பெரிய கருஞ்சாம்பல் சிலம்பன்

பறவை இனம்
பெரிய கருஞ்சாம்பல் சிலம்பன்
Adult showing the characteristic pale outer tail feathers, yellow iris, grey rump and dark blotches on mantle
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. malcolmi
இருசொற் பெயரீடு
Turdoides malcolmi
(Sykes, 1832)
வேறு பெயர்கள்

Argya malcolmi
Malacocircus malcolmi

பெரிய கருஞ்சாம்பல் சிலம்பன் அல்லது பெரிய கருஞ்சாம்பல் பூணியல் (large grey babbler (Turdoides malcolmi) என்பது சிரிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது இந்தியா மற்றும் மேற்கு நேபாளம் முழுக்க காணப்படுகிறது. வறண்ட இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக தக்கானத்தில் மிகுதியாகக் காணப்படும் ஒரு பறவையாகும். இவை வறண்ட, திறந்தவெளிப்புதர் காடுகள், தோட்டங்கள் போன்ற இடங்களில் பொதுவாக காணப்படக்கூடியனன. இவை பொதுவாக சிறு கூட்டமாக காணப்படுகின்றன. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய சிலம்பன்களில் ஒன்றாகும்.[2]

விளக்கம்

தொகு

இந்தப் பறவை நீண்ட வால் கொண்டது. வாலானது வெள்ளை வெளி ஓர இறகுகளுடன் பழுப்பு நிற உடலைக் கொண்டுள்ளது. அது தரையிலிலுரு்ந்து படபடக்கும் இறக்கையுடன் பறக்கும்போது நன்றாக தெரியும். இதன் கண்ணிற்கும் அலகின் அடிப்பாகத்திற்கும் இடைப்பட்ட பகுதி கருமையாகவும், நெற்றி சாம்பல் நிறமாகவும் இருக்கும். பிட்டம் மற்றும் மேல் வால் பகுதிகள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலிம் மேற்பகுதியில் மங்கலான புள்ளிகள் உள்ளன. [2] இறக்கைகள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். விழிப்படலம் மஞ்சள் நிறமாகவும், மேல் அலகு அடர் பழுப்பு நிறமாகவும், கீழ் அலகு மஞ்சள் நிறமாகவும் இருக்கும். வாலில் மங்கலான குறுக்குப் பட்டைகள் காணப்படும்.[3] அல்பினிசம் அல்லது இலூசியத்தைக் காட்டும் அசாதாரண மாதிரிகள் பதிவுசெய்யபட்டுள்ளன.[4]

பரவலும் வாழ்விடமும்

தொகு

இப்பறவை இந்திய துணைக்கண்டத்தில் இமயமலைக்கு தெற்கே, தார் பாலைவனத்தின் கிழக்கே பீகார் வரை காணப்படுகிறது. இந்த இனம் கேரளத்தில் காணப்படவில்லை. மேலும் சிந்து பகுதியில் இருந்து பதிவுகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது முக்கியமாக வறண்ட திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் பயிரிடப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது.[3] இது தமிழ்நாட்டின் கிழக்கு வறண்டப் பகுதிகளில் காணப்படவில்லை; இருப்பினும், பாண்டிச்சேரியில் அற்றுவிட்டது போல உள்ளது.[5]

நடத்தையும் சூழலியலும்

தொகு

உரக்க கத்தி தொடர்பு கொள்ளும் சிறிய கூட்டங்களில் இந்த இனம் காணப்படுகின்றது. ஒன்றாகச் சேர்ந்து கத்திப் பகையை விரட்டும். இவை பெரும்பாலும் திறந்த வெளியில் அல்லது விளை நிலத்திற்கு அருகாமையில் உணவு கிடைக்கும் இடங்களில் காணப்படுகின்றன. விரைவாக சீராக பறக்க முடியாத இவை வேலிகள் புதர்கள் ஆகியவற்றில் நுழைந்து கால்களால் தாவித் தாவி ஓடியும் சுறுசுறுப்பாக இரை தேடும்.[6] ஒரு கூட்டத்தில் உள்ள பறவைகள் விளையாட்டு நடத்தையில் ஈடுபடும்.[7] இவை முக்கியமாக பூச்சிகளை உண்கின்றன, ஆனால் சிறிய பல்லிகள், மெல்லுடலிகள், சிலங்திகள் போன்றவற்றையும் உணவாக கொள்கின்றன. இவை விதைகள், தானியங்கள், சிறிய பழங்கள் போன்றவற்றையும் உண்ணும்.[8] இவை புனே, அகமதாபாத் போன்ற சில நகரங்களில் உள்ள தோட்டங்களில் காணப்படுகின்றன. பெங்களூரு போன்ற பிற நகரங்களில், இவை விரிவடைந்து வரும் நகர்ப்புற மண்டலத்தின் புறநகரில் மட்டுமே காணப்படுகின்றன.

இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன, ஆனால் முக்கியமாக மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.[2] சிறுகுச்சிகள் புல், வேர் முதலியன கொண்டு ஒழுங்கற்ற கோப்பை வடிவிலான கூட்டை சிறு மரங்களிலும் புதர்களிடையேயும் கட்டுகின்றன. வழக்கமாக இவை நான்கு முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகளில் சுடலைக் குயில்[9] மற்றும் அக்காக்குயில்[10] போன்றவை ஏமாற்றி முட்டையிடுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பறவைகள் ஒரே கூட்டில் முட்டையிட்டு அடைகாக்கும் என்று கூறப்படுகின்றது; இருப்பினும், இது சரிபார்க்கப்படவில்லை.[3][11][12]

பரவலான வாழிட எல்லை கொண்ட இவை பாதுகாப்பாக உள்ளன என்றாலும், சில உள்ளூர் மக்கள் இறைச்சிக்காக இவற்றை வேட்டையாடுவதன் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.[13]

மேற்கோள்

தொகு
  1. BirdLife International (2016). "Argya malcolmi". IUCN Red List of Threatened Species 2016: e.T22716361A94492467. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716361A94492467.en. https://www.iucnredlist.org/species/22716361/94492467. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Rasmussen, P.C.; Anderton J. C. (2005). Birds of South Asia. The Ripley Guide. Vol. 2. Smithsonian Institution & Lynx Edicions. p. 444.
  3. 3.0 3.1 3.2 Ali, S; S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. Vol. 6 (2nd ed.). Oxford University Press. pp. 220–222.
  4. Sharma, S. K. (2003). "Total albinism in large grey babbler Turdoides malcolmi". J. Bombay Nat. Hist. Soc. 100 (1): 144–145. https://biodiversitylibrary.org/page/48602718. 
  5. Neville, Shantha (1974). "News from Auroville". Newsletter for Birdwatchers 16 (5): 15–16. https://archive.org/stream/NLBW16#page/n83/mode/1up/. 
  6. Bharos,AMK (1996). "Sideways leap-frogging by the Large Grey Babblers, Turdoides malcolmi (Sykes)". J. Bombay Nat. Hist. Soc. 93 (1): 93. https://biodiversitylibrary.org/page/48603341. 
  7. Gaston, A. J. (1977). "Social behaviour within groups of jungle babblers Turdoides striatus". Animal Behaviour 25: 828–848. doi:10.1016/0003-3472(77)90036-7. https://archive.org/details/sim_animal-behaviour_1977-11_25_4/page/828. 
  8. Toor,HS; Saini,MS (1986). "Feeding ecology of the Large Grey Babbler Turdoides malcolmi". Proc. Indian Acad. Sci. Anim. Sci. 95 (4): 429–436. doi:10.1007/BF03179379. http://www.ias.ac.in/jarch/procb/95a/429-436.pdf. 
  9. Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds. Gurney and Jackson. pp. 45–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4067-4576-6.
  10. Blanford, WT (1895). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds Volume 3. Taylor and Francis, London. pp. 213–214.
  11. Macdonald, Malcolm (1959). "Communal nest-feeding in Babblers". J. Bombay Nat. Hist. Soc. 56 (1): 132–134. https://biodiversitylibrary.org/page/47374994. 
  12. Baker ECS (1922). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 1 (2nd ed.). pp. 200–201.
  13. Bharos, A. M. K. (2001). "Large grey babbler (Turdoides malcolmi) trapped for the table". J. Bombay Nat. Hist. Soc. 98 (3): 452. https://biodiversitylibrary.org/page/48583677. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Turdoides malcolmi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.