பெராக்சியிருபாசுபாரிக் அமிலம்
பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் (Peroxydiphosphoric acid) (H4P2O8) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாசுபரசின் ஆக்சியமிலமாகும். இதனுடைய உப்புகள் பெராக்சியிருபாசுபேட்டுகள் எனப்படுகின்றன. அறியப்படும் இரண்டு பெராக்சிபாசுபாரிக் அமிலங்களில் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் ஒன்றாகும். பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் மற்றொன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெராக்சிடைபாசுபாரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
15593-49-4 | |
ChEBI | CHEBI:29284 |
ChemSpider | 103142 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 115278 |
| |
பண்புகள் | |
H4P2O8 | |
வாய்ப்பாட்டு எடை | 193.97 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வரலாறு
தொகுபெராக்சிபாசுபாரிக் அமிலங்கள் இரண்டும் முதன்முதலில் 1910 ஆம் ஆண்டில் சூலியசு சுமிட்லின் மற்றும் பால் மாசினி ஆகியோரால் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டன. [1]பைரோபாசுபாரிக் அமிலத்துடன் உயர் செறிவிலுள்ள ஐதரசன் பெராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்கையில் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் குறைவான அளவிலேயே கிடைத்தது. [2]
தயாரிப்பு
தொகுபாசுபாரிக் அமிலத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பெராக்சியிருபாசுபாரிக் அமிலம் தயாரிக்கலாம். இவ்வினையில் பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் உடன் விளைபொருளாக உருவாகிறது.
இச்சேர்மம் வணிக ரீதியாக கிடைப்பதில்லை. தேவைக்கேற்பவே தயாரிக்கப்பட வேண்டும். பாசுபேட்டு கரைசல்களை மின்னாற்பகுப்பு செய்து பெராக்சியிருபாசுபேட்டுகளைப் பெறலாம். [3]
பண்புகள்
தொகுபெராக்சியிருபாசுபாரிக் அமிலம் நான்கு புரோட்டான்கள் வழங்கும் அமிலமாகும். இதன் காடித்தன்மை எண்கள் pKa1 ≈ −0.3, pKa2 ≈ 0.5, pKa3 = 5.2 and pKa4 = 7.6 என அளவிடப்பட்டுள்ளன. [4]நீரிய கரைசல்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பெராக்சியொருபாசுபாரிக் அமிலம் மற்றும் பாசுபாரிக் அமிலமாக விகிதச்சமமின்றி பிரிகிறது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Schmidlin, Julius; Massini, Paul (1910). "Phosphormonopersäure und Überphosphorsäure". Ber. Dtsch. Chem. Ges. 43 (1): 1162–1171. doi:10.1002/cber.191004301195. https://zenodo.org/record/1426385.
- ↑ Harald, Jakob; Leininger, Stefan; Lehmann, Thomas; Jacobi, Sylvia; Gutewort, Sven (2007). "Peroxo Compounds, Inorganic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley‐VCH Verlag. pp. 310–311. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_177.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527306732.
- ↑ Riedel, Erwin (2004). AnorganischeChemie (6 ed.). Berlin/New York: de Gruyter. p. 493.
- ↑ Crutchfield, Marvin M.; Edwards, John O. (1960). "The Acidity and Complexes of PeroxydiphosphoricAcid". J. Am. Chem. Soc. 82 (14): 3533–3537. doi:10.1021/ja01499a015.
- ↑ Kolditz, Lothar (1983). AnorganischeChemie. Vol. 1. Berlin: DeutscherVerlag der Wissenschaften. p. 437.