பெய்லி அற்புத மாம்பழம்
பெய்லி அற்புத மாம்பழம் (Bailey's Marvel) என்பது தென்மேற்கு புளோரிடாவில் தோன்றிய இடைக்கால மாம்பழ வகைகளுள் ஒன்று.
பெய்லி அற்புத மாம்பழம் Mangifera 'Bailey's Marvel' | |
---|---|
புளோரிடா, ரெட் லாண்ட் கோடைத் திருவிழா கண்காட்சியில் பெய்லி அற்புதம் | |
பேரினம் | மேங்கிபெரா |
இனம் | மே. இண்டிகா |
கலப்பினப் பெற்றோர் | 'ஹேடன்' × 'பாம்பே' |
பயிரிடும்வகை | 'பெய்லி அற்புதம்' |
தோற்றம் | புளோரிடா |
வரலாறு
தொகு1940களில் அசல் மரமானது புளோரிடாவின் பைன் தீவில் பெய்லி சகோதரர்களின் தோட்டத்தில் பயிரிடப்பட்ட 'ஹேடன்' மாம்பழ விதைகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. இது 2005ஆம் ஆண்டு வம்சாவளி பகுப்பாய்வின்படி, பெய்லியின் அற்புதம், ஹேடனுக்கும் பம்பாய்க்கும் இடையில் கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] இந்த வகை வணிக சாகுபடியாக மாறவில்லை என்றாலும் பிரபலமான வகையாக மாறியது.
புளோரிடாவின் மியாமியில் உள்ள யு.எஸ்.டி.ஏவின் ஜெர்ம்ப்ளாசம் களஞ்சியத்தின் சேகரிப்பில் பெய்லியின் அற்புதம் மரங்கள் நடப்பட்டுள்ளன.[2] புளோரிடாவின் ஹோம்ஸ்டெட்டில் உள்ள புளோரிடா பல்கலைக்கழக வெப்பமண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் [3] மற்றும் மியாமி-டேட் பழம் மற்றும் மசாலா பூங்காவிலும் நடப்பட்டுள்ளன.[4] அசல் மரம் இன்னும் பைன் தீவில் நிற்கிறது.
விளக்கம்
தொகுஇந்த பழம் இதன் பெற்றோர் 'ஹேடனை' ஒத்ததாகக் காணப்படுகிறது. மேலும் நாரற்ற சதையுடன் கூடியது. சராசரியாக ஒரு பவுண்டு எடையுடன் மோனோஎம்ப்ரியோனிக் விதையுடன் உள்ளது. இது புளோரிடாவில் ஜூலை முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை காய்க்கின்றது. மேலும் இது இங்குப் பருவகால சாகுபடியாகும். [5]
மரங்கள் மிதமான வீரியமுள்ளன, பிற வகைகளை விடச் சற்று அதிகமாகக் குளிரினைத் தாங்கக்கூடியவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cecile T. Olano; Raymond J. Schnell; Wilber E. Quintanilla; Richard J. Campbell (2005). Pedigree analysis of Florida mango cultivars. Proc. Fla. State Hort. Soc. பக். 192–197. http://www.crec.ifas.ufl.edu/academics/faculty/burns/pdf/192-197.pdf.
- ↑ http://www.ars-grin.gov/cgi-bin/npgs/acc/display.pl?1554801 USDA, ARS, National Genetic Resources Program. Germplasm Resources Information Network - (GRIN). [Online Database] National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland.
- ↑ http://trec.ifas.ufl.edu/crane/pdfs/TREC-Fruit-Collections.pdf பரணிடப்பட்டது 2018-04-08 at the வந்தவழி இயந்திரம் Page 2, #6
- ↑ "Archived copy". Archived from the original on 2010-07-11. பார்க்கப்பட்ட நாள் 2010-11-14.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2010-12-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)