பெல்ச்சி

பீகாரிலுள்ள கிராமம்

பெல்ச்சி (Belchi) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.

பெல்ச்சி
Belchhi
பெல்ச்சி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பாட்னா
அரசு
 • வகைமாநிலம்
மக்கள்தொகை
 • மொத்தம்3,000
மொழிகள்
 • பேசப்படும் மொழிகள்மாகி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
803110
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR

1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பதவியில் இல்லாத போது தலித்துகள் மீதான அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் நேரில் சந்திக்க பெல்ச்சி கிராமத்திற்கு வந்தார். இந்த வருகை இந்திராவுக்கு மீண்டும் அதிகாரத்தை பெற உதவியது. பெல்ச்சி கிராமம் பாட்னா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் சூஃபி சில்லா நாளந்தா மாவட்டத்தின் தலைமையிடமான பீகார் சாரீப்பில் அமைந்துள்ளது[1][2][3][4].

சூஃபி சில்லா

தொகு

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி சன்னியாசி அசுராட் உசுமான் அரோனி சில்லா பெல்ச்சியில் வாழ்ந்தார். சூஃபி சன்னியாசி இங்கு இருந்தபோது, முரிதா என்ற பெண் தான் இறந்த பிறகு உசுமான் அரோனி சில்லாவின் காலடியில் தனது கல்லறை இருக்க வேண்டும் என வேண்டினார். ஆனால் இறுதியில் உசுமான் அரபு நாட்டிலுள்ள மக்காவில் இறக்க நேரிட்டது. அப்படியே அமையும் என்று உசுமானும் உறுதியளித்தார். ஆனால் இறுதியில் உசுமான் அரபு நாட்டிலுள்ள மக்காவில் இறக்க நேரிட்டது. முரதாவிற்கு கொடுத்த தனது வாக்குறுதியை நிறைவேற்ற, அசுராட் உசுமான் அரோனி ஆன்மீக ரீதியில் பெல்ச்சிக்கு வந்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் என கூறப்படுகிறது. உசுமான் அரோனி சில்லாத் தனது சில்லாவை அந்த பெண்ணின் கல்லறைக்கு அருகில் கட்டியெழுப்ப உத்தரவு இட்டார். இதனால் பெல்ச்சியில் உசுமான் சின்னம் காணப்படுகிறது. கடந்த 650 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் சில்லா பெல்ச்சியில் இசுலாமிய நாட்காட்டியின் 14 முதல் 16 சாவல் வரையுள்ள காலத்தில் உர்சு திருவிழா நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. India After Gandhi: The History of the World's Largest Democracy - Ramachandra Guha - Google Books. Books.google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
  2. "Charisma To The Test | Yubaraj Ghimire". Outlookindia.com. 1998-01-19. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
  3. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
  4. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 11 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ச்சி&oldid=2928089" இலிருந்து மீள்விக்கப்பட்டது