பெலாங் விசிறிவால்

பெலாங் விசிறிவால் (Peleng fantail)(ரைபிதுரா கெபிபையே) என்பது இந்தோனேசியாவில் உள்ள பெலாங் தீவின் மலைப் பகுதிகளில் காணப்படும் விசிறிவால் பறவை சிற்றினம் ஆகும். இது இப்பகுதியில் காணப்படும் அகணிய உயிரி. இதன் கருமார்பகப் பகுதிக்குக் கீழே உள்ள கறுப்பு கோடுகள், பிரகாசமான வெண்தொண்டை மற்றும் தனித்துவமான கலவி ஒலி, இவற்றை மற்ற வகை விசிறிவால்களிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுகிறது. இது 2020-ல் 9 புதிய சிற்றினங்கள் மற்றும் வாலேசியாவில் உள்ள தீவுகளில் காணப்படும் பறவைகளின் துணையினங்களுடன் விவரிக்கப்பட்டது. இவை அனைத்தும் 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் காட்டுத்தீ ஆகியவற்றால் இதன் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது.[1][2][3]

பெலாங் விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. habibiei
இருசொற் பெயரீடு
Rhipidura habibiei
ரெயிண்ட் மற்றும் பலர், 2020

மேற்கோள்கள்

தொகு
  1. Rheindt, Frank E.; Prawiradilaga, Dewi M.; Ashari, Hidayat; Suparno; Gwee, Chyi Yin; Lee, Geraldine W. X.; Wu, Meng Yue; Ng, Nathaniel S. R. (2020-01-10). "A lost world in Wallacea: Description of a montane archipelagic avifauna" (in en). Science 367 (6474): 167–170. doi:10.1126/science.aax2146. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31919216. https://science.sciencemag.org/content/367/6474/167. 
  2. Liverpool, Layal. "Scientists have discovered five new species of songbird in Indonesia". New Scientist (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
  3. "10 new birds discovered in 'lost world'". Animals (in ஆங்கிலம்). 2020-01-09. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலாங்_விசிறிவால்&oldid=3500168" இலிருந்து மீள்விக்கப்பட்டது