பெர்க்கிலியம்(III) ஆக்சைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(III) ஆக்சைடு (Berkelium(III) oxide) Bk2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பெர்க்கிலியம் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

பெர்க்கிலியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபெர்க்கிலியம் மூவாக்சைடு, பெர்க்கிலியம் செகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
12310-58-6
InChI
  • InChI=1S/2Bk.3O/q2*+3;3*-2
    Key: LIPRULCJHNQYDI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Bk+3].[Bk+3].[O-2].[O-2].[O-2]
பண்புகள்
Bk2O3
வாய்ப்பாட்டு எடை 542.00 g·mol−1
தோற்றம் மஞ்சள்-பச்சை திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 1,920 °C (3,490 °F; 2,190 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

600 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்க்கிலியம்(III) ஆக்சைடுடன் ஐதரசனும் ஐதரசன் புளோரைடும் கலந்த வாயுக் கலவையை சேர்த்து சூடாக்கினால் பெர்க்கிலியம்(III) புளோரைடு உருவாகிறது.:[2]

2BkO2 + H2 → Bk2O3 + H2O

இயற்பியல் பண்புகள்

தொகு

சேர்மம் 1920 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். மஞ்சள்-பச்சை திண்மப் பொருளாக உருவாகிறது. 1088.0 ± 0.5 பைக்கோமீட்டர் அளவுருவுடன் உடல் மைய கனச்சதுர படிக வடிவில் படிகங்களாக பெர்க்கிலியம்(III) புளோரைடு உருவாகிறது.[3][4]

பெர்க்கிலியம்(III) ஆக்சைடு தண்ணீரில் கரையாது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. Sabry, Fouad (15 October 2022). Americium: Future space missions can be powered for up to 400 years (in ஆங்கிலம்). One Billion Knowledgeable. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  3. Peterson, J. R.; Cunningham, B. B. (1 September 1967). "Crystal structures and lattice parameters of the compounds of berkelium I. Berkelium dioxide and cubic berkelium sesquioxide" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (9): 327–336. doi:10.1016/0020-1650(67)80037-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165067800370. பார்த்த நாள்: 11 April 2023. 
  4. Baybarz, R. D. (1 August 1968). "The berkelium oxide system" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 30 (7): 1769–1773. doi:10.1016/0022-1902(68)80352-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190268803525. பார்த்த நாள்: 11 April 2023. 
  5. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-539335-4. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்க்கிலியம்(III)_ஆக்சைடு&oldid=3734457" இலிருந்து மீள்விக்கப்பட்டது