பெரிய அலகு மீன்கொத்தி
பெரிய அலகு மீன்கொத்தி Great-billed kingfisher | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கோரசிபார்மிசு
|
குடும்பம்: | அல்சிடினிடே
|
பேரினம்: | பெலர்கொப்சிசு
|
இனம்: | பெ. மெலனொரைன்கா
|
இருசொற் பெயரீடு | |
பெலர்கொப்சிசு மெலனொரைன்கா (டெம்மினிக், 1826) | |
Subspecies | |
|
பெரிய அலகு மீன்கொத்தி (Great-billed kingfisher) அல்லது கருப்பு-அலகு மீன்கொத்தி (பெலர்கொப்சிசு மெலனொரைன்கா) என்ற மீன்கொத்தி பறவைகளின் உட்குடும்பத்தின் உள்ள ஹெல்சையோனினேனைச் சார்ந்தது . இது இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியினைச் சார்ந்தது. இதனை சுலவேசி தீவிலும், சூலா தீவுக்கூட்டத்திலும் காணலாம்.
கிளையினங்கள்
தொகுஇந்த சிற்றினத்தின் கீழ் மூன்று துணையினங்கள் உள்ளன:
பெலர்கொப்சிசு மெலனொரைன்கா மெலனொரைன்கா: இது சுலவேசி, பங்கா, லெம்பா, மனடோடூஅ, டோடிபோ, முன்னா, பட்டுஆங், லபுஆண்டடா மற்றும் தோகியான் தீவுகளில் காணப்படும்
பெலர்கொப்சிசு மெலனொரைன்கா டைக்குரோரைன்கா பாங்கை தீவுகளில் காணப்படும்.
பெலர்கொப்சிசு மெலனொரைன்கா யூடெரிப்டோரைன்கா தலியாபுவின் சூலா தீவுகள், சேகோ, மங்கோலி, மற்றும் சனானா தீவுகளில் காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுஇதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Halcyon coromanda". IUCN Red List of Threatened Species 2012: e.T22683234A40529189. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22683234A40529189.en. https://www.iucnredlist.org/species/22683234/40529189.