பேகம் பஜார்

பேகம் பஜார் (Begum Bazaar) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் ஐதராபாத்திலுள்ள மிகப்பெரிய வணிகச் சந்தையாகும். [1] இது குதுப் ஷாஹி ஆட்சியின் போது நிறுவப்பட்டது. பழைய நகரத்தின் நயா புல் பாலத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் இந்தச் சந்தை அமைந்துள்ளது. இது ஒரு பழமையான சில்லறை மற்றும் வீட்டுப் பொருட்களுக்கான மொத்தச் சந்தையாகும். நெரிசல் மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை சந்தையில் உள்ள ஒரே இடையூறாகும். தினமும் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகங்கள் இங்கு நடைபெறுகின்றன. இது 'வரலாற்று நினைவுச்சின்னமான' சார்மினார் அருகிலுள்ள மசாலா மற்றும் சந்தைக்கும் பிரபலமானது.

பேகம் பஜார்
நகரின் உட்புறப் பகுதி
பேகம் பஜார் is located in தெலங்காணா
பேகம் பஜார்
பேகம் பஜார்
தெலங்காணாவில் பேகம் பஜாரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°22′24″N 78°28′26″E / 17.373412°N 78.473774°E / 17.373412; 78.473774
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
தோற்றுவித்தவர்சையத் யாகூப் தவகாலி இஷாகி
அரசு
 • வகைதெலங்காணா அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500 012
மக்களவைத் தொகுதிஐதராபாத்து த் தொகுதி
திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்

முஷீராபாத்தில் மீன் சந்தைக்குப் பிறகு ஐதராபாத்தின் இரண்டாவது பெரிய மீன் சந்தையும் இங்குள்ளது. அருகிலுள்ள மோஸ்ஸாம் ஜாஹி சந்தை நகரத்தின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி சந்தையாகும். இந்த சந்தை மெதுவாக தில்சுக்நகரைத் தாண்டி கொத்தபேட்டிலுள்ள சந்தையாக மாற்றப்படுகிறது.

இது வரலாற்று சிறப்புமிக்க உஸ்மானியா பொது மருத்துவமனை மற்றும் முசி ஆற்றுக்கு அருகில் உள்ளது. ஜுமேரத் பஜார் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சிறப்பாக நடத்தப்படுகிறது, அங்கு ஒவ்வொரு வீட்டு பொருட்களும் விற்கப்படுகின்றன. வீட்டுப் பாத்திரங்கள் விற்கப்படும் மங்கல் பஜார் இதன் துணைச் சந்தையாலும்.

வரலாறு

தொகு

பேகம் பஜாரின் நிலம் ஐதராபாத்தின் இரண்டாம் நிசாம் அலிகானின் மனைவி ஹும்தா பேகம் என்பவரால் வணிகர்களுக்கு வர்த்தகத்திற்காக பரிசாக வழங்கப்பட்டது . ஒரு சந்தையாக வளர்ந்த பிறகு, இந்தச் சந்தை "பேகம் பஜார்" என்று அறியப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_பஜார்&oldid=3145967" இலிருந்து மீள்விக்கப்பட்டது