பெரும்பாலை தொல்லியல் களம்

பெரும்பாலை தொல்லியல் களம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாலை ஊராட்சியில் அமைந்துள்ளது.

பெரும்பாலை தொல்லியல் களம் பென்னாகரம்-மோளையானூர் செல்லும் சாலையில், பென்னாகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், தர்மபுரியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றின் இடது கரையில் உள்ளது. இத்தொல்லியல் களத்தில் முதல் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.[1]

75 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும்பாலை தொல்லியல் மேடு தரை மட்டத்திலிருந்து 3 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை உயரம் கொண்டது. இத்தொல்லியல் களத்தின் மேற்பரப்பில் கருப்பு சிவப்பு மட்பாண்ட ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன.செம்மனூர் சிவன் கோயில் எதிரே ஈமக்காடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் கால்வாய் வெட்டும் போது 50 கல் வட்டங்கள் கிடைத்துள்ளன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு