பெரியாளூர்

பெரியாளூர் (Periyalur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரியாளூர் ஊராட்சிக்குட்பட்டதொரு சிற்றூராகும்[1][2]. இது அறந்தாங்கி தலைமை இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது

பெரியாளூர்
கிராமம்
பெரியாளூர் is located in தமிழ் நாடு
பெரியாளூர்
பெரியாளூர்
இந்தியாவில், தமிழ்நாட்டில்
பெரியாளூர் is located in இந்தியா
பெரியாளூர்
பெரியாளூர்
பெரியாளூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°14′N 79°04′E / 10.24°N 79.07°E / 10.24; 79.07
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிதொண்டைமான்
தாலுகாஅறந்தாங்கி
மாவட்டம்புதுக்கோட்டை
பரப்பளவு
 • மொத்தம்12.58 km2 (4.86 sq mi)
ஏற்றம்24 m (79 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,937
 • அடர்த்தி150/km2 (400/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.தி.நே. (ஒசநே+5:30)
அ.கு.எ.614 624
தொலைபேசி குறியீடு(91) 4371
வாகனப் பதிவுTN 55
இணையதளம்www.myperiyalur.clan.su

புள்ளிவிபரங்கள் தொகு

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பெரியாளூரின் மொத்த மக்கள்தொகை 1937. அதில் ஆண்கள் 1011 பெண்கள் 926 என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் 1283 பேர் எழுத்தறிவு உள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்.

கல்வி தொகு

 
அரசினர் உயர்நிலைப் பள்ளி

அறந்தாங்கி தாலுகாவில், பெரியாளூர், கல்வியில் வளர்ந்த கிராமமாகும். கிராமத்தில் 90% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். 30% பெரியாளூர் மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்கின்றனர். இங்கு 10 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

கோவில்கள் தொகு

 
ஸ்ரீ விநாயகர் கோவில்

ஸ்ரீ காளியம்மன் கோவில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ முத்துலிங்க அய்யனார் சுவாமி கோவில், ஸ்ரீ கரும்பர் சுவாமி கோவில், ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி கோவில், ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ குலவதி அம்மன் கோவில் முதலிய கோவில்கள் இங்குள்ளன. ஒவ்வொரு வருடமும், சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.

போக்குவரத்து தொகு

பேருந்து வசதிகள் உள்ளன. அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பெரியாளூர் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாளூர்&oldid=3733188" இலிருந்து மீள்விக்கப்பட்டது