பெர்க்கிலியம்(III) அயோடைடு
வேதிச் சேர்மம்
பெர்க்கிலியம்(III) அயோடைடு (Berkelium(III) iodide) BkI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பெர்க்கிலியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
23171-53-1 | |
ChemSpider | 64886032 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 129660023 |
| |
பண்புகள் | |
BkI3 | |
வாய்ப்பாட்டு எடை | 627.71 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் திண்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கொதிநிலை | 650 °C (1,202 °F; 923 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கதிரியக்கப் பண்பு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு650 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்க்கிலியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன், அயோடின் கலந்த வாயுக் கலவையை சேர்த்து சூடாக்கினால் பெர்க்கிலியம்(III) அயோடைடு உருவாகிறது.[3]
இயற்பியல் பண்புகள்
தொகுபெர்க்கிலியம் மூவயோடைடு முக்கோணப் படிக அமைப்பில்,[4] இடக்குழு R3 (எண். 148), அணிக்கோவை அளவுருக்கள் a = 758.4 பைக்கோ மீட்டர் மற்றும் c = 2087 பைக்கோ மீட்டர் என்ற அளவுருக்களுடன் மஞ்சள் நிறத்தில் படிகமாகிறது. இதன் படிக அமைப்பு பிசுமத் மூவயோடைடின் படிக அமைப்பை ஒத்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Donnay, Joseph Désiré Hubert (1978). Crystal Data: Inorganic compounds 1967-1969 (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 192. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ Yaws, Carl (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 698. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ Mi͡asoedov, Boris Fedorovich (1974). Analytical Chemistry of Transplutonium Elements (in ஆங்கிலம்). Wiley. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-62715-0. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ "WebElements Periodic Table » Berkelium » berkelium triiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.