பெருங்கல் சவுக்கை
பெருங்கல் சவுக்கை என்பது பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு அமைப்பாகும். இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும் கல்லின் நடுவிலோ கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப்பொந்து அனைத்து சவுக்கைகளிலும் காணப்படுகிறது.
தமிழகம்
தொகுபழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் இந்த சவுக்கை உள்ளது. இந்த சவுக்கையின் படி ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும் அரைப்பகுதியையும் முடிவையும் எளிமையாக கணித்தனர். சூரியன் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் 6 மாத கால பயணத்தை தெற்கு நோக்கிய காலம் என்றும் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் 6 மாத கால பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். அதன்படி கி.பி. 2013ஆம் ஆண்டின் தெற்கு நோக்கிய காலம் ஆடி முதலாம் தேதி தொடங்கியது. சூரியனின் ஒளி தெற்கு நோக்கிய நகர்வு பாதையை தொடங்கும் காலத்தில் இந்த சவுக்கையில் உள்ள பொந்தின் வழியாக வழியாக சூரிய ஒளி ஊடுருவும். அதன்படி இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.[1][2] பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போல் அமைத்து போன்று தோற்றத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டு காணப்படுகிறது.
இங்கிலாந்து
தொகுபெயர்க்காரணம்
தொகுஇங்கிலாந்து வழக்கில் இந்த சவுக்கையை மென்-அன்-டோல் (Mên-an-Tol) என அழைக்கின்றனர். இது கார்னிசு மொழியில் இருந்து கடன் வாங்கப்பட்ட சொற்குவியல் ஆகும். ஆனால் இந்த சவுக்கைகள் தமிழகத்தில் உள்ளது போல் ஒன்றாக அல்லாமல் 20 சவுக்கைகள் ஒரு வட்டவடிவில் வரிசையாக (படம்) அமைந்திருக்கின்றன. மேலும் துவாரம் ஒரே கல்லில் துளைக்கப்பட்டுள்ளதுடன் துவாரக்கல்லின் இரு பக்கத்திலும் இரண்டு குத்துக்கற்கள் நிற்கின்றன. அவற்றை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்க்கும் போது 101 என்னும் எண்ணை சுட்டுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சவுக்கையை பயன்படுத்தியே பண்டைய இங்கிலாந்து வாசிகள் தங்கள் நாட்காட்டியை உருவாக்கினர் என்று கருதப்படுகிறது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "சூரிய ஒளி ஊடுருவிய அதிசயம்: 6 ஆயிரம் ஆண்டு பழமையான ‘சவுக்கை’ கண்டுபிடிப்பு". சூலை 19, 2013 (பழனி). சூலை 19, 2013 இம் மூலத்தில் இருந்து 2013-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130722192602/http://www.maalaimalar.com/2013/07/19124633/sun-rise-entry-six-thousand-ye.html. பார்த்த நாள்: சூலை 24, 2013.
- ↑ "பழநி அருகே 6 ஆயிரம் ஆண்டுகள்,பழமையான "சவுக்கை' கண்டுபிடிப்பு சூரிய ஒளி ஊடுருவிய அற்புதம்". சூலை 19, 2013 (பழனி). சூலை 19, 2013. http://www.dinamalar.com/news_detail.asp?id=760588. பார்த்த நாள்: சூலை 24, 2013.
வெளி இணைப்புகள்
தொகு- The Mên-an-Tol at Megalithia.com
- The Mên-an-Tol பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம் on Richard's Ancient Site and Curiosity Pages
- Men-An-Tol site page on The Megalithic Portal
- Men-An-Tol site page on The Modern Antiquarian
- Pretanic World - Superstitions about The Mên-an-Tol பரணிடப்பட்டது 2012-02-11 at the வந்தவழி இயந்திரம்
- Legends of Cornwall's Stones, Gareth Evans, 2005
- Men-an-Tol at Historic Cornwall