பெர்ரிக் சிடீயரேட்டு

வேதிச் சேர்மம்

பெர்ரிக் சிடீயரேட்டு (Ferric stearate) என்பது C54H105FeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். உலோகக் கரிமச் சேர்மமான இச்சேர்மம் இரும்பும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது.[2][3] கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதியாக இருப்பதால் இது ஓர் உலோக சோப்பு என்றும் கருதப்படுகிறது.[4]

பெர்ரிக் சிடீயரேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Iron(III) stearate
முறையான ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) ஆக்டாடெக்கானோயேட்டு
வேறு பெயர்கள்
Iron(III) stearate, iron tristearate, ferric stearate, iron(3+) octadecanoate[1]
இனங்காட்டிகள்
555-36-2 Y
ChemSpider 61674
EC number 225-889-4
InChI
  • InChI=1S/3C18H36O2.Fe/c3*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h3*2-17H2,1H3,(H,19,20);/q;;;+3/p-3
    Key: XHQSLVIGPHXVAK-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68388
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Fe+3]
UNII E8Q7454COW
பண்புகள்
C
54
H
105
FeO
6
வாய்ப்பாட்டு எடை 906.3
தோற்றம் ஆரஞ்சு சிவப்பு தூள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 84 °C (183 °F; 357 K)
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இரும்பு ஆக்சைடும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் பெர்ரிக் சிடீயரேட்டு உருவாகும். மூவெத்திலீன் ஈரமீன் முன்னிலையில் இரும்பு குளோரைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தியும் இதை தயாரிக்கலாம்.[5]

இயற்பியல் பண்புகள்

தொகு

ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக பெர்ரிக் சிடீயரேட்டு உருவாகிறது.

நீரில் கரையாது. சூடான எத்தனால், தொலுயீன், குளோரோஃபார்ம், அசிட்டோன், பென்சீன், டர்பெண்டைன் ஆகியவற்றில் கரையும்.[6]

பயன்கள்

தொகு

பெர்ரிக் சிடீயரேட்டு கரிமத் தொகுப்பு வினைகளீல் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பகுப்பாய்வு வேதியியலில் ஒரு வினையாக்கியாகவும் உயிர் வேதியியலில் நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2649. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. "Iron(III) Stearate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
  3. "IRON STEARATE CAS No.555-36-2 - GO YEN CHEMICAL INDUSTRIAL CO LTD". goyenchemical.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
  4. "Iron (III) Stearate | CAS 555-36-2" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
  5. Basel, S., Bhardwaj, K., Pradhan, S., Pariyar, A., & Tamang, S. (2020). DBU-Catalyzed One-Pot Synthesis of Nearly Any Metal Salt of Fatty Acid (M-FA): A Library of Metal Precursors to Semiconductor Nanocrystal Synthesis. ACS Omega. எஆசு:10.1021/acsomega.9b04448
  6. "Iron(III) Stearate - Surfactant - SAAPedia - Surfactant Technology Platform". surfactant.top. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
  7. "Buy Ferric stearate - 555-36-2 | BenchChem". benchchem.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரிக்_சிடீயரேட்டு&oldid=3909292" இலிருந்து மீள்விக்கப்பட்டது