பெலிபார்மியா
பெலிபார்மியா (ஆங்கிலம்; Feliformia பூனை உருவமுள்ளது என்னும் பொருள்தருவது) என்னும் துணைவரிசை ஊனுண்ணி வரிசையில் உள்ள பூனையை ஒத்த தோற்றம் கொண்ட பூனை, கழுதைப் புலி, சிவெட்டு முதலியவற்றை உள்ளடக்கியது. இது மற்றொரு துணைவரிசையான கேனிபார்மியாவில் (Caniformia) இருந்து மாறுபட்டது.
பெலிபார்மியா புதைப்படிவ காலம்:இயோசீன்-Holocene | |
---|---|
![]() | |
Several extant feliform families: Eupleridae, Felidae, Hyaenidae, Herpestidae and Viverridae. | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
Suborder: | Feliformia Kretzoi, 1945 |
Families | |
பண்புகள் தொகு
நடுக் காதையும் உள் காதையும் சூழ்ந்திருக்கும் எலும்பு உறையின் அமைப்பே இன்று வாழ்ந்து வரும் அனைத்து பெலிபார்மியா விலங்குகளுக்கும் உள்ள பொதுவான பண்பாகும்.[1] இதுவே கேனிபார்மியா வகை விலங்குகளில் இவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் முக்கியமான பண்பு. பெலிபார்மியாக்களுக்கு நடு, உள் காதுகளைச் சூழ்ந்திருக்கும் எலும்பு உறை இரு எலும்புகளாலும் கேனிபார்மியாக்களுக்கு ஒரு எலும்பாலும் அமைந்திருக்கும். இவற்றின் முகமானது (கண்ணுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதி) கேனிபார்மியா எனப்படும் பேரினத்தில் உள்ள நாய் முதலான விலங்குகளை விடக் குறைவான நீளத்தில் இருக்கும் - பற்கள் குறைவாக இருக்கும். இவை பொதுவாக மறைந்திருந்து இரையைத் தாக்கும் விலங்குகள்.
தொகுதிப் பிறப்பியல் கிளைப்படம் தொகு
பெலிபார்மியா |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள் தொகு
- ↑ R. F. Ewer (1973). The Carnivores. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8493-6. https://books.google.com/books?id=IETMd3-lSlkC&printsec=frontcover#v=onepage&q=feloidea&f=false.