பெரேன் மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம்

பெரேன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இது கோகிமா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

பெரேன்
Peren
லியாங்மை நடனம்
லியாங்மை நடனம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தலைநகரம்பெரேன்
பரப்பளவு
 • மொத்தம்2,300 km2 (900 sq mi)
ஏற்றம்
1,445 m (4,741 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்94,954
 • அடர்த்தி41/km2 (110/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-PE
இணையதளம்http://peren-district.nic.in/

புவியியல்

தொகு

இந்த மாவட்டத்தின் மேற்கில் திமா ஹசாவ் மாவட்டம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் திமாப்பூர் மாவட்டமும், கிழக்கில் கோகிமா மாவட்டமும், தெற்கில் தமெங்கலாங் மாவட்டமும் சூழ்ந்துள்ளன.

இந்த மாவட்டத்தின் தலைநகரமாகப் பெரேன் நகரம் செயல்படுகிறது.

மக்கள் தொகை

தொகு

இங்கு 94,954 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]

இங்கு ஜீலியாங், குக்கி இன மக்கள் வாழ்கின்றனர்.

விலங்குகளும் தாவரங்களும்

தொகு

இங்கு இண்டாங்கி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[3]

சான்றுகள்

தொகு
  1. "District Census Handbook - Peren". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 (Directorate of Census Operations, Nagaland). http://www.censusindia.gov.in/2011census/dchb/1311_PART_B_DCHB_PEREN.pdf. பார்த்த நாள்: 2015-07-22. 
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Nagaland". Archived from the original on ஆகஸ்ட் 23, 2011. பார்க்கப்பட்ட நாள் September 25, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரேன்_மாவட்டம்&oldid=3565205" இலிருந்து மீள்விக்கப்பட்டது