பெ. வெ. நாகரத்னா

இந்திய நீதிபதி

பெங்களூரு வெங்கடராமையா நாகரத்னா (Bangalore Venkataramiah Nagarathna) (பிறப்பு 30 அக்டோபர் 1962) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். 2008 முதல் 2021 வரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார் [2] இவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி எ. சீ. வெங்கடராமையாவின் மகள் ஆவார்.

மாண்புமிகு திருமதி நீதிபதி
பெங்களூரு வெங்கடராமையா நாகரத்னா
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில்
18 பிப்ரவரி 2008 – 30 ஆகத்து 2021
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 அக்டோபர் 1962 (1962-10-30) (அகவை 61)
பாண்டவபுரம், மண்டியா மாவட்டம், கருநாடகம்[1]
துணைவர்பி. என். கோபால கிருஷ்ணா
பெற்றோர்
  • எங்கலகுப்பே சீதாராமையா வெங்கடராமையா (father)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு வழக்கறிஞர்கள் குழுவால் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இவர் 2009 இல் பொது கவனத்தைப் பெற்றார்.[3] இவர் கர்நாடகாவில் வணிக மற்றும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

வாழ்க்கையும் கல்வியும் தொகு

நாகரத்னா, , இந்தியாவின் 19 வது தலைமை நீதிபதியாக இருந்த எ. சீ. வெங்கடராமையா என்பவருக்கு மகளாகப் பிறந்தார். வெங்கடராமையா 19 சூன் 1989இல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும், 17 திசம்பர் 1989 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். [4] [5]

நாகரத்தினா, தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட மையத்தில் சட்டம் பயின்றார். [6]

தொழில் தொகு

இவர், கர்நாடக வழக்கறிஞர் சங்கத்தில் 1987இல் சேர்ந்தார். 2008இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பெங்களூருவில் அரசியலமைப்பு மற்றும் வணிகச் சட்டம் பயின்றார். [7] இவர் 17 பிப்ரவரி 2010 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். [8] உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயதை அடைந்த பிறகு 2024 அக்டோபர் 29 அன்று இவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [4]

மே 2020இல், நாகரத்னா இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பெண் முதல் தலைமை நீதிபதியாக ஆவதற்கு தகுதியுடையதாக அமையும் என்று பல விமர்கர்கள் குறிப்பிட்டனர்.[9][4][7]

26 ஆகத்து 2021 அன்று, அவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 31 ஆகத்து 2021 அன்று பதவியேற்றார். [10] இவர் 2027ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வர உள்ளார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்புகளும் கருத்துக்களும் தொகு

பரபரப்பான செய்தி தொகு

2012 இல், மற்றொரு நீதிபதியுடன், போலி செய்திகளின் அதிகரிப்பைக் கவனித்து, இந்தியாவில் ஒளிபரப்பு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி மத்திய அரசுக்கு இவர் உத்தரவிட்டார். இணக்கமான கருத்தில், ஒளிபரப்பு ஊடகத்தின் மீது அரசாங்கக் கட்டுப்பாட்டை அனுமதிக்கும் அபாயங்களுக்கு எதிராகவும், ஒளிபரப்புத் துறையின் சுய கட்டுப்பாட்டை அனுமதிக்கும் சட்டரீதியான கட்டமைப்பைக் கோரியும் இவர் எச்சரித்தார்.[11]

வாகன வரிவிதிப்பு தொகு

2016 ஆம் ஆண்டில், மற்றொரு நீதிபதியுடன் சேர்ந்து, மாநிலத்திற்கு வெளியே வாங்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் கர்நாடகாவில் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு "வாழ்நாள் வரி" கட்ட வேண்டியதில்லை, கொள்கை சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்பளித்தார்.[12]

கோவில்களின் வணிகமற்ற நிலை தொகு

2019 ஆம் ஆண்டில், மற்ற இரண்டு நீதிபதிகளுடன், கோவில்கள் வணிக நிறுவனங்கள் அல்ல என்றும் அதன்படி, கருணைத்தொகை செலுத்துவது தொடர்பான தொழிலாளர் சட்ட விதிகள் கோவில் ஊழியர்களுக்குப் பொருந்தாது என்றும் இவர் தீர்ப்பளித்தார்.[13]

தொற்றுநோய்களின் போது கல்வி நிலை தொகு

கோவிட்-19 பெருந்தொற்று பாதித்த பகுதிகளில் மதிய உணவை நிறுத்துவதற்கான கர்நாடக அரசின் திட்டத்தை நிராகரித்த அமர்வின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். அமர்வு அரசாங்கத்தை டிஜிட்டல் முறையில், குழந்தைகளுக்கு இணைய வகுப்புகளுக்கான அணுகலை உறுதி செய்வதை ஒருங்கிணைத்தது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை முன்னணி தொழிலாளர்களாக கருத வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.deccanherald.com/state/top-karnataka-stories/b-v-nagarathna-the-new-supreme-court-judge-with-roots-in-mandya-village-1023838.html
  2. "Hon'ble Mrs. Justice B.V.Nagarathna". Karnataka High Court.
  3. Hunasavadi, Srikanth (2009-11-10). "Karnataka CJ, two judges attacked in court". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
  4. 4.0 4.1 4.2 Chhibber, Maneesh (2020-05-29). "SC collegium willing, this Karnataka judge could become first woman Chief Justice of India". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
  5. Mahapatra, Dhananjay (19 August 2021). "India could get 1st woman CJI in Justice Nagarathna in 6 yrs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  6. Rajagopal, Krishnadas (2021-08-28). "B.V. Nagarathna | Beyond the glass ceiling" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/bv-nagarathna-beyond-the-glass-ceiling/article36156989.ece. 
  7. 7.0 7.1 "Supreme Court Collegium may clear way for country's first woman CJI". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
  8. "Hon'ble Mrs. Justice B.V.Nagarathna". Karnataka High Court."Hon'ble Mrs. Justice B.V.Nagarathna". Karnataka High Court.
  9. Singh, Ajmer. "Legal fraternity speculates on a woman CJI in future". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/legal-fraternity-speculates-on-a-woman-cji-in-future/articleshow/75876758.cms?from=mdr. 
  10. "Nine new judges appointed to SC, total strength moves up to 33". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  11. Staff Reporter (2012-05-16). "Work out modalities for regulation of broadcast media, Centre told" (in en-IN). https://www.thehindu.com/news/national/work-out-modalities-for-regulation-of-broadcast-media-centre-told/article3426079.ece. 
  12. "State loses battle over lifetime tax on vehicles registered outside Karnataka" (in en-IN). The Hindu. 2016-07-02. https://www.thehindu.com/news/cities/bangalore/State-loses-battle-over-lifetime-tax-on-vehicles-registered-outside-Karnataka/article14466763.ece. 
  13. "Temples not commercial establishments: HC" (in en-IN). The Hindu. 2019-08-02. https://www.thehindu.com/news/cities/bangalore/temples-not-commercial-establishments-hc/article28799005.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._வெ._நாகரத்னா&oldid=3314397" இலிருந்து மீள்விக்கப்பட்டது