபீன்
பென்சோதயோபீன் (Benzothiophene) என்பது C8H6S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அரோமாட்டிக்கு சேர்மமான இதன் மணம் நாப்தலீன் உருண்டைகளின் மணத்தை ஒத்ததாக இருக்கும். இயற்கையாகவே நிலக்கரி தார் போன்ற பெட்ரோலியம் தொடர்பான படிவுகளில் ஓர் அங்கமாக தோன்றுகிறது. பென்சோதயோபீன் சேர்மம் வீட்டு உபயோகத்திற்கு பென்சோ[பி]தயோபீனுடன் கூடுதலாக, இரண்டாவது மாற்றியன் பென்சோ[சி]தயோபீன் என்பதும் அறியப்படுகிறது. [3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-பென்சோதயோபீன் | |
வேறு பெயர்கள்
பென்சோ[பி]தயோபீன்
தயாநாப்தலீன் பென்சோதயோபியூரான் | |
இனங்காட்டிகள் | |
95-15-8 | |
ChEBI | CHEBI:35858 |
ChEMBL | ChEMBL87112 |
ChemSpider | 6951 |
EC number | 202-395-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7221 [b] |
வே.ந.வி.ப எண் | 202-395-7 |
| |
UNII | 073790YQ2G |
பண்புகள் | |
C8H6S | |
வாய்ப்பாட்டு எடை | 134.20 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.15 கி/செ.மீ3 |
உருகுநிலை | 32 °C (90 °F; 305 K) |
கொதிநிலை | 221 °C (430 °F; 494 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H411 | |
P264, P270, P273, P301+312, P330, P391, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சோதயோபீன் பொதுவாக பெரிய உயிரிமுனைப்பு கொண்ட கட்டமைப்புகள் தொகுப்புக்கான தொடக்கப் பொருளாக ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. இரலாக்சிபீன், சைலியூட்டன் மற்றும் செர்ட்டகோனசோல் மற்றும் பி.டி.சி.பி எனப்படும் பெனிசைக்கிலிடின் உள்ளிட்ட மருந்துகளின் வேதியியல் கட்டமைப்புகளுக்குள்ளும் பென்சோதயோபீன் காணப்படுகிறது. தயோயிண்டிகோ போன்ற சாயங்களின் உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 9232
- ↑ 1-Benzothiophene at Sigma-Aldrich
- ↑ Cava, Michael P.; Lakshmikantham, M. V. (1975). "Nonclassical Condensed Thiophenes". Accounts of Chemical Research 8: 139-44. doi:10.1021/ar50088a005.